குஜராத்தின் ஆனந்தில் இன்று (06.07.2025) நடைபெற்ற கூட்டுறவு அமைச்சகத்தின் 4 ஆண்டு நிறைவு விழா, சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா உரையாற்றினார். புதிதாக உருவாக்கப்பட்ட பல மாநில கூட்டுறவு அமைப்பான சர்தார் படேல் கூட்டுறவு பால் கூட்டமைப்பு லிமிடெட்டை திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். கேடாவில் அமுல் சீஸ் ஆலை …
Read More »தில்லியில் செவிலியர் அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்
மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, தில்லி நர்சிங் அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை இன்று (06.07.2025) வழங்கினார். அத்துடன் ஆயுஷ்மான் பாரத் பதிவு வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார், தில்லி தேசிய தலைநகர் பகுதி அரசின் முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா முன்னிலையில் இன்று விக்யான் பவனில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தில்லி அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் …
Read More »காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகளுடன் மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாக, மத்திய காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தலைவர் திரு ராஜேஷ் வர்மா தலைமையில், ஆணையத்தின் உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் முன்னிலையில், ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் 2025 ஜூலை 03 அன்று சண்டிகரில் நடைபெற்றது. இந்த இரண்டு மாநிலங்களிலும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஹரியானா மாநில அரசு பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின்படி, 2025-ம் ஆண்டில் பயிர்க்கழிவுகள் எரிப்பை தடுப்பது, செங்கல் சூளைகளில் பரிந்துரைக்கப்பட்ட பொருள்களை மட்டும் பயன்படுத்துதல், அனல் மின் நிலையங்கள் பரிந்துரைக்கப்பட்ட உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாக செயல்படுதல் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பஞ்சாப் மாநில அரசுப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் இதே அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு, ஆணையத்தால் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களை கடுமையாக அமல்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஆணையம் மீண்டும் வலியுறுத்தியது. இரு மாநில அரசுகளும் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளை ஆணையம் பாராட்டியது. குறிப்பாக குளிர்காலம் நெருங்கி வருவதால், இப்பகுதியில் காற்றின் தரத்தில் ஏற்படும் சூழல்கள் குறித்த மாற்றங்களையும் அது தொடர்பான துல்லியமான புள்ளி விவரங்களையும் அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டது.
Read More »அறிவியல் ஆசிரியர்களுக்கு “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” குறித்த இரண்டு நாள் வழிகாட்டிப் பயிற்சித் திட்டம் – புதுச்சேரியில் இந்திய தரநிர்ணய அமைவனம் நடத்தியது
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை அலுவலகம் அறிவியல் ஆசிரியர்களுக்கு, “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் வழிகாட்டி பயற்சித் திட்டத்தை புதுச்சேரியில் நடத்துகிறது. இது இன்றும் (03.07.2025) நாளையும் (04.07.2025) நடத்தப்படுகிறது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு ஸ்ரீஜித் மோகன், பங்கேற்பாளர்களை வரவேற்று, திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்பது, அடிப்படை அறிவியல் கருத்துக்களை தரப்படுத்தல் நடைமுறைகளுடன் இணைப்பதன் மூலம் மாணவர்களின் அறிவியல் புரிதலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட …
Read More »தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1853 கோடி மதிப்பிலான 4-வழி தேசிய நெடுஞ்சாலை (NH-87) அமைக்கும் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.1,853 கோடி செலவில் கலப்பின ஆண்டுத்தொகை மாதிரியில் அமைக்கப்பட உள்ளது. தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான 2-வழி தேசிய நெடுஞ்சாலை எண் 87, அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை …
Read More »பீகார் சிறப்பு திருத்தம்: 2003 வாக்காளர் பட்டியல்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்
இந்திய தேர்தல் ஆணையம் 4.96 கோடி வாக்காளர்களின் விவரங்களைக் கொண்ட 2003 பீகார் வாக்காளர் பட்டியலை, தேர்தல் ஆணைய இணையதளமான https://voters.eci.gov.in இல் பதிவேற்றம் செய்துள்ளது. 2025 ஜூன் 24 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, 01.01.2003 தேதியை தகுதித் தேதியாக கொண்ட வாக்காளர் பட்டியலை, அனைத்து வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு அச்சிடப்பட்ட நகலிலும், அவர்களின் இணையதளத்தில் ஆன்லைனிலும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பதிவு அதிகாரி ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்கள் கணக்கெடுப்புப் படிவத்தைச் சமர்ப்பிப்போர் அதை ஆவணச் …
Read More »அவசரநிலையின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையிலும், ஜனநாயகத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் ‘அரசியலமைப்பு படுகொலை தினத்தை’ கலாச்சார அமைச்சகம் மற்றும் தில்லி அரசு கடைப்பிடிக்கிறது
இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக நினைவுகூரப்படும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டு 50-ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகம் தில்லி அரசுடன் இணைந்து ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அஸ்வினி …
Read More »கோவா ஷிப்யார்ட் நிறுவனம் தயாரிக்கும் எட்டு விரைவு ரோந்து கப்பல்களில் முதலாவது கப்பலான ஆதம்யா கடலோரக் காவல் படையுடன் இணைக்கப்பட்டது
கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் எட்டு விரைவு ரோந்து கப்பல்கள் கட்டும் திட்டத்தின் கீழ் முதலாவது விரைவு ரோந்து கப்பலான ‘ஆதம்யா’ இன்று (ஜூன் 26ம் தேதி) கோவாவில் இந்திய கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்டது. விரைவு ரோந்து கப்பல்கள் என்பவை கடலோரக் காவல் படையில் உள்ள கப்பல்களில் பிட்ச் ப்ரொப்பல்லர்கள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கியர்பாக்ஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது வகை கப்பல்கள் ஆகும். இதன் சிறந்த சூழற்சித்திறன், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை ஆகியவை …
Read More »அரசு இணைய சந்தையில் கொள்முதல் குறித்த பயிலரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று சென்னையில் நடத்தியது
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அரசு இணைய சந்தையில் (GeM) எவ்வாறு கொள்முதல் செய்வது என்பது குறித்த பயிலரங்கை தகவல் மாளிகையில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று (25.06.2025) நடத்தியது. இந்தப் பயிலரங்கில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம், டிடி தமிழ், ஆகாஷ்வாணி, வெளியீட்டுப் பிரிவு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு மத்திய அரசின் கொள்முதல் தளமான https://gem.gov.in/ ஜெம்(GeM)-ல் …
Read More »உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை தாங்கினார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, இன்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் திரு. புஷ்கர் சிங் தாமி, மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் திரு. விஷ்ணு தியோ சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். உறுப்பு மாநிலங்களின் மூத்த அமைச்சர்கள், மத்திய உள்துறை …
Read More »
Matribhumi Samachar Tamil