Saturday, January 24 2026 | 12:31:59 PM
Breaking News

Sports

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் 250க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் உடல் பருமனுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றனர்

மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான  பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை முன்னோக்கி எடுத்து, ஞாயிற்றுக்கிழமை  சைக்கிள் பேரணியை மேற்கொண்டு வருகிறார்.  மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் நடந்த இந்த வார ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் நிகழ்வில் அமைச்சருடன் எண்ணற்ற மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பங்கேற்றனர். பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற ரூபினா பிரான்சிஸ் மற்றும் தில்லி பாரதி கல்லூரி மற்றும் சோனியா விஹார் வாட்டர் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த பல இளைஞர்களும் கலந்து கொண்டனர். “உடல் பருமன் என்பது இளைஞர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை மற்றும் பெரிய சவாலாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் எட்டு பேரில் ஒருவர் பருமனானவர் என்று கூறுகிறது. எனவே, இந்த நாட்களில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மிகவும் முக்கியமானது. டேராடூனில் நடைபெற்ற 38வது தேசிய விளையாட்டுப் போட்டியில்  பிரதமர் திரு நரேந்திர மோடி இதைப் பற்றி குறிப்பிட்டார். நாம் எண்ணெய் நுகர்வைக் குறைக்க வேண்டும் மற்றும் நமது உணவு மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். உடல் பருமனுக்கு எதிரான இந்த போராட்டத்தில் சைக்கிள் ஓட்டுதல் தொடர்ந்து நன்மை பயக்கும். ஃபிட் இந்தியா மூலம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றிபெற முடியும்,” என்று இந்த நிகழ்வில் டாக்டர் மாண்டவியா குறிப்பிட்டார். ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் நிகழ்வு உடல் பருமனுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை நோக்கி நகர்வதில் ஒரு சிறந்த படியாகும் என்பதை ரூபினா பிரான்சிஸ் வெளிப்படுத்தினார். ரைடர்ஸ் குழுவின் ஒரு அங்கமாக இருந்த நீரிழிவு மற்றும் உடல் பருமன் நிபுணர் டாக்டர் திரிபுவன் குலாட்டி, பல உடல்நல அபாயங்கள் உடல் பருமன் பிரச்சனைகளை பட்டியலிட்டார். மூத்த குழந்தை மருத்துவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) உறுப்பினருமான டாக்டர் பியூஷ் ஜெயின், உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதில் சைக்கிள் ஓட்டுவது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்று குறிப்பிட்டார். டாக்டர் மாண்டவியா கடந்த ஆண்டு டிசம்பர் 17 அன்று இதே இடத்தில் இந்த தனித்துவமான சைக்கிள் ஓட்டுதலைத் தொடங்கினார், அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் இந்தியா முழுவதும் பல சைக்கிள் ஓட்டுதல்கள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான ரைடர்ஸ் பங்கேற்புடன் 3500க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

Read More »

2025 ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 2025 ஐசிசி  டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “நமது பெண்கள் சக்தியைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்! ICC U19 மகளிர் T20 உலகக் கோப்பை 2025-ல் கோப்பையை வென்றுள்ள  இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி நமது சிறந்த குழுப்பணி மற்றும்  உறுதியின் பயனாகும்.  இது வரவிருக்கும் பல விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். குழுவின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’’.   भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें   ऑडियो बुक : भारत 1885 …

Read More »

ரோட் டு கேம் ஜாம் மூலம் இந்தியாவின் துடிப்பான கேம் டெவலப்பர் சமூகத்தின் ஒரு பகுதியாக இருங்கள் & வேவ்ஸின் இந்தியாவின் பிரகாசமான கேம் டெவலப்பர் குழுவாக மாறுங்கள்

இந்திய கேம் டெவலப்பர் சங்கம் , அதன் முதன்மை நிகழ்வான இந்தியா கேம் டெவலப்பர் மாநாடு மூலம், கேஜென் உடன் இணைந்து “ரோட் டூ  கேம் ஜாம்”-க்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசின் உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் ஒரு நடவடிக்கையான இந்தியாவில் படைப்போம் சவால் சீசன் 1 இன் கீழ் உள்ள சவால்களில் இந்த முயற்சியும் ஒன்றாகும். அதிநவீன கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலைக் காண்பிப்பதன் மூலம் கேமிங் துறையின் எதிர்காலத்தை …

Read More »

இந்திய விளையாட்டு ஆணையம், 2025-26-ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வை சென்னையில் நடத்துகிறது

மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டிற்கு கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் திறமையான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது. 12 முதல் 18 வயது பிரிவில்  தடகள வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு 01.02.2025 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. 2010-ம் ஆண்டுக்கும் 2013-ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களுக்கான ஆடவர் கால்பந்து பிரிவு …

Read More »

சென்னை ஐஐடி, ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’யின் கீழ் ஐந்து தேசியத் தடகள வீரர்-வீராங்கனைகளைச் சேர்த்துள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’ பிரிவின் கீழ் தேசிய அளவில் சாதனை படைத்த ஐந்து தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு இளங்கலைப் பட்டப்படிப்பு பாடத்திட்டத்திலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு இடம் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும். நாட்டிலேயே முதன்முறையாக  விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையை தனது இளங்கலைப் …

Read More »

திருச்சியில் அஞ்சல்துறை சார்பாக ஃபிட் இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

  பொது மக்களுக்கு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அஞ்சல்துறையின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையத்தின், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு நடைபயணம், உடற்பயிற்சி நிகழ்வு ஆகியவை நடைபெற்றன.  இதனை அஞ்சல்துறையின் மத்திய மண்டல தலைவர் திருமதி டி நிர்மலா தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். உடற்பயிற்சி நன்மை குறித்து திருச்சி மாவட்ட அலுவலர் திருமதி ஓ ஞானசுகந்தி உரையாற்றினார்.   விழிப்புணர்வு நடைபயணத்தின் …

Read More »

ஃபிட் இந்தியா ஞாயிறு சைக்கிளிங்: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது

குருகிராமில் 500 க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுபவர்களுடன் பிரபல நடிகை குல் பனாக்கும் அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீட்டி பூராவும்  ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ இயக்கத்தில் பங்கேற்றனர். கடந்த மாதம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியாவால் தொடங்கப்பட்ட இந்த  நாடு தழுவிய வாராந்திர சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வின் கருப்பொருளாக இன்று சாலை பாதுகாப்பு அமைந்தது. “பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கத்துடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். இது இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒரு அருமையான முயற்சி. போட்டி அரங்கங்களில் அதிக பதக்கங்களை வெல்ல இந்தியாவை வழிநடத்தும் உடற்பயிற்சி கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி ஃபிட் இந்தியா இயக்கம் என்று நான் நினைக்கிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் எளிதான முறையில் சைக்கிள் ஓட்டுதலுக்கு நேரம் ஒதுக்கலாம்” என்று குல் பனாக் கூறினார். பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் 80 க்கும் மேற்பட்டோர் கடும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் 11 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டும் நிகழ்வை நிறைவு செய்தனர். காந்திநகர் பிராந்திய மையத்தில், இந்தியா போஸ்டைச் சேர்ந்த 50 ரைடர்கள் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர். கொல்கத்தாவில் பீகார் ரெஜிமெண்டின் 15 வது பட்டாலியனைச் சேர்ந்த 50 பேர் சைக்கிள் ஓட்டினர். அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயா மாநிலங்களிலும் ‘ஃபிட் இந்தியா சண்டே ஆன் சைக்கிள்’ நடத்தப்பட்டது. இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு (CFI), மை பாரத் தளம் ஆகியவற்றுடன் இணைந்து இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகம் (MYAS) ஃபிட் இந்தியா சண்டே சைக்கிளிங் (Fit India Sunday on Cycle) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.   भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की …

Read More »

ஜவஹர் நவோதயா வித்யாலயா 25-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-2024-ன் பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறது

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கிடையிலான 25-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-24-ன் பரிசளிப்பு விழா நாளை (2025 ஜனவரி 16 வியாழக்கிழமை) புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அரங்கில் நடைபெற உள்ளது. சட்டம், நீதித்துறை (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்  இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், விழாவிற்குத் தலைமை தாங்கி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு பரிசுகளை வழங்குவார். இந்நிகழ்ச்சியில், ஜவஹர் …

Read More »

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா போர்பந்தரில் சைக்கிள் பேரணி மேற்கொண்டார்

மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர், டாக்டர் மன்சுக் மாண்டவியா, இன்று குஜராத்தின் போர்பந்தரில் உள்ள உப்லேடா தொகுதியில், சைக்கிள் ஓட்டுதல் நிகழ்விற்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க, ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ முன்முயற்சியை வழிநடத்தினார்.  150-க்கும் மேற்பட்டோர் டாக்டர் மாண்டவியாவுடன் முனிசிபல் ஆர்ட்ஸ் & காமர்ஸ் கல்லூரியில் இருந்து உப்லேட்டாவில் உள்ள தாலுகா பள்ளி கிரிக்கெட் மைதானம் வரை 5 …

Read More »

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2024 -ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்தது

2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. 2025 ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவுள்ள விழாவில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குவார். குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், உரிய ஆய்வுக்குப் பிறகும், கீழ்க்கண்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது: மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது 2024 வ. எண் விளையாட்டு …

Read More »