தில்லியின் ரோஹிணியில் சுமார் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.08.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், விரைவுச் சாலையின் பெயர் “துவாரகா” என்றும், நிகழ்ச்சி “ரோஹிணி”யில் நடைபெறுவதாகவும் கூறி, அந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜென்மாஷ்டமிப் பண்டிகையின் உணர்வை எடுத்துரைத்த அவர், துவாரகாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது தற்செயல் நிகழ்வாகும் என்றும் குறிப்பிட்டார். முழு …
Read More »தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 38 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள்: மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் சென்னையில் பேட்டி
தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, நாளை (18.08.2025) முதல் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 38 ரயில்கள், கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று (17 ஆகஸ்ட் 2025) செய்தியாளர்களிடையே பேசிய அவர், விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்ல …
Read More »உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் குறித்த நூல் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (17.08.2025) பிரபல நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் டாக்டர் அம்ப்ரிஷ் மிதல், திரு சிவம் விஜ் ஆகியோரால் எழுதப்பட்ட “எடையை குறைக்கும் புரட்சி – எடை குறைப்புக்கான மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது” என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றினார். மருத்துவப் பேராசிரியரும், புகழ்பெற்ற நீரிழிவு மருத்துவரும், பல நூல்களை எழுதியவருமான மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவில் …
Read More »தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் ஜூலை மாதத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கு 100 சதவீத தீர்வு காணப்பட்டுள்ளது
நாட்டில் நுகர்வோர் குறை தீர்க்கும் பணியில் குறிப்பிடத்தக்க சாதனையாக, பத்து மாநில நுகர்வோர் ஆணயங்கள், தேசிய நுகர்வோர் தகராறு தீர்வுக்கான ஆணையத்துடன் (NCDRC) இணைந்து, 2025 ஜூலை மாதத்தில் 100 சதவீதத்துக்கும் அதிகமான தீர்வு விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் தரவுகளின்படி, நுகர்வோர் ஆணயங்கள், தேசிய நுகர்வோர் தகராறு தீர்வுக்கான ஆணையம், 122 சதவீத தீர்வு விகிதத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு 277 சதவீதத்தையும், ராஜஸ்தான் …
Read More »ஐஐடி மாணவர்கள் அதிக அளவில் புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று (17.08.2025) தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்துக்கு (ஐஐடி) சென்றார். அங்கு அவர் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார். உயர்கல்வித் துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, தில்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் திரு ரங்கன் பானர்ஜி ஆகியோரும் மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர், இந்த ஆண்டு சுதந்திர …
Read More »நாடு முழுவதும் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க மை பாரத் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் நலத்துறையின்கீழ் செயல்படும் மை பாரத் அமைப்பு அறிவுப்பகிர்தல், திறன் கட்டமைப்பு, இளைஞர் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் இணைந்து செயலாற்றுவதற்காக அல்ட்டிமேட் லீடர்ஷிப் பவுண்டேஷன் பள்ளியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நாடு முழுவதும் 18-29 வயதுப் பிரிவினரில் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை செயலாக்க உதவும் வகையில் இந்தக் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது. …
Read More »இல்லந்தோறும் மூவண்ணக்கொடி: புதுவைப் பல்கலைக்கழகத்தில் தேசப் பெருமிதத்துடன் மனிதச் சங்கிலி
சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மக்களிடையே தேசபக்தி உணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுவைப் பல்கலைக்கழகம் 2025 ஆகஸ்ட் 13 அன்று தேசப் பெருமிதத்துடன் மனிதச் சங்கிலி நிகழ்வை நடத்தியது. மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கையில் தேசியக் கொடி ஏந்தி, ஒற்றுமை, நேர்மை மற்றும் மக்களின் ஒட்டுமொத்த வலிமையை குறிக்கும் …
Read More »தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது
புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் நலன் அலுவலகம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவை இணைந்து, “வளர்ச்சியடைந்த பாரத இளைஞர்கள் இணைப்பு” மற்றும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கம் 2.0-இன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு முதலாவது மரக்கன்றை நட்டுத் தொடங்கிவைத்தார். மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், கொய்யா, நெல்லிக்காய், நீலச்செடி போன்ற …
Read More »ஐடிஐ-களின் தரநிலையை உயர்த்துவதற்கான தேசிய திட்டம் குறித்த பயிலரங்கு ஒடிசாவில் நடைபெற்றது
தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை (ஐடிஐகளை) தரம் உயர்த்துதல் மற்றும் நவீனப்படுத்துதலை தேசிய அளவில் ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் ஒடிசா அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வித்துறை ஒத்துழைப்புடன் நேற்று புவனேஸ்வரில் ஐடிஐ தரநில உயர்த்தலுக்கான தேசியத்திட்டம் குறித்த ஆலோசனைப் பயிலரங்கை நடத்தியது. இந்தப் பயிலரங்கில் ஐடிஐ தரநிலை உயர்த்தலுக்கான தேசியத்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை, கட்டமைப்பு, செயல்படுத்தலுக்கான சட்டகவரைவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதுடன் தொழிற்சாலை, …
Read More »யானைகள் பாதுகாப்பிற்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது – மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங்
உலக யானைகள் தினம் 2025 கொண்டாட்டங்களை தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் யானைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு, தொலை உணர்வு மற்றும் புவிசார் வரைபடம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பாரம்பரிய …
Read More »
Matribhumi Samachar Tamil