Saturday, September 26 2026 | 07:58:51 PM
Breaking News

ஒசாமு சுசூகி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

உலக வாகனத் தொழில்துறையில் புகழ்பெற்ற  ஒசாமு சுசுகி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஒசாமு சுசூகியின் தொலைநோக்குப் பார்வை உலகளாவிய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ், சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகளாவிய அதிகார மையமாக உருவெடுத்தது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு புதுமை, தொழில் விரிவாக்கத்தை மேற்கொண்டது. இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் …

Read More »

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட …

Read More »

ஆயுதப்படை கொடி நாள் சிஎஸ்ஆர் மாநாடு பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் புதுதில்லியில் நடைபெறுகிறது

ஆயுதப்படை கொடி நாள், பெருநிறுவன சமூக பொறுப்புடைமை மாநாட்டின் ஆறாவது பதிப்பு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் 2024-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி  புதுதில்லியில் நடைபெறுகிறது. முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ் கேந்திரிய சைனிக் வாரியம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர்கள், விதவைகள், அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்களின் மறுவாழ்வு, மறுகுடியமர்வு மற்றும் நலன்களுக்காக  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்கவும், பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடைமைகளளின்கீழ் உதவிக்கான ஆதரவு திரட்டுவதும் இதன் நோக்கமாகும். ஆயுதப்படை கொடி …

Read More »

பாதுகாப்பு அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியாவை வலுவான, பாதுகாப்பான, தற்சார்பான, வளமான தேசமாக மாற்ற பாதுகாப்பு அமைச்சகம்  பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக திரு ராஜ்நாத் சிங் பதவியேற்றார். அவரது தலைமையின் கீழ், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான சில முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் சில பகுதிகளில் யதார்த்த நிலையை மீட்டெடுக்க ஒத்த கருத்தை …

Read More »

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணிகள் தேர்வு 2022 மற்றும் 2023 முடிவுகள் பற்றி தவறான கூற்றுகளை விளம்பரப்படுத்தியதற்காக வஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட், ஸ்டடி ஐக்யூ ஐஏஎஸ் ஆகியவற்றுக்கு தலா ரூ. 7 லட்சமும், எட்ஜ் ஐஏஎஸ்-க்கு ரூ .1 லட்சமும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய குடிமைப்பணிகள் தேர்வு (யுபிஎஸ்சி சிஎஸ்இ) 2022 மற்றும் 2023 முடிவுகள் பற்றி தவறான கூற்றுகளை  விளம்பரப்படுத்தியதற்காக வாஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட், ஸ்டடிஐக்யூ ஐஏஎஸ் ஆகியவற்றுக்கு  தலா ரூ. 7 லட்சமும், எட்ஜ் ஐஏஎஸ் க்கு ரூ .1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆணையர் திருமதி நிதி கரே, ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ), நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிமீறல்களுக்கு உத்தரவுகளையும் அபராதங்களையும் விதித்தது. வஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட் தனது விளம்பரத்தில் …

Read More »

நுகர்வோர் விவகாரங்கள் துறையின் 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தனது விலை கண்காணிப்பு பிரிவு மூலம் 38 உணவுப் பொருட்களின் விலையை கண்காணித்து வருகிறது .பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு போன்றவற்றின்  சில்லறை விற்பனை மூலம்  நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அன்றாட விலைகளை  கண்காணித்து பொருட்களின் விலையை நிலையானதாக  இருக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 22 அத்தியாவசியப் பொருட்களின்  அன்றாட சில்லறை மற்றும் மொத்த …

Read More »

2024 ஆம் ஆண்டில் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள்

2024-ம் ஆண்டில் வர்த்தகத் துறையின் முக்கிய சாதனைகள் பின்வருமாறு: சுதந்திரமான வர்த்தக உடன்படிக்கை இந்தியாவும், ஐரோப்பிய வர்த்தக சங்கமும்,  வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தில்  2024 ஆண்டு மார்ச்  10-ம் தேதி கையெழுத்திட்டன.  இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடுகள் செய்யப்படும்.  இதன் மூலம் 1 மில்லியன் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் “இந்தியாவில் உற்பத்தி …

Read More »

வேளாண்மை,தோட்டக்கலை சார்ந்த பல்வேறு திட்டங்கள் மூலம் பாரம்பரிய ரகங்கள் ஊக்குவிப்பு

புதுதில்லியில் நடைபெற்ற “பருவநிலை-தாங்குதிறன் வேளாண் நடவடிக்கைகளுக்கான பாரம்பரிய பயிர் ரகங்கள் மூலம் மானாவாரி பகுதிகளில் வேளாண்-பல்லுயிர் பெருக்கத்திற்கு புத்துயிரூட்டுதல்” என்ற பன்முகப் பயனாளர் மாநாட்டில் உரையாற்றிய மத்திய வேளாண் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, பாரம்பரிய விவசாயமும் தோட்டக்கலை பயிர் வகைகளும் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வேளாண், தோட்டக்கலைப் பயிர்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை  மத்திய அரசு  செயல்படுத்தி வருகிறது. தேசிய ஊட்டச்சத்து நிதியம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், விதை மேம்பாட்டுத் திட்டங்கள், தேசிய …

Read More »

உலகின் மிகப்பெரிய தேர்தலின் விரிவான தரவுத் தொகுப்புகளின் வெளியீடு

ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான 42 புள்ளிவிவர அறிக்கைகளையும், 2024-ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலின் 14 புள்ளிவிவர அறிக்கைகளையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இந்தியாவின் தேர்தல் நடைமுறையின் அடித்தளமாக விளங்கும் மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.  அதிகபட்ச தகவல்களை வெளிப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை, தேர்தல் தொடர்பான தரவுகளை அணுகுதல் ஆகிய அம்சங்கள் அடங்கிய ஆணையத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் …

Read More »

வீர பாலகர் தினத்தையொட்டி சாஹிப்ஜாத்களின் இணையற்ற வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்

வீர பாலகர் தினத்தையொட்டி சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நினைவு கூர்ந்தார். அவர்களின் தியாகம் வீரம், ஒருவரின் மதிப்புகள் மீதான உறுதிப்பாட்டிற்கு பிரகாசமான எடுத்துக்காட்டாகும் என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். மாதா குஜ்ரி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஆகியோரின் துணிச்சலையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இன்று, வீர பாலகர் தினத்தையொட்டி, சாஹிப்ஜாதேக்களின் …

Read More »