Friday, July 24 2026 | 01:01:32 AM
Breaking News

திருவையாறில் 178-வது தியாகராஜர் ஆராதனை விழா தொடங்கியது

திருவையாறில் நடைபெற்ற 178வது தியாகராஜர் ஆராதனை விழாவின் தொடக்க நாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகராஜ ஸ்வாமிகள் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் முக்கிய பிரமுகர்களின் படங்களைக் கொண்ட “எந்தரோ மகானுபாவுலு” என்ற தலைப்பில் ஒரு அஞ்சல்தலை தொகுப்பை திருச்சிராப்பள்ளி மத்திய அஞ்சல் மண்டல தலைவர் திருமதி தி. நிர்மலா தேவி அவர்களால் வெளியிடப்பட. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஸ்ரீ தியாகரபிரம்ம மஹோத்சவ சபையின் தலைவர் திரு. ஜி.கே. வாசன் அவர்கள் …

Read More »

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் (சி.ஆர்.சி) நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா – மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் நாளை பங்கேற்கிறார்

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் ஜெய்ப்பூரில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாடு, மறுவாழ்வு அதிகாரமளித்தலுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் (சிஆர்சி) நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் அதன் தற்காலிக வளாகத்தின் திறப்பு விழாவும் நாளை (2025 ஜனவரி 15) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அன்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் கலந்து கொள்கிறார். …

Read More »

பிரதமரின் கிராமப் புற வீட்டுவசதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

2016 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படும் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் “அனைவருக்கும் வீடு” என்ற இலக்கை அடைய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. மார்ச் 2029-க்குள் 4.95 கோடி வீடுகளைக் கட்டுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய சிறப்பம்சங்கள்: *பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் புதிய கட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 2024-25ம் நிதியாண்டு முதல் 2028-29ம் நிதியாண்டு வரை ரூ. …

Read More »

கட்டடம், இதர கட்டுமான தொழிலாளர்கள் நலன் தொடர்பான 16-வது கண்காணிப்புக் குழு கூட்டம்: தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது

கட்டடம், பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான (BoCW) நலத்திட்டங்கள் தொடர்பான 16-வது கண்காணிப்புக் குழுக் கூட்டம்’ தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நேற்று (13 ஜனவரி 2025) நேரடியாகவும் காணொலி முறையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை தலைமை இயக்குநர், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர்கள் / தொழிலாளர் நல …

Read More »

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடைகள் தொடர்பான முக்கிய முன்முயற்சிகள்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நேற்று (2025 ஜனவரி 13 -திங்கட்கிழமை) ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடை துறையில் தொடர்ச்சியான பயனுள்ள முக்கிய முன்முயற்சிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கால்நடை உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பிராந்தியத்தில் முக்கியமான ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. …

Read More »

மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி, 11 மொழிகளில் மகா கும்பேமேளா தொடர்பான தகவல், சேவைகளை வழங்குகிறது

மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26, 2025 வரை  பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பன்மொழி அணுகலுக்காக பாஷினியை (Bhashini) ஒருங்கிணைத்து, தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளது. ‘டிஜிட்டல் லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் சொல்யூஷன்’ என்ற அம்சத்தின் மூலம் உலகின் மிகப்பெரிய ஆன்மீக கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பாஷினியின் மொழிபெயர்ப்பு சூழல் அமைப்பு உதவுகிறது பன்மொழி ஆதரவு: சொந்த மொழிகளில் குரலைப் பயன்படுத்தி இழந்த பொருட்கள் தொடர்பாக பதிவு …

Read More »

150 ஆண்டுகள் உயர் தனிச் சிறப்பைக் கொண்டாடும் இந்திய வானிலை ஆய்வு மையம்

புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி),தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 150 ஆண்டுகளைக் கொண்டாடி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 1875-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஐஎம்டி, முக்கியமான வானிலை, பருவநிலை சேவைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பேரிடர் மேலாண்மை, விவசாயம், விமானப் போக்குவரத்து, பொது பாதுகாப்பு ஆகியவற்றில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் தேசிய வானிலை சேவை என்ற வகையில், வானிலை ஆய்வு, நில அதிர்வு அதனுடன் தொடர்புடைய …

Read More »

9-வது முன்னாள் படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன – ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்பு

ஒன்பதாவது முன்னாள் படை வீரர்கள் தினம் இன்று (2025 ஜனவரி 14) நாடு முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஜம்மு, மும்பை, புது தில்லி, புனே, நாக்பூர், விசாகப்பட்டினம், பெங்களூரு, பரேலி, ஜெய்ப்பூர், சிலிகுரி உள்ளிட்ட பல இடங்களில் முன்னாள் ராணுவ வீரர்களின் தன்னலமற்ற கடமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஜம்முவில் உள்ள அக்னூரில் உள்ள தாண்டா பீரங்கிப் படையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1,000 …

Read More »

மகா கும்பமேளா 2025-ல் மகர சங்கராந்தி

குளிர்காலத்தின் முடிவையும் வெப்பமான நாட்களின் தொடக்கத்தையும் குறிக்கும் பண்டிகையான மகர சங்கராந்தியின் விடியல் நெருங்கியபோது, பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கத்தின் கரைகள் தெய்வீக மகிமையின் காட்சியாக மாறியது. மகா கும்பமேளா 2025-ன் முதல் அமிர்த ஸ்னானம் (புனித நீராடல்) மகர சங்கராந்தியில் தொடங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவற்றின் புனித சங்கமத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்களை புனிதர்களையும் அது ஈர்த்தது. அவர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் புனித நீராடினர். முதல் அமிர்தக் குளியலின் போது 3.5 கோடிக்கும் அதிகமான …

Read More »

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தேசிய மஞ்சள் வாரியத்தை தொடங்கி வைத்தார் – நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் நிறுவப்பட்டுள்ளது

தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். திரு பியூஷ் கோயல் அதன் முதல் தலைவராக திரு பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். வாரியத்தின் தலைமையகம் நிஜாமாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய மஞ்சள் வாரியத்தின் தொடக்கம் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைக் கொண்டாட்டங்களின் புனித நாளில் அமைந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் தேசிய மஞ்சள் வாரியத்தின் …

Read More »