சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த முயற்சி பயணிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள், விலங்குகளின் பராமரிப்பையும் நிர்வாகத்தையும் இது உறுதி செய்கிறது. 0.21 முதல் 2.29 ஹெக்டேர் வரையிலான தங்குமிடங்களுடன், கால்நடைகளுக்கு பாதுகாப்பான இடங்கள் உருவாக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை என்.எச்-334-பி-ன் உத்தரப்பிரதேசம், ஹரியானா எல்லை முதல் ரோஹ்னா பிரிவு உட்பட பல்வேறு …
Read More »உத்தரப்பிரதேசம், ஆந்திராவுக்கு ஊரக வளர்ச்சிக்கான 15-வது நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 2-வது தவணையாக ரூ.1598.80 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியுள்ள அனைத்து 75 மாவட்ட ஊராட்சிகள், தகுதியுள்ள 826 வட்டார பஞ்சாயத்துகள், தகுதியுள்ள அனைத்து 57691 கிராம பஞ்சாயத்துக்களுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்டு உள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மானியமாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமப்புற …
Read More »தமிழகத்தின் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி ஏலம் தொடர்பான விளக்கம்
மதுரை மாவட்டம், மேலூர் – தெற்குத்தெரு – முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணையை (ஜி.எஸ்.ஐ) 2021 செப்டம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தது. அந்த நேரத்தில் டங்ஸ்டன் போன்ற முக்கியமான கனிமங்கள் உட்பட அனைத்து முக்கிய கனிமங்களையும் ஏலம் விட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. பின்னர், சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு – ஒழுங்குமுறை) சட்டம், 1957 என்பது 17.08.2023 முதல் சுரங்கங்கள் – கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023 என்பதன் மூலம் திருத்தப்பட்டது. திருத்தச் சட்டமானது மற்ற அம்சங்களோடு சட்டத்தில் …
Read More »தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில்,தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி )தனது மருத்துவ சேவைகள், பிற விநியோக வழிமுறைகள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான முன்னேற்றங்களை மத்திய அமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். தன்வந்தரி மருத்துவமனை தகவல் அமைப்பு இப்போது இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. …
Read More »கழிவிலிருந்து செல்வம் வரை
“பாராட்டுக்குரியது! திறமையான மேலாண்மை, செயலூக்கமான நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த முயற்சியான சிறப்பு இயக்கம் 4.0, சிறந்த முடிவுகளை அடைந்துள்ளது. கூட்டு முயற்சிகள் எவ்வாறு நிலையான முடிவுகளுக்கு வழிவகுக்கும், தூய்மை, பொருளாதார விவேகம் இரண்டையும் ஊக்குவிக்கும் என்பதை இது காட்டுகிறது.” -பிரதமர் நரேந்திர மோடி தூய்மை, திறன் வாய்ந்த கழிவு மேலாண்மை ஆகியவை நல்ல நிர்வாகத்தின் அடித்தளங்களாகும். இந்த நடைமுறைகள் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்வது மட்டுமல்லாமல், நிர்வாக செயல்திறன், மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை ஆகியவற்றையும் …
Read More »உத்தராகண்டில் புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் – மத்திய உள்ளதுறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு
உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தப்படுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் அமலாக்கம் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய உள்துறைச் செயலாளர், உத்தராகண்ட் தலைமைச் செயலாளர், உத்தரகண்ட் காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். …
Read More »தேசிய விஞ்ஞான நாடக விழா 2024 டிசம்பர் 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது
தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் கவுன்சிலின் (என்.சி.எஸ்.எம்) முதன்மை நிகழ்வுகளில் ஒன்று, தேசிய அறிவியல் நாடக விழாவாகும். இந்த ஆண்டு இந்த விழா தில்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் 2024 டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி முன்னதாக இந்தியாவின் அனைத்து 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 40,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று படைப்பு அறிவியல் நாடகங்களை கல்வி வடிவத்தில் நிகழ்த்தினர். இதனைத் …
Read More »10,000-க்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்களை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, புதுதில்லி, பூசாவில் உள்ள ஐசிஏஆர் மாநாட்டு மையத்தில் 2024 டிசம்பர் 25, அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் புதிதாக நிறுவப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட பன்னோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு சங்கங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவுச் சான்றிதழ்கள், ரூபே கிசான் கடன் அட்டைகள், மைக்ரோ ஏடிஎம்களை திரு அமித் ஷா வழங்குவார். இந்த நிதிக் கருவிகள் பஞ்சாயத்துகள் அளவில் கடன் சேவைகளை எளிதாக அணுகுவதற்கும் நிதி …
Read More »நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முக்கிய முன்முயற்சிகள் – மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினக் கொண்டாட்டங்களுக்கு இன்று தலைமை வகித்து பல்வேறு நுகர்வோர் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய திரு பிரல்ஹாத் ஜோஷி, குறைகள் குறித்த காணொலி விசாரணைகள் நுகர்வோருக்கு நீதிக்கான டிஜிட்டல் அணுகலை வழங்குகின்றன என்று கூறினார். நுகர்வோர் குறைகளை நிவர்த்தி செய்வதை டிஜிட்டல் மயமாக்குவதைக் குறிக்கும் வகையில் 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இ-தாகில் …
Read More »முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் கென்-பேட்வா நதிகள் இணைப்புக்கான தேசிய திட்டத்திற்கு பிரதமர் டிசம்பர் 25 அன்று அடிக்கல் நாட்டுகிறார்
முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். மதியம் 12:30 மணியளவில், கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கியும் வைக்கிறார். தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிகளை இணைக்கும் தேசியத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் …
Read More »
Matribhumi Samachar Tamil