Wednesday, April 01 2026 | 05:53:58 PM
Breaking News

இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2023-ஐ, டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் நாளை வெளியிடுவார்

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், துறையின் செயலாளர் திருமதி லீனா நந்தன் முன்னிலையில் இந்திய வனங்களின் நிலை அறிக்கை  2023-ஐ நாளை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஐசிஎஃப்ஆர்இ, எஃப்ஆர்ஐ, ஐஆர்ஓ, பிஎஸ்ஐ போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 1987 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வனநில அளவை நிறுவனத்தால் “இந்திய வனங்களின் நிலை அறிக்கை”  வெளியிடப்படுகிறது. வன அடர்த்தி வரைபடம், வனநில அளவை நிறுவனத்தின் தேசிய வனப்பட்டியல் ஆகிய இரண்டு முக்கிய செயல்பாடுகளின் அடிப்படையில் நாட்டின் வனம் மற்றும் மர வளங்கள் குறித்த முக்கிய தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது.  இந்த அறிக்கைத் தொடரில் இது 18-வது அறிக்கையாகும்.

Read More »

முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் வேலை வாய்ப்புகள்

முன்னாள் படைவீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் கீழ் போதுமான ஓய்வூதியத்தை அரசு வழங்கி வருகிறது. ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் துறை, மத்திய துணை ராணுவப்படை போன்ற துறைகளில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு இ.எஸ்.எம் வேலைவாய்ப்பின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு மறுகுடியமர்வு / …

Read More »

தற்சார்பு இந்தியா: இந்திய ராணுவத்திற்கான ஆயுத கொள்முதலுக்காக எல் அண்ட் டி நிறுவனத்துடன் 7,629 கோடி ரூபாய் ஒப்பந்தம்

லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் 155 மிமீ / 52 காலிபர் கே 9 வஜ்ரா-டி ரக பீரங்கிகள் கொள்முதல் செய்வதற்காக 7,628.70 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த …

Read More »

உணவு மற்றும் பொது விநியோகத்துறை

2024-ம் ஆண்டில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:- ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நாட்டில் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார இடையூறுகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனை கருத்தில் கொண்டு பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தின்(கரீப் கல்யாண் அன்ன யோஜனா)கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையிலான 7 கட்டங்களில் 1118 லட்சம் மெட்ரிக்டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டது. …

Read More »

அஞ்சல் துறை: 2024 ஆம் ஆண்டின் செயல்பாடுகள்

அஞ்சல் துறை இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க சாதனைகள், முன்னேற்றங்கள் மற்றும் மைல்கற்களை  படைத்துள்ளது. இவை சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்குமான அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. 2024-ம் ஆண்டிற்கான முக்கிய முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்கள் பற்றிய  சிறு கண்ணோட்டம்: அஞ்சல் நிலைய சட்டம்  2023 என்ற புதிய அஞ்சல் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இது டிசம்பர் 24, 2023 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்த சட்டம் ஜூன் 18, 2024 அன்று நடைமுறைக்கு வந்தது, இது 1898-ம் ஆண்டின் இந்திய  …

Read More »

இந்திய ரயில்வேயின் பாதுகாப்பிற்கு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு – இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை

ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகளுக்காக கூடுதல் தொலைத்தொடர்பு  அலைக்கற்றைகளை  ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறைக்கு  இந்திய ரயில்வே 26.07.2023 அன்று கடிதம் எழுதியுள்ளது.   இந்தக் கடிதத்தில், தனது பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக கூடுதல் அலைக்கற்றையை  ஒதுக்கீடு செய்யுமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது.  இதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை ஆய்வு செய்து, …

Read More »

2024 ஆம் ஆண்டில் தொழிலக மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் செயல்பாடுகள்

உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் (பிஎல்ஐ)  திட்டத்தின் கீழ் சாதனைகளை அடைவது முதல் ஸ்டார்ட்அப் சூழல் அமைப்புகளை ஊக்குவித்தல், அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்தல் வரை என  பல செயல்பாடுகள் மூலம் இந்தியாவை  தற்சார்பானதாகவும் மற்றும் உலக அளவில் சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் வகையிலும்  உருவாக்குவதில் தொழிலக மற்றும்  உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை  முக்கிய பங்கு வகித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இத்துறையின் சில முக்கிய முயற்சிகள் மற்றும் சாதனைகள்: …

Read More »

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு, நிறுவனங்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான ஐரோப்பிய ஆணையர் திரு மரோஸ் செஃப்கோவிக் உடன் காணொலிக்காட்சி மூலம் உரையாடினார்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு,   நிறுவனங்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான ஐரோப்பிய ஆணையர் திரு மரோஸ் செஃப்கோவிக் உடன் இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்ற பின்  இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் அறிமுகக் கூட்டமான இதில், இந்திய-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, உயர்நிலை பேச்சுவார்த்தை, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய …

Read More »

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்துக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அறிவிப்பு

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்தில்   உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் …

Read More »

திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

ஹரியானா முன்னாள் முதலமைச்சர் திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக மாநில அரசியலில் தீவிரமாக செயல்பட்டவர். சவுத்ரி தேவி லால் அவர்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார். இந்தத் துயரமான …

Read More »