Saturday, April 04 2026 | 12:50:59 AM
Breaking News

பிரதமரின் கதிசக்தி திட்டத்தின்கீழ் முக்கிய ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் மதிப்பீடு

உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 85 வது கூட்டத்தில் பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் கீழ் ஐந்து திட்டங்கள் (2 ரயில்வே, நெடுஞ்சாலை மேம்பாட்டின் 3 திட்டங்கள்) மதிப்பீடு செய்யப்பட்டன.  பல்முனை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த  ஒருங்கிணைந்த மேம்பாடு, கடைக்கோடி பகுதிக்கும் இணைப்பு , பல்வகை வாகன முனையங்களுக்கிடையில் இணைப்பு ஆகிய குறிக்கோள்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த திட்டங்கள் மூலம் பயண நேரங்களைக் குறைக்கவும், போக்குவரத்து வசதியை அதிகரிப்பதன் மூலமும் …

Read More »

நிலக்கரி இறக்குமதி குறைப்பு

உலகளவில் நிலக்கரி உற்பத்தியில்  ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா இருந்தபோதிலும் சில குறிப்பிட்ட வகை  நிலக்கரிகளைப் பொறுத்து குறிப்பாக கோக்கிங் நிலக்கரி, உயர்தர அனல்மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஆகியவற்றில் பற்றாக்குறை உள்ளது. நிலக்கரி விநியோகத்தில் உள்ள இந்த இடைவெளி காரணமாக எஃகு உற்பத்தி உட்பட முக்கிய தொழில்களை பாதுகாக்கவும், அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும் நிலக்கரி இறக்குமதி அவசியமாகிறது. 2024-25 ம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் …

Read More »

தேசிய ஆயுஷ் இயக்கத்தில் சித்த மருத்துவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது – ஆயுஷ் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா

பொது சுகாதாரத்திற்கான சித்த மருத்துவம் என்ற கருப்பொருளில் 8 வது சித்த தினம் 19 டிசம்பர் 2024 அன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கில் கொண்டாடப்பட்டது, இவ்விழாவை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழ்நாட்டின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா சிறப்பு …

Read More »

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் மோடி உரையாடினார்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவுகூர்ந்த அவர்கள், இந்தியா, இங்கிலாந்து இடையேயான விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். காமன்வெல்த் நாடுகள், சமோவாவில் சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் ஆகியவை குறித்து அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். பருவநிலை நடவடிக்கை, நிலைத்தன்மை உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பல அம்சங்கள் குறித்தும் விவாதித்தனர். இவற்றில் மன்னரின் நீடித்த ஆதரவு மற்றும் முன்முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை வாழ்த்துகளை பரஸ்பரம் இருவரும் பரிமாறிக் கொண்டனர். மன்னரின் சிறந்த ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Read More »

கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் துணிச்சல், மன உறுதி நினைவு கூரப்படும் :பிரதமர்

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பெண்கள் மற்றும் ஆண்களின் அசாத்திய துணிச்சல் மற்றும் மன உறுதியை நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: இன்று, கோவா விடுதலையான தினம். இத்தினத்தில், விடுதலைக்காக தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் அசாத்திய துணிச்சலையும் மன உறுதியையும் நினைவு கூர்கிறோம். அவர்களின் வீரம் கோவாவின் முன்னேற்றத்திற்காகவும், மாநில மக்களின் வளமைக்காகவும் தொடர்ந்து பணியாற்ற எங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

Read More »

நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாவிட்டால், அது பொருத்தமற்றதாக மாறிவிடும்: குடியரசு துணைத்தலைவர்

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இல்லாவிட்டால் அவை நடவடிக்கைகள் அர்த்தமற்றதாக இருக்கும்  என்று  குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். மக்கள் பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும்  ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ஜனநாயக மாண்புகளைக் காக்க உதவிடும் என்றும் கூறினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம்  ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்  என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய வனப்பணி பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு. தன்கர், வளர்ச்சி, சுற்றுச்சூழல் விவகாரங்களை அரசியல் ஆக்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். “தேசிய பாதுகாப்பு மற்றும்  நாட்டின் மேம்பாட்டுத்திட்டங்கள் குறித்த விவாதங்கள் ஜனநாயக மாண்புகளைக் காக்கும் வகையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். …

Read More »

நகரக் கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைந்த அமைப்பு

நகரக் கூட்டுறவு வங்கிகள் சந்தித்து வரும் இடர்ப்பாடுகளைக் களைவதற்கு  ஓர் அமைப்பை நிறுவ வேண்டிய அவசியம் உணரப்பட்டது. நகரக் கூட்டுறவு வங்கிகள் துண்டு துண்டான, ஒருங்கிணைக்கப்படாத சூழலில் செயல்படுகின்றன. அவற்றின் வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை இந்த நிலைமைகள்  தடுக்கின்றன. ஒழுங்குமுறை தெளிவின்மை, செயல்பாட்டு திறமையின்மை, வளங்கள் மற்றும் நிபுணத்துவத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் ஆகியவை பல நகரக் கூட்டுறவு வங்கிகளை நிதி உறுதியின்மை, மோசமான நிர்வாகம் மற்றும் சந்தை அழுத்தங்களுக்கு பாதிக்கப்படக்கூடியதாக ஆக்கின. நகரக் கூட்டுறவு வங்கிகளின் …

Read More »

தேசிய அளவில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள்

மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்றுமதி, இயற்கை விளைபொருள் மற்றும் தரமான விதைகளுக்கு தலா ஒன்று வீதம் மூன்று தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை அமைத்துள்ளது. இச்சங்கங்கள் பல மாநில கூட்டுறவு சங்க சட்டம், 2002-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சங்கத்திற்கும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் உறுப்பினராவதற்கு தகுதியுடையவையாகும். அதன் விவரம் வருமாறு: இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட், கிரிஷக் பாரதி …

Read More »

கூட்டுறவு சங்கங்களுக்கான மூலதனச் செலவு

கூட்டுறவு சங்கங்கள் திறம்பட செயல்படுவதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை கணினிமயமாக்குதல்,  வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குதல், ஆர்.சி.எஸ் அலுவலகங்களை கணினிமயமாக்குவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களுக்கு ‘வணிகம் செய்வதை இது எளிதாக்கி உள்ளது. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வெளிப்படையான காகிதமற்ற ஒழுங்குமுறைக்கான டிஜிட்டல் சூழல் அமைப்பை உருவாக்குகிறது. அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாநில அரசுகள் …

Read More »

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் எல்பிஜி எரிவாயுவை விநியோகிக்க அனுமதி

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களின் (பிஏசிஎஸ்) செயல்பாடுகளை விரிவுபடுத்தி, அதன் மூலம் அவற்றை நிதி ரீதியாக வலுவாகவும், நிலையானதாகவும் ஆக்குவதற்காக, அவை சமையல் எரிவாயு டீவர்ஷிப் பெற விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து பிஏசிஎஸ்-ஐ சமையல் எரிவாயு விநியோகஸ்தராக தகுதி பெறச் செய்துள்ளது. விரிவான அடிமட்ட கட்டமைப்புடன், கிராமப்புற சமூகங்களிடையே நம்பிக்கையுடன் செயல்படும் பிஏசிஎஸ், தொலைதூரப் பகுதிகளில் எல்பிஜி விநியோகத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க நன்கு …

Read More »