டாப்ளர் வானிலை ரேடார்கள் (டி.டபிள்யூ.ஆர்) நெட்வொர்க்கானது முக்கியமாக இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையைக் கண்காணிக்கவும், 3 மணி நேரம் வரை சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. 6 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பே மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை கணிப்பதற்காக இந்தக் கட்டமைப்பு வானிலை முன்கணிப்பு மாதிரிகளில், குறிப்பாக நவ்காஸ்ட் மாதிரிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த டி.டபிள்யூ.ஆர்களின் உதவியுடன் தகுந்த முன்னெச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. பாலசோரில் உள்ள …
Read More »நேபாள ராணுவ தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை 2024 டிசம்பர் 12 அன்று புதுதில்லியில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் தொடர்பான பல விவகாரங்கள் குறித்து விவாதித்தார். நேபாள இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள், வழக்கமான பயிற்சிகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கிடங்குகள் வழங்குதல் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான மிகவும் வலுவான …
Read More »யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்
உலக பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள பட்டியலை அதிகரிப்பது என்பது தொடர் செயல்முறையாகும். உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியா 43 கலைச்சின்னங்களைக் (35 கலாச்சார, 7 இயற்கை மற்றும் 1 கலப்பு) கொண்டுள்ளது. யுனெஸ்கோவின் செயல்பாட்டு வழிகாட்டுதல் நடைமுறைகள் 2023-ன் படி, ஆண்டு தோறும் உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்க கலாச்சார, இயற்கை அல்லது இரண்டும் கலந்த சொத்துக்கள் மட்டுமே முன்மொழியப்படலாம். 2024-25-ம் ஆண்டிற்கான கல்வெட்டு செயல்முறைக்காக ‘இந்தியாவின் மராத்தா ராணுவ நிலப்பரப்பு’ …
Read More »கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள்
நாட்டின் மேன்மையான கலாச்சார உறவுகளை பிற நாடுகளிடையே பரப்புவதற்கான முயற்சிகளை மத்திய கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலால் மேம்பட்டு வருகிறது. பல்வேறு கலாச்சார பரிமாற்றங்கள் மூலம் பல ஆண்டுகளாக வலுப்பெற்றுள்ள இந்த நல்லுறவுகள் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இருதரப்பு கலாசார உடன்படிக்கைகள்/கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு …
Read More »காணாமல் போன இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்
இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் (2013 ஆம் ஆண்டின் 18) 92 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை தனது கள அலுவலகங்கள் மூலம் மேற்கொண்ட ஆய்வில், 18 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் போது, இந்திய தொல்லியல் துறையின் கள அலுவலகங்கள், விரைவான நகரமயமாக்கல் காரணமாக ஏற்படும் அழுத்தங்கள் நினைவுச்சின்னங்களைப் பாதிக்கும் காரணியாக …
Read More »தேசிய சமஸ்கிருத திருவிழா
நாட்டின் இளைஞர்களிடையே தொன்மையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மண்டல கலாச்சார மையங்கள் வாயிலாக தேசிய சமஸ்கிருத திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். இதுவரை, 14 தேசிய சமஸ்கிருத திருவிழாவும், 04 மண்டல அளவிலான விழாக்களும் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் நடத்தப்பட்டன. 1890 ஆம் ஆண்டு …
Read More »கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் 43 அமைப்புகள் சிறப்பு பிரச்சாரம் 4.0 இல் பங்கேற்றன
மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் 43 அமைப்புகள், சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் பங்கேற்று, அரசு அலுவலகங்களில் தூய்மையைப் பராமரிப்பதற்கும் பொது மக்களின் பணி சார்ந்த அனுபவங்களை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் / புதுமையான கழிவு மேலாண்மை, பொது விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டன. இதில் பதிவேடுகள் மேலாண்மை குறித்த பயிற்சி, துறை ஆவண அறை ஆய்வு, கண்காட்சிகள், தெருக்கூத்து, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று வளர்ப்போம் இயக்கம், பயிலரங்குகள், பயன்பாட்டில் இல்லாத இடங்களை …
Read More »தாஜ்மஹாலுக்கு கசிவு, விரிசல் மற்றும் சேதம்
ஆக்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 12 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பெய்த கனமழை காரணமாக, தாஜ்மஹாலின் பிரதான கல்லறையின் கூரை வழியாக நீர்க்கசிவு காணப்பட்டது. இருப்பினும், பருவமழைக் காலங்களில் கடுமையான கசிவு, விரிசல் மற்றும் சேதங்கள் எதுவும் காணப்படவில்லை. பெரிய அளவில் சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் சிறிய இடைவெளிகள் வழியாக நீர்க்கசிவு ஏற்பட்டது. லிடார் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் ஆகியவற்றைப் …
Read More »புராதனத் தலங்களை பாதுகாப்பதில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு
பாரம்பரிய தலங்களைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கும் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம், 1890-ம் ஆண்டு அறக்கட்டளை சட்டத்தின் கீழ் தேசிய கலாச்சார நிதியம் 1996-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிதியத்தின் அனைத்து செயல் திட்டங்களும் திட்ட அமலாக்க குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய கலாச்சார நிதியத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகள் நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு அல்லது அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக …
Read More »பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் தடைசெய்யப்பட்ட / ஒழுங்குபடுத்தப்பட்ட எல்லைகளை மறுவரையறை செய்தல்
நாட்டில் 3,696 புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட செயல்திறன் தணிக்கை மற்றும் தொடர் கணக்கெடுப்பின் பணிகளின் போது, 18 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் பழம்பெருமை வாய்ந்த தலங்கள், சிறப்பான முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. தடைசெய்யப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்கள் புகார் தெரிவித்தால் பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் …
Read More »