Monday, February 02 2026 | 09:19:38 PM
Breaking News

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் டிசம்பர் 2 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 11 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,85,98,858 கணக்கெடுப்பு படிவங்கள் …

Read More »

தட்சிண கன்னட மாவட்டம் ஏற்றுமதி மையமாக அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்

‘மாவட்டங்களை ஏற்றுமதி மையமாக’ (DEH) மாற்றும் மத்திய அரசின்  முன்முயற்சியின் கீழ், தட்சிண கன்னட மாவட்டம் ஒரு ஏற்றுமதி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் உணவுகள் மற்றும் முந்திரி ஆகியன இப்பகுதியின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. இது, உள்ளூர் தொழில்துறையை வலுப்படுத்தவும், உலக வர்த்தகத்தில் பங்கேற்பை அதிகரிக்கவும் உதவும். ஏற்றுமதிச் சவால்களைச் சமாளிக்க, மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டம்  வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தளவாடப் போக்குவரத்து  இடைவெளிகள், சேமிப்புக் …

Read More »

இந்தியாவின் காலணி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது – குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

புதுதில்லியில் இன்று (டிசம்பர் 1, 2025) நடைபெற்ற காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியா தற்சார்பில் வளர்ச்சியடைந்து வரும் நாடாகவும், உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்தும் திறன் கொண்ட நாடாகவும் திகழ்கிறது என்று கூறினார். தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், காலணித் துறைக்கு சாம்பியன் துறை என்ற அந்தஸ்து, வர்த்தகம் மற்றும் …

Read More »

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கான பாராட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இன்று முதல் முறையாகத் தலைமை தாங்கிய குடியரசு துணைத்தலைவர்  திரு சி பி ராதாகிருஷ்ணனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த நாள் பெருமை சேர்க்கும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். “அவையின் சார்பாகவும், என் சார்பாகவும், உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று திரு மோடி கூறினார். ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த திரு ராதாகிருஷ்ணன் …

Read More »

செயற்கை நுண்ணறிவு மூலம் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை எல்லையற்ற வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது: இந்திய தொழில் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலாளர் உரை

மும்பையில் இன்று (01.12.2025) நடைபெற்ற சிஐஐ பிக் பிக்சர் உச்சிமாநாட்டின் 12-வது பதிப்பில், ‘ஏஐ சகாப்தம் – படைப்பாற்றல் மற்றும் வர்த்தகத்தை இணைத்தல்’ என்ற கருப்பொருளில் தொடக்க உரையாற்றிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, செயற்கை நுண்ணறிவின் வருகையால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்கொண்டாலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை மாபெரும் வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்வில், இந்தியாவின் படைப்புப் பொருளாதாரத்திற்கான …

Read More »

ஜல் ஜீவன் இயக்கத்தின் விரிவாக்கம் மற்றும் அமலாக்க நிலவரம்

2019 ஆகஸ்ட் முதல், மத்திய அரசு, அசாம் உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து, நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்காக ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் அசாமில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, மொத்தம் 72,24,242 கிராமப்புற வீடுகளில், 57,87,327 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 58,98,638 வீடுகள் …

Read More »

எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதியத்திற்கு மூலதனமாக 9,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ)  நிதியுதவி அளிப்பதற்கும் குறித்த காலத்தில் வரவேண்டிய தொகைகளைப் பெறுவதற்கும், மாறி வரும் தொழில்நுட்பங்களை விரைந்து செயல்படுத்துவற்கும் ஏதுவாக பல்வேறு முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதியத்திற்கு 9,000 கோடி  ரூபாய் மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனங்களுக்கு கூடுதல் கடனுதவியாக 2 லட்சம் கோடி ரூபாய் …

Read More »

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், குருக்ஷேத்திரத்தில் அகில பாரதிய தேவஸ்தான சம்மேளனத்தில் உரையாற்றினார்

ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் இன்று (30 நவம்பர் 2025) நடைபெற்ற சர்வதேச கீதை மஹோத்சவம் 2025-ன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட அகில பாரதிய தேவஸ்தான சம்மேளனத்தில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசிய அவர், “வேதங்களின் பூமி” என்று கொண்டாடப்படும் குருக்ஷேத்திரத்தின் புனிதமான மண்ணில் நிற்பதில் மிகுந்த பெருமை அடைவதாகக் கூறினார். பகவத் கீதையின் தெய்வீக ஞானத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வழங்கிய இடமாக இந்த புனித இடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போற்றப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். அதர்மம் எவ்வளவு சக்திவாய்ந்ததாகத் தோன்றினாலும், தர்மம் இறுதியில் அதர்மத்தை வெல்லும் என்பதையே குருக்ஷேத்திரம் நினைவூட்டுவதாக அவர் கூறினார். பகவத் கீதை என்பது ஒரு மதத்துக்கான வேதம் அல்ல என்றும் நீதி தவறாத வாழ்க்கை, துணிச்சலான செயல்பாடு, ஞான உணர்வு ஆகியவற்றுக்கான உலகளாவிய வழிகாட்டி நூல் என்றும் தெரிவித்தார்.  செல்வம் அல்லது பிற உலக சாதனைகளை விட நல்ல குணம் மிக முக்கியமானது என்று அவர் கூறினார். மனிதகுலத்தை நல்லொழுக்கத்துடன் வழிநடத்தும் நூல் கீதை என்றும் நீதிக்கான அர்ப்பணிப்பை இது நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். …

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 128-வது அத்தியாயத்தில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.11.2025) மனதின் குரல் நிகழ்ச்சியின் 128-வது அத்தியாயத்தில் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்களைப் படங்களுடன் சமூக வலைதளத்தில் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தனித்தனி பதிவுகளில் கூறியிருப்பதாவது: “நவம்பர் மாதம் பல உத்வேகங்களைக் கொண்டு வந்துள்ளது” “உணவு தானிய உற்பத்தியில் இந்தியா ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.” “புனேவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு, இஸ்ரோ ஏற்பாடு செய்த தனித்துவமான ட்ரோன் போட்டியில் எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை பிரதமர் திரு நரேந்திர எடுத்துரைத்தார்.” “இந்தியா முழுவதும் ஒரு இனிமையான புரட்சி!” “ஐரோப்பாவிலிருந்து சவுதி அரேபியா வரை, உலகம் கீதையை எவ்வாறு கொண்டாடுகிறது என்பதைப் பிரதமர் திரு நரேந்திர பகிர்ந்து கொண்டார்.” ” ஜாம் சாஹேப்பின் உலகம் போற்றும் அரிய பங்களிப்புகள்…” “உயர்ந்த கல்வித் தகுதி பெற்ற இளம் நிபுணர்கள் இப்போது இயற்கை விவசாயத்தை ஏற்று செயல்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” “நான்காவது காசி-தமிழ் சங்கமம் டிசம்பர் 2-ம் தேதி காசியில் உள்ள நமோ படித்துறையில் தொடங்குகிறது. காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” “ஐஎன்எஸ் மஹே இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் உள்நாட்டு வடிவமைப்பு பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது.” “உத்தராகண்டில் குளிர்கால சுற்றுலா பலரை ஈர்க்கிறது.” “பகவான் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் மீது பல நாடுகளில் உற்சாகம் காணப்படுகிறது. உலகம் முழுவதற்கும், புத்தரின் நினைவுச்சின்னங்களை அனுப்பியதற்காக அந்நாடுகளின் மக்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.” “உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்!” “விளையாட்டுகளில் இந்தியா அதிகம் சாதித்த மாதம்!” “நவம்பர் மாத்ததில் 140 கோடி இந்தியர்களும் பெருமிதம் கொள்ளும் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் சில: அயோத்தியில் தர்ம த்வஜாரோஹண விழா. பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழா. வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா. இந்தியா உலகளாவிய கப்பல் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மையமாக மாறும் நிலையை நெருங்கியது. வலிமை மற்றும் தன்னம்பிக்கையின் துடிப்பான அடையாளமான ஐஎன்எஸ் மாஹே செயல்பாட்டுக்கு வந்தது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் இன்ஃபினிட்டி வளாகத்தின் திறப்பு விழா. உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது.” “இந்தியாவின் இளைய தலைமுறையினர் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் அற்புதங்களைச் செய்து வருகின்றனர். ட்ரோன்கள் மீதான நமது இளைஞர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி இது.” “ஜம்மு காஷ்மீர் முதல் கர்நாடகா, நாகாலாந்து வரை, இந்தியாவின் விவசாயிகள் தேன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து வருகின்றனர். இந்தத் துறையில் காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.” …

Read More »

போர்க்கப்பல் தயாரிப்பு மற்றும் கையகப்படுத்தல் கட்டுப்பாட்டு அலுவலராக வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது பொறுப்பேற்பு

வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்துதல் பிரிவின் கட்டுப்பாட்டு அலுவலராக 2025 நவம்பர் 28 அன்று பொறுப்பேற்றார். பணி ஓய்வு பெறும் வைஸ் அட்மிரல் ராஜாராம் சுவாமிநாதனிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.  1987-ம் ஆண்டு கடற்படையில் இணைந்த திரு சஞ்சய் சாது, இயந்திர பொறியியலில் முதுகலை பட்டமும், பாதுகாப்பு உத்தி தொடர்பாக எம்ஃபில் பட்டமும் பெற்றவர். 38 ஆண்டுகளுக்கும் மேலான தனது கடற்படை அனுபவத்தில், கொடி அதிகாரி பல முக்கிய பிரிவுகளின் செயல்பாடு உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட்டில், போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா, ஐஎன்எஸ் துனகிரி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். கொடி அதிகாரியாக அவர் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, அவர் மும்பை கடற்படை கப்பல் உற்பத்தி பிரிவில் கூடுதல் பொது மேலாளர், கார்வார் கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் பிரிவின் கண்காணிப்பாளர், புதுதில்லி கடற்படை தலைமையகத்தில் கடல்சார் பொறியியல் முதன்மை இயக்குநர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கொடி அதிகாரியாகப் பொறுப்பேற்ற பின்னர், அவர் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவின் கூடுதல் இயக்குநர் தலைவர், கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, விசாகப்பட்டினம் கப்பல்கட்டும் தளத்தின் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மேற்கு, கிழக்கு கடற்படை பிரிவுகளில் உள்ள இரண்டு முக்கிய கப்பல் கட்டும் தளங்களுக்குத் தலைமை வகித்த பெருமையும், மேற்கு, கிழக்கு கடற்படை கட்டளைகளின் தலைமை தொழில்நுட்பப் பணி அதிகாரியாக பணியாற்றிய பெருமையும் கொடி அதிகாரிக்கு உண்டு. இவர் கோவாவின் கடற்படைப் போர் கல்லூரியின் முன்னாள் மாணவர். பல்வேறு நிலைகளில் சிறப்பாகச் சேவை செய்ததற்காக, குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், நௌசேனா பதக்கம் ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.

Read More »