Sunday, December 28 2025 | 08:36:49 AM
Breaking News

நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கத்துக்கு பிரதமர் வரவேற்பு

நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றுள்ளார், இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் நலன் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.  இந்தச் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களை பெரிதும் மேம்படுத்துவதோடு, இணக்கத்தை கணிசமாக எளிதாக்குகின்றன. மேலும் ‘வணிகம் செய்வதை எளிதாக்குவதை’ ஊக்குவிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார். நான்கு தொழிலாளர் சட்டங்கள்  உலகளாவிய சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், …

Read More »

தென்னாப்பிரிக்கா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை

தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ், ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இருபதாவது ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள,  திரு. சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில், நவம்பர் 21 முதல் 23 வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன். ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இது என்பதால்,  ஒரு சிறப்புமிக்க உச்சிமாநாடாக இருக்கும். 2023-ம் ஆண்டில் இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பில்  இருந்தபோது, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20  அமைப்பில்  உறுப்பினராகியது. இந்த உச்சிமாநாடு முக்கிய உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த ஆண்டு ஜி20-ன் கருப்பொருள் ‘ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை’ ஆகும்.  …

Read More »

ஊட்டச்சத்து அடிப்படையிலான சுகாதாரமான தின்பண்டங்கள் மற்றும் உணவுக் கலவைகளை அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது

இந்தியாவின் சிறப்புமிக்க பாரம்பரிய மருத்துவமுறையை உலகறியச் செய்யும் வகையில் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆரோக்கியமான இந்தியா, உன்னத இந்தியா என்ற கருப்பொருளில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கு ஏராளமான  பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த அரங்கிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி மற்றும் சோவா ரிக்பா போன்ற பாரம்பரிய மருத்துவ …

Read More »

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையின் தலைமையகம் கூட்டு மின்காந்த வாரியக் கூட்டத்தை நடத்தியது

படைத் தளபதிகளின், துணைக் குழுவான கூட்டு மின்காந்த வாரியத்தின்  வருடாந்திரக் கூட்டம் நவம்பர் 20 அன்று புதுதில்லியில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் (செயல்பாடுகள்) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ராகேஷ் சின்ஹா தலைமையில் நடைபெற்றது. முப்படைகளின்  கூட்டு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு எட்டப்படுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.  வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், அலைக்கற்றை மேலாண்மை ஆகிய துறைகளில் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல …

Read More »

பிராந்திய டிஜிட்டல் சுகாதார உச்சிமாநாடு 2025-ல், பரிமாற்றத்தக்க, தரநிலைகள் சார்ந்த சுகாதாரச் சூழல் அமைப்புகளுடன் முன்னெடுத்துச் செல்ல நாடுகள் முடிவு

புதுதில்லியில் நடைபெற்ற பிராந்திய  திறந்தநிலை டிஜிட்டல் சுகாதார உச்சி மாநாடு  2025-ன் இரண்டாம் நாளில், தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் முழுவதிலுமிருந்து வந்த சுகாதாரத்துறை பிரதிநிதிகள் வெளிப்படையான  தரநிலைகள் மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மூல தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய, அளவிடக்கூடிய டிஜிட்டல் சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவது பற்றிய செயல்விளக்கங்களை செய்து காட்டினர். இதனைத் தொடர்ந்து, விரிவான  தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கிழக்கு …

Read More »

சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

சத்தீஷ்கர் மாநில  அரசின் சார்பில் அம்பிகாபூரில் இன்று (20.11.2025) நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்களித்துள்ள பழங்குடியினர் சமுதாயம் குறித்த அத்தியாயம் இந்திய வரலாற்றில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். பஸ்தரில் நடத்தப்பட்ட மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் அவர்களது தொன்மையான கலாச்சாரத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந:துள்ளது என்று கூறினார். பழங்குடியினரின் பாரம்பரியம், …

Read More »

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ல் விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-இல் கலந்துகொண்டபோது,  பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பாராட்டிய திரு மோடி, வாழைப்பழ கழிவுகளின் பயன்பாடு பற்றி கேட்டறிந்தார். மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வாழைப்பழ கழிவுகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் என்று விவசாயி விளக்கம் அளித்தார். இத்தகைய தயாரிப்புகள் இந்தியா முழுவதும் இணையம் வழியாக விற்பனை செய்யப்படுவதை விவசாயி உறுதிப்படுத்தினார். …

Read More »

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 11 லட்சம் படிவங்கள் விநியோகம்

தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,11,61,947 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 95.39% சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் இன்று (20.11.2025) மாலை 3 மணி வரை 6,11,61,947 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,38,853 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக …

Read More »

மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் சுய தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்

நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் வகையில் மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து இணக்க நடைமுறைகளும், முறையாக பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்கான சுய தணிக்கை உறுதி மொழிக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகள், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் நுகர்வோருக்கு தவறான தகவல்களை அளிப்பதிலிருந்தும், …

Read More »

பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இந்தியா – பிரான்ஸ் நாடுகள் கையெழுத்து

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரான்சின் ஆயுதப் பிரிவு தலைமை இயக்குநரகம் இடையே தொழில்நுட்ப அடிப்படையிலான ஆராய்ச்சிக் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . புதுதில்லியில்  உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் இன்று (20.11.2025) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத் மற்றும் பிரான்சின் தேசிய ஆயுதப் பிரிவு இயக்குநர் …

Read More »