Thursday, January 08 2026 | 10:37:56 PM
Breaking News

‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ – முக்கிய கனிமங்கள்; சிறந்த வேலை; செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வில் பிரதமர் உரையாற்றினார். முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் ‘மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் …

Read More »

ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுக் கூட்டத்தின் முக்கிய முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு

பிரேசிலின் பெலெமில் 2025 நவம்பர் 22 அன்று நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுவின் உறுப்பு நாடுகள் பங்கேற்ற 30-வது மாநாட்டின் (UNFCCC CoP30) நிறைவு அமர்வில், ஏற்றுக்கொள்ளப்பட்ட பல குறிப்பிடத்தக்க முடிவுகளை இந்தியா வரவேற்றுள்ளது. மேலும், இந்த மாநாட்டின் பிரேசிலின் தலைமைத்துவத்திற்கு இந்தியா வலுவான ஆதரவைத் தெரிவித்தது. வளர்ந்த நாடுகள் பருவநிலை நிதி வழங்குவது தொடர்பான நீண்டகால கடமைகளை இந்தியா வலியுறுத்தியது . நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிரிவு …

Read More »

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இன்று (நவம்பர் 22, 2025) நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர்  திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இதில் குடியரசுத் தலைவர்  பேசியதாவது: பண்டைக் காலங்களிலிருந்து, நமது துறவிகளும் முனிவர்களும் தங்கள் செயல்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் சமூகத்தை வழிநடத்தி வருகின்றனர். இந்த மாமனிதர்கள் சமூகத்தின் நலனுக்காக ஏராளமான பணிகளைச் செய்துள்ளனர். அத்தகைய சிறந்த …

Read More »

இஸ்ரேலுடன் உத்திசார் ஒத்துழைப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் முன்னெடுத்துள்ளார்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இஸ்ரேலுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது விவசாயம், தொழில்நுட்பம், புதுமை, வர்த்தகம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முடிவுகளை மேற்கொண்டார். நவம்பர் 21 அன்று நடந்த கூட்டங்களின் போது, விவசாயத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த விரிவான கலந்துரையாடலுக்காக திரு பியூஷ் கோயல், இஸ்ரேலிய வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் திரு. அவி டிச்சரை சந்தித்தார். இஸ்ரேலின் 25 ஆண்டுகால உணவுப் பாதுகாப்புத் திட்டம், அதன் மேம்பட்ட விதை மேம்பாட்டு உத்திகள் மற்றும் விவசாயத்திற்கான நீர் மறுபயன்பாட்டு தொழில்நுட்பங்களில் நாட்டின் உலகளாவிய தலைமைத்துவம் குறித்து அமைச்சர் டிச்சர்,  திரு கோயலுக்கு விளக்கினார். பின்னர்  திரு கோயல், பெரெஸ் அமைதி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தைப் பார்வையிட்டார், அங்கு இஸ்ரேலின் முன்னோடி தொழில்நுட்ப சூழல் அமைப்பு குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. சொட்டு நீர்ப் பாசன அமைப்புகள், ஸ்டென்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் அயர்ன் டோம் அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிவேக  தீர்வுகள் பற்றிய விளக்கங்களுடன் அவருக்குக் விளக்கப்பட்டன. பெரெஸ் மையத்தை இஸ்ரேலின் படைப்பாற்றல், புதுமை மற்றும் சமூக தாக்கத்தின் பயணத்தை பிரதிபலிக்கும் ஒரு ஊக்கமளிக்கும் நிறுவனம் என்று அவர் விவரித்தார். முன்னதாக, நவம்பர் 20 அன்று, திரு பியூஷ் கோயல் இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் திரு. நிர் பர்கட் அவர்களை சந்தித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு வர்த்தகத்தின் தற்போதைய பாதையை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா-இஸ்ரேல் வணிக மன்றம் நடைபெற்றது, இதில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மன்றத்தில் தொழில்நுட்ப அமர்வுகள்  இடம்பெற்றன, அவை தொழில்நுட்பம், புதுமை, …

Read More »

தேசிய போர் நினைவுச்சின்னத்தில் என்சிசி-ன் 78-வது நிறுவன தின நிகழ்ச்சிகளை பாதுகாப்புத்துறை செயலாளர் தொடங்கிவைத்தார்

தேசிய மாணவர் படை (என்சிசி), அதன் 78-வது நிறுவன தினத்தை நவம்பர் 23, அன்று நாடு முழுவதும் கொண்டாடவுள்ளது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, நவம்பர் 22 அன்று புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒரு புனிதமான மலர்வளையம் வைக்கும் விழா நடைபெற்றது, இதில் பாதுகாப்புத் துறை  செயலாளர் திரு  ராஜேஷ் குமார் சிங் மற்றும் என்சிசி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் ஆகியோர் முழு அமைப்பின் சார்பாகவும் வீரமரணம் அடைந்த …

Read More »

காசி தமிழ் சங்கமம் 4.0, மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 முதல் நடத்தவுள்ளது

தமிழ்நாட்டிதிற்கும் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக தொடர்புகளைக் கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமத்தின்   நான்காவது பதிப்பை டிசம்பர் 2 முதல், மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, இரு பகுதிகளுக்கும் இடையிலான நாகரிகம், கலாச்சாரம், மொழியியல் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை தொடர்ந்து அதிகரிக்கிறது, இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தை …

Read More »

புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ஆசிய- பசிபிக் பேரிடர் தகவல் மேலாண்மை மேம்பாட்டு மையத்தின் 10-வது அமர்வு

உள்ளடக்கிய பேரிடர் அபாய தரவு நிர்வாகம் குறித்த ஆசிய-பசிபிக் பேரிடர் தகவல் மேலாண்மை மேம்பாட்டு மையத்தின் 10-வது அமர்வு புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்தியக் குழுவிற்கு உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணையமைச்சர்  நித்யானந்த் ராய் தலைமை தாங்கினார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினரும் துறைத் தலைவருமான திரு ராஜேந்திர சிங் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் திரு மணீஷ் பரத்வாஜ் ஆகியோரும் இந்தக் …

Read More »

நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கத்துக்கு பிரதமர் வரவேற்பு

நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றுள்ளார், இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் நலன் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.  இந்தச் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களை பெரிதும் மேம்படுத்துவதோடு, இணக்கத்தை கணிசமாக எளிதாக்குகின்றன. மேலும் ‘வணிகம் செய்வதை எளிதாக்குவதை’ ஊக்குவிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார். நான்கு தொழிலாளர் சட்டங்கள்  உலகளாவிய சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், …

Read More »

தென்னாப்பிரிக்கா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை

தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ், ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இருபதாவது ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள,  திரு. சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில், நவம்பர் 21 முதல் 23 வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன். ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இது என்பதால்,  ஒரு சிறப்புமிக்க உச்சிமாநாடாக இருக்கும். 2023-ம் ஆண்டில் இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பில்  இருந்தபோது, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20  அமைப்பில்  உறுப்பினராகியது. இந்த உச்சிமாநாடு முக்கிய உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த ஆண்டு ஜி20-ன் கருப்பொருள் ‘ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை’ ஆகும்.  …

Read More »

ஊட்டச்சத்து அடிப்படையிலான சுகாதாரமான தின்பண்டங்கள் மற்றும் உணவுக் கலவைகளை அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது

இந்தியாவின் சிறப்புமிக்க பாரம்பரிய மருத்துவமுறையை உலகறியச் செய்யும் வகையில் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆரோக்கியமான இந்தியா, உன்னத இந்தியா என்ற கருப்பொருளில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கு ஏராளமான  பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த அரங்கிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி மற்றும் சோவா ரிக்பா போன்ற பாரம்பரிய மருத்துவ …

Read More »