ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதியோருக்கான வய வந்தனா சுகாதார அட்டைகள் வைத்திருப்போர் இடம் பெயர்தல் திறன் என்ற அம்சத்தின் கீழ், பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள 31,466 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் இணைவதற்கான விரிவான மருத்துவமனை இணைப்பு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்களை தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டது. ஆயுஷ்மான் வய வந்தனா திட்டம் …
Read More »பிரதமர் மீன்வளத் துறையின் கீழ் மீன்வள உள்கட்டமைப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) பிரதமர் மீன்வளத் திட்டத்தின் கீழ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, கர்நாடகா, திரிபுரா மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மீன்வள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.6761.80 கோடி மத்திய அரசின் பங்களிப்பை உள்ளடக்கிய மொத்தம் ரூ.17,210.46 கோடி செலவில் மீன்வள உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கர்நாடகா, திரிபுரா …
Read More »பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை தண்டிக்கவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் எல்லையைத் தாண்டுவதோ அல்லது பிராந்தியத்தைக் கைப்பற்றுவதோ அல்ல என்றும், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக ஆதரித்து வந்த பயங்கரவாதிகளின் புகலிடங்களை அகற்றுவதும், எல்லை தாண்டிய தாக்குதல்களில் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்த அப்பாவி குடும்பங்களுக்கு நீதி வழங்குவதும் அதன் நோக்கமாகும் என்று 2025 ஜூலை 28 அன்று மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை நன்கு திட்டமிடப்பட்ட சதி என்று …
Read More »தேசிய கல்விக் கொள்கை 2020 இன் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாளை பாரத் மண்டபத்தில் அகில இந்திய கல்வி மாநாடு 2025 ஐ கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கிறார்
கல்வி அமைச்சகம் ஜூலை 29, 2025 அன்று பாரத் மண்டபம் வளாகத்தில் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் 5வது ஆண்டு நிறைவை ஒட்டி அகில இந்திய கல்வி மாநாடு, 2025 ஐ ஏற்பாடு செய்கிறது. நாள் முழுவதும் நடைபெறும் விவாதங்களை கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைப்பார். தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த மாநாடு, …
Read More »நாடாளுமன்ற கேள்வி:- சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல்
காடுகள் மற்றும் மரங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, முதன்மையாக மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களின் பொறுப்புகளாகும். நாட்டின் காடுகள் மற்றும் மரங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு சட்ட கட்டமைப்புகள் உள்ளன, அவற்றில் இந்திய வனச் சட்டம், 1927, வன் (சன்ரக்ஷண் ஏவம் சம்வர்தன்) ஆதினியம், 1980, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972, மாநில வனச் சட்டங்கள், மரப் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் ஆகியவை அடங்கும். …
Read More »நாடாளுமன்ற கேள்வி: வாகன ஆயுள் காலம் முடிவு விதிமுறைகள், 2025
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வாகன ஆயுள் காலத்தை வாகனங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த மேலாண்மைக்காக, 2025 ஜனவரி 06, தேதியிட்ட சுற்றறிக்கை 98(E)-ன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (வாகன ஆயுள் காலம்) விதிகள், 2025 ஐ அறிவித்துள்ளது. இந்த விதிகள் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இதில் வாகன உற்பத்தியாளர்களுக்கு வாகனங்களை ஆயுள் காலம் முடிவடைந்த பிறகு அகற்றுவதற்கான கட்டாய நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் …
Read More »கடந்த 6 நிதியாண்டுகளில் இந்தியாவில் ரூ. 12,000 லட்சம் கோடி மதிப்பில் 65,000 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் உட்பட நாட்டில் டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்வதற்கான விகிதங்களை அதிகரிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI), நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடன் அரசு நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீரின், 3 முதல் 6-ஆம் நிலை நகரங்கள் வரை டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் உள்கட்டமைப்பைப் …
Read More »தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று (27.07.2025) நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜ ராஜ சோழனின் புனித பூமியில் தெய்வீக சிவ தரிசனம் மூலம் அனுபவித்த ஆழ்ந்த ஆன்மீக ஆற்றலைப் பற்றி உணர்ந்து, சர்வவல்லமையுள்ள சிவபெருமானை வணங்கியதாக பிரதமர் கூறினார். திரு இளையராஜாவின் இசையுடனும், ஓதுவார்களின் புனித மந்திரங்களுடனும், ஆன்மீக சூழல் ஆன்மாவை ஆழமாக நெகிழச் செய்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார். புனித …
Read More »மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-வது அத்தியாயத்தில், 27.07.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் …
Read More »ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் “நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார்” இஸ்ரோவின் சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும்: டாக்டர் ஜிதேந்திர சிங்
புது டெல்லி, ஜூலை 27: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் “நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார்” (நிசார்) இஸ்ரோவின் சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று இங்கு தெரிவித்தார். ஊடகங்களுக்கு விளக்கமளித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (NISAR) செயற்கைக்கோள் பணிகள் முடிவடைந்து இருப்பதால் அது ஜூலை 30, …
Read More »
Matribhumi Samachar Tamil