குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற கலை உத்சவ நிகழ்ச்சியில் ஜார்க்கண்டின் பாரம்பரியமான சோஹ்ராய் கலை முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த பத்து நாள் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்தியாவின் வளமான நாட்டுப்புற, பழங்குடி கலை மரபுகளைக் கொண்டாடுவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான கண்காட்சியைப் பார்வையிட்ட குடியரசுத்தலைவர், கலைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த கலைப்படைப்புகள் இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கின்றன என்றார். இயற்கையுடனான நமது தொடர்பு ஆழமானது என அவர் கூறினார். இந்த விலைமதிப்பற்ற மரபுகளை நிலைநிறுத்தும் கலைஞர்களைப் பாராட்டுவதாக அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (IGNCA-ஐஜிஎன்சிஏ) உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த ஜோஷி, பிராந்திய இயக்குநர் டாக்டர் குமார் சஞ்சய் ஜா, ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர் திருமதி சுமேதா சென்குப்தா உள்ளிட்டோர் நிறுவனத்தின் சார்பாக கலந்து கொண்டனர். ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர்களான திருமதி போலோ குமாரி ஓரான், திரு பிரபாத் லிண்டா, டாக்டர் …
Read More »கார்கில் வெற்றி தினத்தின் 26வது ஆண்டு நிறைவை இந்திய ராணுவம் கொண்டாடியது
நாடு முழுவதும் கார்கில் வெற்றி தினத்தின் 26வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், 1999 கார்கில் போரின் போது வீரர்களின் வீரத்தையும் உயர்ந்த தியாகத்தையும் போற்றும் வகையில், இந்திய ராணுவம் அதை மரியாதையுடனும், பெருமையுடனும், நாடு தழுவிய பங்கேற்புடனும் கொண்டாடியது. இந்த மைய நிகழ்வு டிராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது, இதில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை …
Read More »இங்கிலாந்துடனான விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவின் கடல் உணவுத் தொழில், 70% ஏற்றுமதி வளர்ச்சி காணும்
ஜூலை 24, 2025 அன்று விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியா-இங்கிலாந்து பொருளாதார உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொழுத்தானது. மேலும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து வணிகம் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு. ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரால் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டது. குறிப்பாக, கடல் துறையைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் பல்வேறு வகையான கடல் உணவுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை நீக்குகிறது, இது இங்கிலாந்து சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கிறது. இது குறிப்பாக இறால், உறைந்த மீன்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட கடல் பொருட்களின் ஏற்றுமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜவுளி, தோல் மற்றும் ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற தொழிலாளர் மிகுந்த துறைகளுடன் அதன் முக்கிய கடல் உணவு இலக்குகளில் ஒன்றான இந்தியாவின் இருப்பை அதிகரிக்கும். தற்போது இங்கிலாந்துக்கு இந்தியாவின் முக்கிய கடல் உணவு ஏற்றுமதிகளில் வன்னாமி இறால், உறைந்த கணவாய், நண்டுகள், உறைந்த மீன்கள் மற்றும் கரும்புலி இறால் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் ஒப்பந்தத்தின் வரி இல்லாத அணுகலின் கீழ் மேலும் சந்தைப் பங்கைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி 7.38 பில்லியன் டாலரை (ரூ 60,523 கோடி) எட்டியது, ஒப்பந்தம் இப்போது அமலில் உள்ளதால், வரும் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கான கடல்சார் ஏற்றுமதியில் 70% அதிகரிப்பு இருக்கும் என்று தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மீன்வளத் துறை சுமார் 28 மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது மற்றும் உலகளாவிய மீன் உற்பத்தியில் சுமார் 8% பங்களிக்கிறது. 2014–15 …
Read More »இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் வங்கி சேவை அறிமுகம்
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுமைப் பெண் / தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பிரதமரின் விவசாயிகள் நிதி ஆதரவு கணக்குகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான கணக்குகள், கர்ப்பிணி பெண்களுக்கான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்ட கணக்குகள், முதியோர் …
Read More »பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள்
நாட்டில் பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் நீண்டகாலம் நிலைத்து செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு முக்கியமான முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சிறிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதிலும் தரமான வேளாண் உள்ளீடுகளைப் பெறுவதிலும் உள்ள சவால்களை தீர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய நடவடிக்கைகளில் கீழ்வருவனவும் உள்ளடங்கும்: 1.நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும் அதன் …
Read More »எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணா்வுக்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஒரு பிாிவான தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பானது எச்.ஐ.வி/ எய்ட்ஸ்-க்கு எதிரான விழிப்புணா்வு முகாம்களை வலுப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. மக்கள் தொடா்பு சாதனங்கள் மூலமான விழிப்புணா்வு உள்ளிட்ட மல்டிமீடியா பிரச்சார முகாம்களை இந்த அமைப்பு நடத்தி வருகின்றது. மேலும், விளம்பரப் பலகைகள், பேருந்தில் விளம்பரங்கள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஐஇசி வேன்கள் ஆகியவற்றின் மூலம் வெளிப்புற ஊடக பிரச்சாரங்களையும் இந்த அமைப்பு …
Read More »தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 1 கோடியே 53 லட்சம் மண்வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன
வேளாண் உற்பத்தி மற்றும் மண்வள மேலாண்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக சமநிலையைப் பராமரிப்பது மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைக்கான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து விவசாயிகளுக்கும் மண் ஆரோக்கியம் மற்றும் மண்வளம் பராமரிப்பு திட்டத்தின் கீழ், கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய வேளாண் அமைச்சக இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி. என். …
Read More »நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 2025-ன் தொடக்கத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிக்கை
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 2025 தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஊடகவியலாளர்களிடையே உரையாற்றினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு அனைவரையும் வரவேற்ற பிரதமர், இந்தக் கூட்டத்தொடர் புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதுப்பித்தலின் அடையாளமாக உள்ளது என்றார். நாடு முழுவதற்குமான தற்போதைய வானிலை பற்றி எடுத்துரைத்த அவர், இது முன்னேற்றத்திற்கு சாதகமானது என்றும் விவசாயத்திற்கு பயனளிக்கும் முன்னறிவிப்பைக் கொண்டுவந்துள்ளது என்றும் கூறினார். மழைப் பொழிவானது ஊரகப் …
Read More »வரவிருக்கும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டினர்
அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் ஒரு கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, ஆகஸ்ட் 23, 2025 அன்று நடைபெறவிருக்கும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்களுக்கான விரிவான செயல்திட்டத்தை வகுக்க ஏற்பாடு செய்தார். இந்தியாவின் குறிப்பிடத்தக்க விண்வெளிப் பயணத்தைக் கொண்டாடுவதில் மாணவர்கள், அறிவியல் சமூகங்கள் மற்றும் பொதுமக்களை …
Read More »நிலக்கரி இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை
நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்து இருக்கும் நிலையை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடலோரத்தில் இல்லாத மின் உற்பத்தி நிலையங்களின் வருடாந்திர ஒப்பந்த அளவு 90% எனக் குறைக்கப்பட்டால் அல்லது கடலோர மின் உற்பத்தி நிலையங்களின் வருடாந்திர ஒப்பந்த அளவு 70% எனக் குறைக்கப்பட்டால் தற்போதைய நெறிமுறை தேவையின் அடிப்படையில் வருடாந்திர ஒப்பந்த அளவு 100 சதவீதமாக அதிகரிக்கப்படுள்ளன. இது அதிக உள்நாட்டு நிலக்கரி வினியோகத்திற்கு வழிவகுக்கிறது. இதன்மூலம் …
Read More »
Matribhumi Samachar Tamil