இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை அலுவலகம் அறிவியல் ஆசிரியர்களுக்கு, “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் வழிகாட்டி பயற்சித் திட்டத்தை புதுச்சேரியில் நடத்துகிறது. இது இன்றும் (03.07.2025) நாளையும் (04.07.2025) நடத்தப்படுகிறது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு ஸ்ரீஜித் மோகன், பங்கேற்பாளர்களை வரவேற்று, திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்பது, அடிப்படை அறிவியல் கருத்துக்களை தரப்படுத்தல் நடைமுறைகளுடன் இணைப்பதன் மூலம் மாணவர்களின் அறிவியல் புரிதலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட …
Read More »கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு இன்று (02.07.2025) முதல் 09.07.2025 வரை நான் பயணம் மேற்கொள்கிறேன். அதிபர் திரு ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் கானா செல்கிறேன். கானா உலகளாவிய தென்பகுதி நாடுகளில் ஒரு மதிப்புமிக்க தோழமை கூட்டாண்மை நாடாகும். மேலும் ஆப்பிரிக்க யூனியனிலும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது வரலாற்று உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வளர்ச்சிக் கூட்டாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதை …
Read More »ஐசிஎம்ஆர்-என்ஐஇ-இல் ஆராய்ச்சிப் பணிகளை ஊடகக் குழு பாராட்டியது
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் மனிஷா வர்மா தலைமையிலான 10 பேர் கொண்ட தேசிய ஊடகக் குழு, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் ஊடகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 2, 2025) சென்னை வந்தது. சுகாதார ஆராய்ச்சித் துறையின் கீழ் உள்ள முதன்மையான ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் …
Read More »கொவிட்-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் ஆய்வில் தகவல்
கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்திய பின்பு சில திடீர் மரணங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வுகளில் திடீர் மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் இடையே நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்பது உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் திறன் வாய்ந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த தடுப்பூசிகள் மிகவும் அரிதான பக்க …
Read More »போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தொழில் பிணைப்பை துண்டித்து இளைஞர்களைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
உலகளாவிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் திட்டத்தை முறியடித்ததற்காக, தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, போதைப்பொருள் கடத்தல் கும்பலை, அவர்கள் எங்கிருந்து செயல்பட்டாலும் ஒடுக்கவும் நமது இளைஞர்களைப் பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: …
Read More »பத்ம விருதுகள் – 2026-க்கான பரிந்துரைகளை 2025 ஜூலை 31 வரை அனுப்பலாம்
2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள் 2025 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக உயர்ந்த குடிமை விருதுகளாகும். 1954-ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. இந்த விருது ‘சிறப்புப் பணிகளை’ அங்கீகரிக்கிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, வர்த்தகம் மற்றும் தொழில் …
Read More »மகாயோகி கோரக்நாத் பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் திறந்து வைத்தார்
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மகாயோகி கோரக்நாத் பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூலை 1, 2025) அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதில் அரங்கம், கல்வித் தொகுதி மற்றும் பஞ்சகர்ம கேந்திராவின் திறப்பு விழாவும், புதிய பெண்கள் விடுதிக்கான அடிக்கல் நாட்டுதலும் அடங்கும். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், பரோபகாரம் மற்றும் பொது நலனை …
Read More »தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1853 கோடி மதிப்பிலான 4-வழி தேசிய நெடுஞ்சாலை (NH-87) அமைக்கும் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.1,853 கோடி செலவில் கலப்பின ஆண்டுத்தொகை மாதிரியில் அமைக்கப்பட உள்ளது. தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான 2-வழி தேசிய நெடுஞ்சாலை எண் 87, அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை …
Read More »புதிய குற்றவியல் சட்டங்களின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் நடைபெற்ற “நீதி அமைப்பில் நம்பிக்கையின் பொற்காலம்” நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா உரையாற்றினார்
புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற “நீதி அமைப்பில் நம்பிக்கையின் பொற்காலம்” நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில், தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வி.கே. சக்சேனா, முதல்வர் திருமதி. ரேகா குப்தா, மத்திய உள்துறை செயலாளர் மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர் உள்ளிட்ட …
Read More »பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகள் 2025 திட்டம் அறிவிப்பு
நடப்பாண்டில் (2025) பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமர் விருது வழங்கும் திட்டத்தை மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இன்று (01.07.2025) அறிவித்துள்ளது. பிரதமரின் விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பதிவு செய்வதற்கும், சமர்ப்பிப்பதற்குமான இணையதளம் 2025 அக்டோபர் 2-ம் தேதி முதல் முறையாகத் தொடங்கப்படும், அதன் பிறகு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். இந்த விருதுத் திட்டம் இந்தியா முழுமையான வளர்ச்சியை எட்டுவதை ஊக்குவிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தரவு, ஆவண …
Read More »
Matribhumi Samachar Tamil