Wednesday, July 22 2026 | 02:19:59 PM
Breaking News

ஐஎன்எஸ் துஷில், செஷல்ஸின் போர்ட் விக்டோரியா சென்றடைந்தது

ஐஎன்எஸ் துஷில் போர்க்கப்பல்,  2025 பிப்ரவரி 7 அன்று ஆப்பிரிக்காவின் செஷல்ஸ் துறைமுகத்திற்குச் சென்றடைந்தது. இந்திய தூதரக அதிகாரிகளும் இந்திய கடற்படை படைப்பிரிவு அதிகாரிகளும் கப்பலை வரவேற்றனர். இந்த துறைமுக அழைப்புப் பயணத்தின் போது, கட்டளை அதிகாரி கேப்டன் பீட்டர் வர்கீஸ், செஷல்ஸுக்கான இந்திய தூதர் திரு கார்த்திக் பாண்டே, செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் மைக்கேல் ரோசெட் ஆகியோர் பங்கேற்றனர். செஷல்ஸ் உடனான இந்தியாவின் இருதரப்பு உறவு வரலாற்று ரீதியான …

Read More »

‘புதுமையே சிறந்த எதிர்காலத்திற்கான பாதை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு – ஏரோ இந்தியா கண்காட்சியின் ஒரு பகுதியாக பிப்ரவரி 11 அன்று விமானப்படை நடத்துகிறது

தற்சார்பை அடைய அரசு கொள்கைகள் அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்துறையின் திறனைப் பயன்படுத்தும் நோக்கில் விமானப்படை (IAF) செயல்பட்டு வருகிறது. உதிரி பாகங்கள், உபகரணங்களின் நிலைத்தன்மையை புதுமைப்படுத்துவதில் கணிசமான வெற்றி எட்டப்பட்டுள்ளது. சிக்கலான எதிர்கால தொழில்நுட்பங்கள், ஆயுத அமைப்புகள், விண்வெளி களம் ஆகியவற்றை நோக்கி இப்போது  கவனம் செலுத்தப்படுகிறது. ஏரோ இந்தியா என்பது முதன்மையான விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றாகும். இது விமானத் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் தயாரிப்புகளை …

Read More »

இந்திய கடற்படை தலைவர்கள் மாநாடு 2025

இந்திய கடற்படை தலைவர்களின் மாநாடு புதுதில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் 2025 பிப்ரவரி 08 முதல் 09 வரை நடைபெற்றது. இதில் எட்டு முன்னாள் கடற்படை தளபதிகளும்  தற்போதைய கடற்படை தளபதியும் கலந்து கொண்டனர். முன்னாள் தளபதிகளின் கூட்டு அனுபவத்திலும் அறிவிலும் இருந்து பயனடைவதும், கடற்படையின் சமீபத்திய முன்னேற்றங்கள், கொள்கை முயற்சிகள் குறித்து அவர்களுக்கு விளக்குவதும் மாநாட்டின் நோக்கமாகும். பிப்ரவரி 08 அன்று, முன்னாள் தலைவர்களுக்கு கொள்கை முன்முயற்சிகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உள்ளிட்ட …

Read More »

பெங்களூரு யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் ஏரோ இந்தியா 2025 கண்காட்சி – பாதுகாப்புத் துறை அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ இந்தியாவின் 15-வது பதிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை (2025 பிப்ரவரி 10) அன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைக்கிறார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு, உலகளாவிய விண்வெளி நிறுவனங்களின் அதிநவீன தயாரிப்புகளுடன் இந்தியாவின் வான்வழி வலிமையையும் உள்நாட்டு அதிநவீன கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தும். ‘தற்சார்பு இந்தியா’, இந்தியாவில் தயாரிப்போம்- உலகிற்காக தயாரிப்போம்’ என்ற தொலைநோக்கு பார்வைகளுக்கு ஏற்ப, இந்த …

Read More »

மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் வழங்க சிறப்புத் திட்டம்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-ன் போது பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் (ரேஷன் பொருட்கள்) வழங்குவது மத்திய அரசின் சிறப்புத் திட்டமாகும். நேஃபெட் (NAFED) எனப்படும் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் சார்பில் கோதுமை மாவு, பருப்பு வகைகள், அரிசி, பிற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. பக்தர்கள் வாட்ஸ்அப் அல்லது போன் அழைப்பு மூலமாக ரேஷன் பொருட்களை வாங்க ஆர்டர் செய்யலாம். …

Read More »

வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது – வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் : குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

விவசாயிகள் உணவு உற்பத்தி செய்து வழங்குபவர்கள் என்றும், அவர்கள் யாருடைய உதவியையும் நம்பியிருக்கக்கூடாது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று கூறியுள்ளார். ராஜஸ்தானின் சித்தோர்கரில் அகில மேவார் பிராந்திய ஜாட் மகாசபா நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படும்போது, நாட்டின் நிலைமை மேம்படும் என்றார். விவசாயிகள், தங்கள் வலுவான செயல்பாடுகளால், அரசியல் வலிமையையும் பொருளாதார திறனையும் கொண்டுள்ளனர் என அவர் …

Read More »

குடியரசுத் தலைவர் நாளை பிரயாக்ராஜ் செல்கிறார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (2025 பிப்ரவரி 10) உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் செல்கிறார். பிரயாக்ராஜுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர், சங்கத்தில் புனித நீராடி வழிபாடு நடத்துவார். அக்ஷய்வத், ஹனுமான் கோவில் ஆகியவற்றில் அவர் வழிபாடு செய்யவுள்ளார். மேலும் டிஜிட்டல் கும்பமேளா அனுபவ மையத்தையும் திருமதி திரௌபதி முர்மு பார்வையிடுவார்.

Read More »

பாதுகாப்பான குடியேற்றம் தொடர்பான விழிப்புணர்வு நடைப் பயணம்: குடியேற்றப் பாதுகாப்பு அலுவலகம் சென்னையில் நடத்தியது

சென்னை, எலியட்ஸ் கடற்கரையில் இன்று (2025 பிப்ரவரி 08) பாதுகாப்பான குடியேற்றத்திற்கான விழிப்புணர்வு  நடைப் பயணத்தை வெளியுறவு அமைச்சகத்தின் குடியேற்றப் பாதுகாப்பு அலுவலகத்தின் (POE) தமிழ்நாடு பிரிவு ஏற்பாடு செய்தது. இந்த நடைப்பயணம் (வாக்கத்தான்) தமிழ்நாடு முழுவதும் ஒரு மாத கால விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.  ‘பாத்து போங்க’, என்ற பெயரிலான இந்த ஒரு மாத கால விழிப்புணர்வு இயக்கத்தில் மக்களுக்கு பாதுகாப்பான, சட்டப்பூர்வ குடியேற்ற நடைமுறைகள் குறித்தும், …

Read More »

தமிழ்நாடு ஆளுநர் 16 வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மை பாரத் (என்ஒய்கேஎஸ்) உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து 16 வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற முகாமை சென்னையில் நடத்துகின்றன. இந்த முகாமினை இன்று (08/02/2015) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்,  ஜார்க்கண்ட் …

Read More »

பிரதமரின் பட்டியல் சமூக உதய திட்டம் குறித்த மத்திய ஆலோசனைக் குழுவிற்கு மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை தாங்கினார்

பிரதமரின் பட்டியல் சமூக உதய திட்டத்துக்கான  (பிஎம்- அஜய்) மத்திய ஆலோசனைக் குழுவின்  கூட்டம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதிலும், இந்தியா முழுவதும் உள்ள பட்டியல் சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட உத்திகளை வகுப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. டாக்டர் வீரேந்திர குமார், திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முழுமையாக விவாதித்தார், …

Read More »