புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தேசிய பயோமாஸ் திட்டத்தின் கட்டம்-I-ன் கீழ் பயோமாஸ் எனப்படும் உயிரி எரிபொருள் திட்டத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இது 2021–22 முதல் 2025–26 வரையிலான நிதியாண்டிற்குப் பொருந்தும். இந்தத் திருத்தங்கள் தூய்மையான எரிசக்தி தீர்வுகளை ஊக்குவித்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், இந்தியா முழுவதும் பயோமாஸ் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. புதிய கட்டமைப்பின் கீழ், காகித கோப்புகள் மூலமான பணிகளைக் குறைத்தல், ஒப்புதல் நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற பல செயல்முறைகளை அமைச்சகம் எளிமைப்படுத்தியுள்ளது. இது இந்த தொழில்துறையில் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள தங்கள் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இந்த மாற்றங்கள், 2070-ம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் பரந்த இலக்கை அடையவும், பயிர்க் கழிவு மேலாண்மை தொடர்பான முன்னேற்றத்தை அடையவும் பங்களிக்கும். இந்த திருத்தத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, எஸ்சிஏடிஏ போன்ற உயர் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பதிலாக ஐஓடி அடிப்படையிலான கண்காணிப்பு தீர்வுகள் அல்லது காலாண்டு தரவு சமர்ப்பிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு செய்வதாகும். இந்த செலவு குறைந்த நடவடிக்கை, குறிப்பாக சிறு வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. மேலும், மத்திய நிதி உதவி (CFA) அம்சங்களின் கீழ் மானிய விநியோக வழிமுறை செயல்திறன் அடிப்படையிலானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றப்பட்டுள்ளது. முழு அளவில் திறன் வாய்ந்த முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழு நிதி உதவியைப் பெறும். அதே நேரத்தில் குறைந்த செயல்திறனுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விகிதாசார அடிப்படையில் நிதி கிடைக்கும். இந்தத் திருத்தங்கள் பயோமாஸ் திட்டத்தை சீராக செயல்படுத்துவதற்கும், செயல்பாட்டுக்கு வந்த ஆலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிதி உதவியை சரியான நேரத்தில் வழங்குவதற்கும் மட்டுமல்லாமல், இந்த துறை முழுவதையும் ஊக்குவிக்கும்.
Read More »மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலமும் – சி-டாக் நிறுவனமும் இணைந்து டிஜிட்டல் திறன் இடைவெளியைக் குறைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்கின்றன
மேம்பட்ட டிஜிட்டல் திறன்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், கல்வி, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப அதற்கான தொழில்நுட்பத் திறன் அடிப்படையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மெட்ராஸ் ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலம் – சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் சி-டாக் இணைந்து டிஜிட்டல் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. சி-டாக் நிறுவனத்தின் வலுவான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் …
Read More »சென்னை ஐஐடி சான்சிபார், ரசாயன செயல்முறைப் பொறியியலில் புதிய இளநிலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியுள்ளது
சென்னை ஐஐடி 2025-26ம் கல்வியாண்டில் ரசாயன செயல்முறைப் பொறியியலில் புதிய இளங்கலை அறிவியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சான்சிபார் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நான்காண்டு முழுநேர இளநிலைப் பட்டப்படிப்பில் இந்தியர்கள் உள்பட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ரசாயனப் பொறியியல் அடிப்படையில் செயல்முறை ஆய்வகப் பணிகள், தொழில்துறை சார்ந்த திட்டங்கள், பல்வேறு துறைகளுக்கு இடையே கற்றலை ஊக்குவிக்கும் விருப்பப் பாடங்கள் என விரிவான பாடத்திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உயர்ந்த கல்வித் தரத்துடன், உலகளாவிய முக்கியத்துவத்தை உறுதிசெய்யும் வகையில் சென்னை ஐஐடி, ஐஐடிஎம் சான்சிபார், நிறுவனங்களைச் …
Read More »குறுகிய, சுயநல இலக்கு வேண்டாம் – சமூகத்திற்காக, மனிதகுலத்திற்காக, தேசத்திற்காக இலக்கை நிர்ணயுங்கள் : குடியரசு துணைத்தலைவர்
குறுகிய சுயநல இலக்கை கைவிட்டு, சமூகத்திற்காக, மனிதகுலத்திற்காக, தேசத்திற்காக ஒரு இலக்கைக் நிர்ணயித்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் அறிவுறுத்தியுள்ளார். சமூகத்திற்காக உழைத்தவர்கள், சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள், சமூகத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மட்டுமே, இன்றும் நாம் நினைவில் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியின் 156-வது நிறுவுனர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எப்போதும் தேசத்திற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தேசியவாதத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டார். 5,000 ஆண்டுக்கால …
Read More »பதான்கோட்டிலிருந்து கத்தாருக்கு ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் ஏற்றுமதி
நாட்டின் தோட்டக்கலை விளைபொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பஞ்சாப் மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து, ஜூன் 23-ம் தேதி பஞ்சாபில் உள்ள பதான்கோட்டிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு ஒரு மெட்ரிக் டன் ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …
Read More »அவசரநிலையின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையிலும், ஜனநாயகத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் ‘அரசியலமைப்பு படுகொலை தினத்தை’ கலாச்சார அமைச்சகம் மற்றும் தில்லி அரசு கடைப்பிடிக்கிறது
இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக நினைவுகூரப்படும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டு 50-ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகம் தில்லி அரசுடன் இணைந்து ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அஸ்வினி …
Read More »கோவா ஷிப்யார்ட் நிறுவனம் தயாரிக்கும் எட்டு விரைவு ரோந்து கப்பல்களில் முதலாவது கப்பலான ஆதம்யா கடலோரக் காவல் படையுடன் இணைக்கப்பட்டது
கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் எட்டு விரைவு ரோந்து கப்பல்கள் கட்டும் திட்டத்தின் கீழ் முதலாவது விரைவு ரோந்து கப்பலான ‘ஆதம்யா’ இன்று (ஜூன் 26ம் தேதி) கோவாவில் இந்திய கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்டது. விரைவு ரோந்து கப்பல்கள் என்பவை கடலோரக் காவல் படையில் உள்ள கப்பல்களில் பிட்ச் ப்ரொப்பல்லர்கள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கியர்பாக்ஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது வகை கப்பல்கள் ஆகும். இதன் சிறந்த சூழற்சித்திறன், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை ஆகியவை …
Read More »ஒவ்வொரு தீவிரவாதச் செயலும் குற்றமே, நியாயப்படுத்த முடியாதது; கூட்டு பாதுகாப்புக்காக தீவிரவாத அச்சுறுத்தலை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர்
சீனாவின் கிங்டாவோ நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையில் உள்ள விரிவான வரையறைகளை எடுத்துரைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர், பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு இயக்குநர் …
Read More »யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழுக் கூட்டம் – மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்
யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (26.06.2025) டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. யானைகள் அதிகம் வாழும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், கள வல்லுநர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன், யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், நாட்டில் யானைகளின் …
Read More »‘ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானைச் சேர்ந்த ₹9 கோடி மதிப்பிலான 1,115 மெட்ரிக் டன் பொருட்களை ஏற்றிச் சென்ற 39 கொள்கலன்களை டிஆர்ஐ பறிமுதல் செய்துள்ளது
நாட்டின் புலனாய்வு துறைகள் மேற்கொண்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) “ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்” என்ற பெயரில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மூன்றாம் நாடுகள் வழியாக, அதாவது துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் வழியாக அனுப்பப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம் இதுவரை ₹9 கோடி மதிப்பிலான 1,115 மெட்ரிக் …
Read More »
Matribhumi Samachar Tamil