ஸ்ரீ மன்னத்து பத்மநாபன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரை நினைவு கூர்ந்தார். சமுதாயத்தை மேம்படுத்தவும், மகளிருக்கு அதிகாரம் அளிக்கவும், மனித சமுதாயத்தின் துயரங்களைக் களையவும் அயராது பாடுபட்ட உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்டவர் அவர் என்று திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது: “ஸ்ரீ மன்னத்து பத்மநாபனின் பிறந்த தினத்தையொட்டி அவரை நினைவு கூர்கிறேன். …
Read More »நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்: பிரதமர்
நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது என்று கூறிய பிரதமர், அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது: “நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் உள்ளது. இந்த துயரத்திலிருந்து அவர்கள் மீளும் போது அவர்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்கட்டும்”
Read More »2025 ஜனவரி 16 அன்று லோக்பால் தின கொண்டாட்டம்
14.03.2024 அன்று நடைபெற்ற இந்திய லோக்பால் கூட்டத்தில், 16.01.2014 அன்று பிரிவு 1 (4) இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் இந்தியாவின் லோக்பால் என்ற அமைப்பு நிறுவப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 அன்று ‘லோக்பால் தினம்’ கடைப்பிடிக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி லோக்பால் தினத்தின் முதல் நிகழ்வு 2025 ஜனவரி 16 அன்று, தில்லி கண்டோன்மென்ட் மானெக்ஷா மையத்தில் நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சஞ்சீவ் கன்னா இதில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார். இந்திய லோக்பால் அமைப்பின் இரண்டாவது தலைவராக …
Read More »ஜவுளி அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
முதல் தரத்திலான இந்திய பருத்திக்கு தனித்துவ அடையாளத்தை வழங்குவதற்காக கஸ்தூரி காட்டன் இந்தியாவின் வர்த்தக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஜவுளி, ஆடைத் தொழில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், ஏற்றுமதியை அதிகரிப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், இந்தியாவின் வளமான பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் தொழில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமும், தொழில்துறை உற்பத்தியில் 10 சதவீதமும், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் …
Read More »மின்சார அமைச்சகம்: 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் ஆகியவற்றில் வரலாற்று முன்னேற்றங்களுடன் 2024-ம் ஆண்டு இந்தியாவின் மின் துறைக்கு ஒரு மைல்கல் சாதனை ஆண்டாகும். 250 ஜிகாவாட் மின் தேவையை பூர்த்தி செய்ததில் இருந்து 2024-25 நிதியாண்டில் தேசிய அளவில் எரிசக்தி பற்றாக்குறையை வெறும் 0.1% ஆகக் குறைத்தது வரை, அமைச்சகம் நிலையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை நிரூபித்தது. எரிசக்தி பாதுகாப்பு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம், அனைவருக்கும் நம்பகமான, மலிவான மின்சாரத்தை உறுதி செய்வதற்கான அரசின் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. • இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தி …
Read More »நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்: 2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு விதமான பணிகளை கையாளும் அலுவல்கள் அனைத்தும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த அமைச்சகமானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. அவ்வப்போது சில கூடுதல் பொறுப்புகள், செயல்பாடுகள் இந்த அமைச்சகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள்/ நிகழ்வுகள்/ சாதனைகள் பின்வருமாறு: நாடாளுமன்ற அவைகளின் அலுவல்கள் மக்களவை மாநிலங்களவை தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களின் …
Read More »இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி முகமை யின் 2025-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை: சந்தைப்படுத்துதலில் புத்தாக்கங்கள், சில்லறை விற்பனைக்கான ஊக்கம், உலகளாவிய விரிவாக்கம்
2025-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு பிரதீப் குமார் தாஸ், அனைத்து தொழிலாளர்களிடமும் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். அந்நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் டாக்டர் பிஜய் குமார் மொஹந்தி, தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி திரு அஜய் குமார் சஹானி மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான நிதியுதவி குறித்த நடவடிக்கைகளில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நம்பிக்கை கொண்டுள்ளதாக திரு தாஸ் தெரிவித்துள்ளார். பசுமை அமோனியா, நீர்மின் திட்டங்கள், சூரிய சக்தி உற்பத்திக்கான தகடுகள் பிரதமரின் வேளாண் எரிசக்தி பாதுகாப்பு, மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தி திட்டங்களுக்கு சந்தை ஆதரவை வழங்குவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் செயல்பாட்டை அவர் எடுத்துரைத்தார். இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்க நடவடிக்ககள் குறித்து எடுத்துரைத்த திரு தாஸ், அந்நிய செலாவணி நிதியுதவி மூலம் பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான உபகரணங்கள் தயாரிப்பதை ஊக்குவிக்கிறது என்று கூறினார். வீடுகளின் மேற்கூரைகளில் சூரிசக்தி தகடுகள் அமைக்கும் பிரதமரின் திட்டம், பிரதமரின் வேளாண் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் சில்லறை வர்த்தகத்தை மேம்படுத்துவதிலும் மின்சார வாகனங்கள், எரிசக்தி சேமிப்பு, பசுமை தொழில்நுட்பங்கள், திறன் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வளர்ந்து வரும் பிரிவுகளிலும் கவனம் செலுத்தும்.
Read More »குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம்: 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், 6.30 கோடிக்கும் அதிகமான நிறுவனங்களுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடும் ஆற்றல் வாய்ந்த துறையாக உருவெடுத்துள்ளது. தொழில்முனைவோரை ஊக்குவித்து, குறைந்த மூலதன செலவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக. மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து, கதர், கிராமம், கயிறுத் தொழில்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இந்த …
Read More »ஜல் சக்தி அமைச்சகம் ஜல்சக்தி மற்றும் துப்புரவு துறை 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
தூய்மை இந்தியா இயக்கம் – ஊரக வளர்ச்சி தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினமான 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவதன் மூலம், கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம் மத்திய அரசின் நிதியுதவியுடன் 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் விளைவாக, 2019-ம் ஆண்டு …
Read More »2024-ம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறையின் செயல்பாடுகள்
பணப் பரிமாற்ற ஒப்பந்தம் – சார்க் நாடுகளுக்கான புதிய கட்டமைப்பு: 2024-ம் ஆண்டில், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, உலகளாவிய பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கான செயல்பாடுகளை மேற்கொண்டது. சார்க் அமைப்பில் உள்ள நாடுகளுக்கிடையில் புதிய பணப்பரிமாற்ற வசதிக்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பில் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ரூபாயின் சில்லரை பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது அமெரிக்க டாலர் / யூரோ பரிவர்த்தனைகளுக்கான கட்டமைப்புடன் இணைந்து செயல்படும். இத்தகைய நடவடிக்கைகள் இந்திய ரூபாயின் உலகளாவிய பரிமாற்றத்தை ஊக்குவிக்கும். இந்தியா- உஸ்பெகிஸ்தான், இந்தியா-குவைத் நாடுகளுக்கிடையிலான நிதி சார் ஒப்பந்தங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிசெய்யும் வகையிலும், பொருாளதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலும், இந்தியா- உஸ்பெகிஸ்தான் நாடுகளிடையே நிதி சார் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பு, நிதி சார் சிக்கல்களுக்கான தீர்வுகள் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இந்தியா-குவைத் நாடுகளிடையே முதலீட்டு பணிக்குழு உருவாக்கம் இவ்விரு நாடுகளுக்கிடையேயான நிதி பரிவர்த்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய முதலீட்டாளர் நல நிறுவனம், மாநிலங்களுக்கிடையே நிதி சார் ஒத்துழைப்பையும், பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது. மேலும், அந்நிய நேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் அதன் செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்பட்டு, தடையற்ற பொருளாதார மேலாண்மை நடவடிக்கைகளை உறுதிசெய்கிறது. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான புதிய பண பரிமாற்றத்திற்கான ஒப்பந்தம் 2024-27 இந்தியா-உஸ்பெகிஸ்தான், இந்தியா-குவைத் நாடுகளிடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் நிலையான பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளில் முன்னேற்றம் 2024-ம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சியில் புதுமையான முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தன. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மூலம் இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்தியுள்ளது.
Read More »
Matribhumi Samachar Tamil