வர்த்தகம் – தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி (ICI – அடிப்படை ஆண்டு 2011-12), எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரித் துறை நவம்பர் 2023-ல் 185.7 புள்ளிகளுடன் இருந்தது. அதை ஒப்பிடுகையில் நவம்பர் 2024-ல், 199.6 புள்ளிகளுடன் 7.5% (தற்காலிக புள்ளி விவரம்) குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 162.5 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது ஏப்ரல்-நவம்பர் 2024 காலகட்டத்தில் நிலக்கரி தொழில்துறை குறியீடு …
Read More »ஜனவரி 3-ந் தேதி தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்
‘அனைவருக்கும் வீடு’ என்ற தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜனவரி 3 ஆம் தேதி மதியம் 12:10 மணியளவில் தில்லி, அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஜுகி ஜோப்ரி (ஜே.ஜே) தொகுப்புகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிடுகிறார். அதன்பிறகு, மதியம் 12:45 மணியளவில், அவர் தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். ஜே.ஜே. தொகுப்புகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கும் பிரதமர், தில்லி அசோக் விஹாரில் …
Read More »தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் மகாராஷ்டிர அரசின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய மகாராஷ்டிர மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் பதிவிட்ட எக்ஸ் பதிவுக்கு பதிலளித்த மோடி கூறியிருப்பதாவது: தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கான மகாராஷ்டிரா அரசின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இது நிச்சயமாக ‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ ஊக்குவிப்பதோடு, மேலும் பல …
Read More »சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் ஓஎன்டிசி பங்களித்துள்ளது: பிரதமர்
சிறு தொழில்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் டிஜிட்டல் வணிகத்துக்கான திறந்தநிலை வலைப்பின்னலின்(ஓ.என்.டி.சி.) பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, வளர்ச்சி மற்றும் செழிப்பை முன்னெடுத்துச் செல்வதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றும் என்று குறிப்பிட்டார். சமூக ஊடகத்தில் பியூஷ் கோயல் எழுதிய பதிவுக்கு பதிலளித்த மோடி பின்வருமாறு கூறியுள்ளார். “ஓஎன்டிசி சிறு வணிகங்களை மேம்படுத்துவதற்கும் மின்னணு வணிகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது, இதனால் வளர்ச்சி …
Read More »ஸ்ரீ மன்னத்து பத்மநாபன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்
ஸ்ரீ மன்னத்து பத்மநாபன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரை நினைவு கூர்ந்தார். சமுதாயத்தை மேம்படுத்தவும், மகளிருக்கு அதிகாரம் அளிக்கவும், மனித சமுதாயத்தின் துயரங்களைக் களையவும் அயராது பாடுபட்ட உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்டவர் அவர் என்று திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது: “ஸ்ரீ மன்னத்து பத்மநாபனின் பிறந்த தினத்தையொட்டி அவரை நினைவு கூர்கிறேன். …
Read More »நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்: பிரதமர்
நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது என்று கூறிய பிரதமர், அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது: “நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் உள்ளது. இந்த துயரத்திலிருந்து அவர்கள் மீளும் போது அவர்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்கட்டும்”
Read More »2025 ஜனவரி 16 அன்று லோக்பால் தின கொண்டாட்டம்
14.03.2024 அன்று நடைபெற்ற இந்திய லோக்பால் கூட்டத்தில், 16.01.2014 அன்று பிரிவு 1 (4) இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் இந்தியாவின் லோக்பால் என்ற அமைப்பு நிறுவப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 அன்று ‘லோக்பால் தினம்’ கடைப்பிடிக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி லோக்பால் தினத்தின் முதல் நிகழ்வு 2025 ஜனவரி 16 அன்று, தில்லி கண்டோன்மென்ட் மானெக்ஷா மையத்தில் நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சஞ்சீவ் கன்னா இதில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார். இந்திய லோக்பால் அமைப்பின் இரண்டாவது தலைவராக …
Read More »ஜவுளி அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
முதல் தரத்திலான இந்திய பருத்திக்கு தனித்துவ அடையாளத்தை வழங்குவதற்காக கஸ்தூரி காட்டன் இந்தியாவின் வர்த்தக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஜவுளி, ஆடைத் தொழில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், ஏற்றுமதியை அதிகரிப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், இந்தியாவின் வளமான பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் தொழில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமும், தொழில்துறை உற்பத்தியில் 10 சதவீதமும், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் …
Read More »மின்சார அமைச்சகம்: 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் ஆகியவற்றில் வரலாற்று முன்னேற்றங்களுடன் 2024-ம் ஆண்டு இந்தியாவின் மின் துறைக்கு ஒரு மைல்கல் சாதனை ஆண்டாகும். 250 ஜிகாவாட் மின் தேவையை பூர்த்தி செய்ததில் இருந்து 2024-25 நிதியாண்டில் தேசிய அளவில் எரிசக்தி பற்றாக்குறையை வெறும் 0.1% ஆகக் குறைத்தது வரை, அமைச்சகம் நிலையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை நிரூபித்தது. எரிசக்தி பாதுகாப்பு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம், அனைவருக்கும் நம்பகமான, மலிவான மின்சாரத்தை உறுதி செய்வதற்கான அரசின் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. • இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தி …
Read More »நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்: 2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு விதமான பணிகளை கையாளும் அலுவல்கள் அனைத்தும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த அமைச்சகமானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. அவ்வப்போது சில கூடுதல் பொறுப்புகள், செயல்பாடுகள் இந்த அமைச்சகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள்/ நிகழ்வுகள்/ சாதனைகள் பின்வருமாறு: நாடாளுமன்ற அவைகளின் அலுவல்கள் மக்களவை மாநிலங்களவை தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களின் …
Read More »
Matribhumi Samachar Tamil