Thursday, December 19 2024 | 09:20:01 AM
Breaking News

Tag Archives: Amit Shah

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் தியாகிகளுக்கு மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா மரியாதை செலுத்தினார்

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நக்சலைட்டுகளை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று மரியாதை செலுத்தினார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரையும், அவர் சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நக்சல் தீவிரவாதத்திற்கு எதிரான துணிச்சலான போராட்டத்தில் மிக உயர்ந்த தியாகம் செய்த 1,399 தியாகிகளை கௌரவிக்கும் …

Read More »

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ராய்ப்பூரில் சத்தீஸ்கர் காவல்துறையினருக்கு ‘குடியரசுத்தலைவரின் வண்ணம்’ என்னும் கொடியை வழங்கினார்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட  மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை  அமைச்சருமான திரு அமித் ஷா மதிப்புமிக்க ‘குடியரசுத்லைவரின் வண்ணம்’ என்னும் கொடியை ராய்ப்பூரில் அம்மாநில காவல்துறைக்கு  வழங்கினார். இந்த விழாவில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் திரு விஜய் சர்மா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர்  திரு அமித் ஷா தமது உரையில், எந்தவொரு ஆயுதப் படைக்கும், சிறந்த அங்கீகாரமான இந்த விருதைப் பெறுவதில் உள்ள மகத்தான பெருமையை எடுத்துரைத்தார். சத்தீஸ்கர் காவல்துறை தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளுக்குள் இந்த கவுரவத்தை பெற்றிருப்பதாக பாராட்டிய அவர்,  குடியரசுத் தலைவரிடம் அது பெற்றுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றார். சத்தீஸ்கர் காவல்துறை நாட்டின் மிகச்சிறந்த படைகளில் ஒன்று என்றும், ஆர்வம், தைரியம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது என்றும் திரு ஷா பாராட்டினார். வெள்ளி விழா ஆண்டில் ‘குடியரசுத்தலைவரின் விருதைப் பெறுவது படையின் இடைவிடாத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் பொதுமக்களுடனான ஆழமான தொடர்புக்கு ஒரு சான்றாகும் என்று அவர் வலியுறுத்தினார். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், நக்சலிசத்தை எதிர்த்துப் போராடுவதிலும், போதைப்பொருள் இல்லாத இந்தியாவுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் சத்தீஸ்கர் காவல்துறையின் முன்மாதிரியான சேவையை அவர் மேலும் பாராட்டினார். சத்தீஸ்கரில் அமைதி மற்றும் பாதுகாப்பை வளர்ப்பதில் இந்தப் படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை திரு ஷா புகழ்ந்தார். இன்று சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். சர்தார் பட்டேலின் இணையற்ற தைரியமும், உறுதியும்தான் நாட்டை ஒருங்கிணைத்தது என்று அவர் குறிப்பிட்டார். 370 வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேலின் முடிக்கப்படாத நோக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவேற்றினார், இதன் மூலம் காஷ்மீரை இந்தியாவுடன் நிரந்தரமாக ஒருங்கிணைத்தார் என்று திரு ஷா மேலும் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த தேசமும் இன்று மிகுந்த நன்றியுடன் சர்தார் படேலுக்கு அஞ்சலி செலுத்துகிறது என்றும் அவர் கூறினார். சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை திரு அடல் பிஹாரி வாஜ்பாய் நிறைவேற்றினார் என்று திரு அமித் ஷா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சத்தீஸ்கர் 2026 மார்ச் 31-க்குள் நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும் என்று உள்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். சத்தீஸ்கரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும் நக்சலிசத்தை ஒழிக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இந்த இலக்கை நோக்கி முன்னேறுவதில் சத்தீஸ்கர் காவல்துறையின் துணிச்சலை அவர் பாராட்டினார், மேலும் கடந்த ஆண்டில் நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க சாதனைகளை அவர் எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த ஆண்டு நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் 287 நக்சலைட்டுகளை அழித்துள்ளனர். 1,000 பேரை கைது செய்துள்ளனர், 837 நக்சலைட்டுகளை சரணடைய வைத்துள்ளனர். . கொல்லப்பட்டவர்களில் 14 பேர் நக்சல் தலைவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். நான்கு தசாப்தங்களில் முதல் முறையாக, நக்சல் வன்முறை காரணமாக பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் இறப்பு எண்ணிக்கை 100 க்கும் கீழே குறைந்துள்ளது என்று திரு ஷா எடுத்துரைத்தார், இதற்கு நக்சலிசத்திற்கு எதிரான மோடி அரசாங்கத்தின் கடுமையான கொள்கைகளே காரணம் என்றார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த தசாப்தத்தில், நக்சலிசம் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விளைவாக முந்தைய தசாப்தத்துடன் ஒப்பிடும்போது பாதுகாப்புப் பணியாளர்களின் உயிரிழப்புகளில் 73% குறைவு மற்றும் பொதுமக்கள் இறப்புகளில் 70% சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நக்சலிசத்திற்கு ஒரு தீர்க்கமான அடியை வழங்க மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்ததற்காக சத்தீஸ்கர் காவல்துறையையும் உள்துறை அமைச்சர் பாராட்டினார். மேலும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சத்தீஸ்கரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். 1951 ஆம் ஆண்டில் இந்திய கடற்படைக்கு குடியரசு தலைவரின் இந்த விருது முதன்முலாக  வழங்கப்பட்டது என்றும், இன்று, எந்தவொரு ஆயுதப்படையும் இந்த மதிப்புமிக்க கௌரவத்தைப் பெறுவதற்குத்  தகுதி பெற 25 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்ய வேண்டும் என்றும் திரு அமித் ஷா கூறினார். சத்தீஸ்கர் காவல்துறையின் 25 ஆண்டுகால சேவை, அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து கவுரவித்ததற்காக குடியரசுத் தலைவருக்கு அவர் நன்றி தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2026 மார்ச் 31 க்குள் சத்தீஸ்கரில் இருந்து நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசும் மாநில அரசும் உறுதிபூண்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தெரிவித்தார். நக்சலைட்டுகள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்றும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் சென்று சத்தீஸ்கரின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சத்தீஸ்கர் அரசு ஒரு சிறந்த சரணடைதல் கொள்கையை அமல்படுத்தியுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார், இது சரணடையும் ஒவ்வொரு நக்சலைட்டுக்கும் மறுவாழ்வு அளிக்க வகை செய்கிறது. திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களை உறுதியுடன் எதிர்த்துப் போராடுவதில் சத்தீஸ்கர் காவல்துறை குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். ஜனவரி 1, 2024 மற்றும் செப்டம்பர் 30, 2024 க்கு இடையில், சுமார் 1,100 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, இது 21,000 கிலோ கஞ்சா, 6,000 கிலோ ஓபியம் மற்றும் சுமார் 1,95,000 சட்டவிரோத மருந்துகள் பறிமுதல் செய்ய வழிவகுத்தது. மேலும், இந்த வழக்குகள் தொடர்பாக 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிஎன்டிபிஎஸ் (போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்களில் சட்டவிரோத கடத்தலைத் தடுப்பது) சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதில் சத்தீஸ்கர் முன்னணியில் உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். சத்தீஸ்கர் காவல்துறையின் ஒவ்வொரு அதிகாரியும், பணியாளர்களும் வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர் என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் சத்தீஸ்கரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். ‘குடியரசு தலைவரின் வண்ணம் ‘ என்பது வெறும் அலங்காரம் அல்ல, சேவை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம் என்று சத்தீஸ்கர் காவல்துறை பணியாளர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இந்தச் சின்னம் மீள்திறனுடன் எதிர்கொள்ள வேண்டிய எண்ணற்ற சவால்களை நினைவூட்டுவதாக செயல்படுகிறது என்று அவர் கூறினார். இது  ஒரு மரியாதை மட்டுமல்ல, ஒரு பொறுப்பும் கூட, சத்தீஸ்கர் காவல்துறையின் ஒவ்வொரு அதிகாரியும் இந்த பொறுப்பை நிலைநிறுத்துவார்கள் என்றும், தங்கள் கடமையை நிறைவேற்றுவதில் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டார்கள் என்றும் திரு அமித் ஷா வலியுறுத்தினார்.

Read More »