சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தைத் தொடங்கியுள்ளது. மேம்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த ஆராய்ச்சிக் கூடம், சென்னை ஐஐடி மற்றும் நாட்டின் ஆராய்ச்சி– தொழில்நுட்பத் திறன்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சென்னை ஐஐடி -ல் இருந்து 36 கி.மீ. தொலைவில், தையூரில் அமைக்கப்பட்டுள்ள ‘டிஸ்கவரி’ செயற்கைக்கோள் வளாகத்தில் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடல்சார் பொறியியல் போன்றவற்றில் உள்ள சவாலான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் சிறப்பு வசதிகள் …
Read More »