ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று (14.12.2025) யூத பண்டிகையான ஹனுக்காவின் முதல் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரமான இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையில் இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்துள்ள பிரதமர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் எதிரான உலகளாவிய போராட்டத்தை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “யூத பண்டிகையான ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாடிய மக்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா நிற்கிறது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது.”
Read More »புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலிய துணைப் பிரதமருடன் இருதரப்பு பேச்சு நடத்தினர்
புதுதில்லியில் 2025 ஜூன் 04 அன்று ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லஸுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சு நடத்தினார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை இரண்டு அமைச்சர்களும் கடுமையாகக் கண்டித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காப்புக்காக தாக்குதல் தொடுக்கும் இந்தியாவின் உரிமையை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் …
Read More »ஆஸ்திரேலியாவிற்கு முதல் முறையாக இந்திய மாதுளம் பழங்கள் கடல்வழியாக ஏற்றுமதி: அபேடா முன்முயற்சி
இந்தியாவின் விவசாய ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) அமைப்பானது அக்ரா ஸ்டார், கே பீ எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, கடல் வழியாக உயர்தர சங்கோலா, பாக்வா ஆகிய இந்திய மாதுளை ரகங்களை கடல்வழியாக முதல் முறையாக வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய விளைபொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். ஆஸ்திரேலியாவிற்கு மாதுளம் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான நிலையான …
Read More »இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமும் வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகி வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன
இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமும் வர்த்தக ஒப்பந்தமும் (இந்தியா-ஆஸ்திரேலியா ECTA) இரண்டு ஆண்டு குறிப்பிடத்தக்க வெற்றியை நிறைவு செய்துள்ளது, பரஸ்பர வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, இரு பொருளாதாரங்களின் பரஸ்பர திறனையும் இது வெளிப்படுத்துகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய இசிடிஏ வர்த்தக உறவுகளை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இரு நாடுகளிலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வணிகங்கள், வேலைவாய்ப்புகளுக்கு புதிய வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் அவர்களின் பொருளாதார ஒத்துழைப்பின் அடித்தளத்தை இது வலுப்படுத்துகிறது. …
Read More »
Matribhumi Samachar Tamil