Sunday, January 05 2025 | 06:56:59 AM
Breaking News

Tag Archives: BIS

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் “பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி

  இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம், ஆய்வகச் சேவைகளின் நலன், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இது சம்பந்தமாக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம்,” ” பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு ” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்னையில் இன்று ஏற்பாடு செய்துள்ளது.   இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய விஞ்ஞானி-F/மூத்த இயக்குனர், தலைவர் (சென்னை கிளை அலுவலகம்); ஸ்ரீமதி.ஜி.பவானி, தலைமை விருந்தினர், பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள் ஆகியோரை வரவேற்றார். இத்திட்டத்தின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்த அவர், தொழில்துறையின் நலனுக்காக “மானக் மந்தன்” என்ற தலைப்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு பிஐஎஸ் ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறினார். மேலும் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள் , வரைவுகளை உள்ளூர் உற்பத்தியாளர்கள், தொழில்துறையினர், …

Read More »