Saturday, January 10 2026 | 08:30:56 AM
Breaking News

Tag Archives: Bureau of Indian Standards

அறிவியல் ஆசிரியர்களுக்கு “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” குறித்த இரண்டு நாள் வழிகாட்டிப் பயிற்சித் திட்டம் – புதுச்சேரியில் இந்திய தரநிர்ணய அமைவனம் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை அலுவலகம் அறிவியல் ஆசிரியர்களுக்கு, “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் வழிகாட்டி பயற்சித் திட்டத்தை புதுச்சேரியில் நடத்துகிறது. இது இன்றும் (03.07.2025)  நாளையும் (04.07.2025) நடத்தப்படுகிறது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு ஸ்ரீஜித் மோகன், பங்கேற்பாளர்களை வரவேற்று, திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்பது, அடிப்படை அறிவியல் கருத்துக்களை தரப்படுத்தல் நடைமுறைகளுடன் இணைப்பதன் மூலம் மாணவர்களின் அறிவியல் புரிதலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட …

Read More »

“புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” – இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில் இன்று (24.01.2025) “புதிதாக பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை” நடத்தியது. பிஐஎஸ் தென்மண்டல துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் மீனாட்சி கணேசன், உரிமைதாரர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்தும் தரத்தைப் பேணுவது குறித்தும் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும் அதைத் தொடர்ந்து அறிமுக தொகுப்பு (Welcome Kit) வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்தத் தொகுப்பில் உரிமைதாரர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உரிமம் பெற்றவர்கள் மற்ற புதிய உரிமம் பெற்றவர்களுடனும், பிஐஎஸ் அதிகாரிகளுடனும் தகவல் பரிமாற்ற வாய்ப்பையும் …

Read More »

மின்மாற்றிகளின் சோதனை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் இன்று நடத்தியது

மின்மாற்றிகளின் சோதனை பற்றிய  கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் தேசிய சோதனை அமைப்புடன் இணைந்து சென்னையில் இன்று நடத்தியது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் பிராந்திய ஆய்வகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்தது. நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தேசிய சோதனை அமைப்பின் இயக்குநர் திரு எம் சுரேஷ் பாபு மற்றும் இந்த அமைப்பின் தென் மண்டல குழுவினர் கலந்து கொண்டனர்.       நிகழ்ச்சியின் தொழில்நுட்ப அமர்வில் விஞ்ஞானி கே. ஜெயராஜ், டிரான்ஸ்ஃபார்மர்களின் சோதனை பற்றிய சுருக்கமான விளக்கக்காட்சியை வழங்கினார். ஐஎஸ் 1180 (பகுதி 1)-ன் படி டிரான்ஸ்ஃபார்மர்களில் …

Read More »

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் “பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி

  இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம், ஆய்வகச் சேவைகளின் நலன், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இது சம்பந்தமாக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம்,” ” பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு ” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்னையில் இன்று ஏற்பாடு செய்துள்ளது.   இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய விஞ்ஞானி-F/மூத்த இயக்குனர், தலைவர் (சென்னை கிளை அலுவலகம்); ஸ்ரீமதி.ஜி.பவானி, தலைமை விருந்தினர், பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள் ஆகியோரை வரவேற்றார். இத்திட்டத்தின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்த அவர், தொழில்துறையின் நலனுக்காக “மானக் மந்தன்” என்ற தலைப்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு பிஐஎஸ் ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறினார். மேலும் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள் , வரைவுகளை உள்ளூர் உற்பத்தியாளர்கள், தொழில்துறையினர், …

Read More »