குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Read More »குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு – தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார். நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். 1,300- க்கும் மேற்பட்ட பாதயாத்திரைகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பது சர்தார் வல்லபாய் படேல் ஏற்றிய நீடித்த ஒற்றுமையின் சுடரை நிரூபித்தது என்று அவர் குறிப்பிட்டார். 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் படேலின் வரலாற்று சாதனையை அவர் நினைவுகூர்ந்தார். “அகண்ட பாரதத்தின் வலுவான அடித்தளத்தை ஒன்றிணைத்து அமைத்ததற்காக இந்தியாவின் இரும்பு …
Read More »காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்
தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே உள்ள பழமையான கலாச்சார இணைப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக சிறப்பு செய்தியை வெளியிட்டார். கடந்த 2022- ம் ஆண்டு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் முன்முயற்சி, கங்கை மற்றும் காவேரியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை ஒன்றிணைக்கும் முக்கியமான தேசிய தளமாக …
Read More »நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கான பாராட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இன்று முதல் முறையாகத் தலைமை தாங்கிய குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த நாள் பெருமை சேர்க்கும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். “அவையின் சார்பாகவும், என் சார்பாகவும், உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று திரு மோடி கூறினார். ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த திரு ராதாகிருஷ்ணன் …
Read More »குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், குருக்ஷேத்திரத்தில் அகில பாரதிய தேவஸ்தான சம்மேளனத்தில் உரையாற்றினார்
ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் இன்று (30 நவம்பர் 2025) நடைபெற்ற சர்வதேச கீதை மஹோத்சவம் 2025-ன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட அகில பாரதிய தேவஸ்தான சம்மேளனத்தில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசிய அவர், “வேதங்களின் பூமி” என்று கொண்டாடப்படும் குருக்ஷேத்திரத்தின் புனிதமான மண்ணில் நிற்பதில் மிகுந்த பெருமை அடைவதாகக் கூறினார். பகவத் கீதையின் தெய்வீக ஞானத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வழங்கிய இடமாக இந்த புனித இடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போற்றப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். அதர்மம் எவ்வளவு சக்திவாய்ந்ததாகத் தோன்றினாலும், தர்மம் இறுதியில் அதர்மத்தை வெல்லும் என்பதையே குருக்ஷேத்திரம் நினைவூட்டுவதாக அவர் கூறினார். பகவத் கீதை என்பது ஒரு மதத்துக்கான வேதம் அல்ல என்றும் நீதி தவறாத வாழ்க்கை, துணிச்சலான செயல்பாடு, ஞான உணர்வு ஆகியவற்றுக்கான உலகளாவிய வழிகாட்டி நூல் என்றும் தெரிவித்தார். செல்வம் அல்லது பிற உலக சாதனைகளை விட நல்ல குணம் மிக முக்கியமானது என்று அவர் கூறினார். மனிதகுலத்தை நல்லொழுக்கத்துடன் வழிநடத்தும் நூல் கீதை என்றும் நீதிக்கான அர்ப்பணிப்பை இது நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். …
Read More »ஆந்திர மாநிலம் பாலசமுத்திரத்தில் குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகளிடையே குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (23.11.2025) ஆந்திரப் பிரதேசத்தின் பாலசமுத்திரத்தில் உள்ள தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமியான என்ஏசிஐஎன்-னில் (NACIN) பல்வேறு குடிமைப் பணிகளைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றினார். 2024-ம் ஆண்டு பாலசமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட என்ஏசிஐஎன் வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்ததை நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர், இந்தியாவின் சுங்க வரி, சரக்கு – சேவை வரி (ஜிஎஸ்டி) நிர்வாகத்தில் திறன் மேம்பாட்டிற்கு முக்கிய மையமாக இந்த நிறுவனம் உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டார். அகில இந்திய குடிமைப் பணி சேவைகளின் தந்தை சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த ஆண்டை நாடு, இந்த ஆண்டு …
Read More »ஐதராபாதில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் 2025-ம் ஆண்டுக்கான முதலாவது ராமோஜி சிறப்பு விருதுகளைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வழங்கினார்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் இன்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான முதலாவது ராமோஜி சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். ராமோஜி சிறப்பு விருதுகள் ஏழு பிரிவுகளில் வழங்கப்பட்டன: கிராமப்புற மேம்பாடு – திருமதி அம்லா அசோக் ருயா; இளைஞர் அடையாளம் – திரு ஸ்ரீகாந்த் பொல்லா; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – பேராசிரியர் மாதவி லதா …
Read More »மனோரமா நியூஸ் நியூஸ்மேக்கர் விருது – மத்திய இணையமைச்சர் திரு சுரேஷ் கோபிக்கு வழங்கினார் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
புதுதில்லியில் இன்று (16.11.2025) நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான மனோரமா நியூஸ் நியூஸ்மேக்கர் விருது வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, மத்திய சுற்றுலா, பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சரும் புகழ்பெற்ற திரைப்பட நடிகருமான திரு சுரேஷ் கோபிக்கு இந்த மதிப்புமிக்க விருதை வழங்கினார். குடியரசு துணைத் தலைவர் தமது உரையில், சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் உள்ள தனித்துவமான சவால்களை எடுத்துரைத்தார். இந்த இரு துறைகளிலுமே திரு சுரேஷ் கோபி பெற்றுள்ள சிறந்த வெற்றியை அவர் பாராட்டினார். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நாட்டில் நேர்மறையான தகவல்களை முன்னிலைப்படுத்துவதில் ஊடகங்களின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். மேலும் குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பதில் பத்திரிகைகளின் பொறுப்பையும் அவர் வலியுறுத்தினார். விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில், உண்மையிலிருந்து போலிச் செய்திகளைப் பிரிப்பது மிகவும் கடினமாகி வருவதாக அவர் மேலும் கூறினார். நமது ஜனநாயகத்தில் பத்திரிகைகளும் ஊடகங்களும் மிகவும் பொறுப்பான பங்கை வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தூய்மையான இதயத்துடன் உண்மையைப் பேசுபவர்கள், வாழ்நாள் முழுவதும் தவம் செய்பவர்களை விடவும், தர்மங்களைச் செய்பவர்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று கூறிய திருவள்ளுவரின் திருக்குறள் கருத்துகளை குடியரசு துணைத் தலைவர் நினைவு கூர்ந்தார். திருவள்ளுவரின் காலத்தால் அழியாத இந்த தத்துவத்தைப் பின்பற்றுமாறு பத்திரிகைகளை அவர் கேட்டுக் கொண்டார். மனோரமா குழுமத்தின் நீடித்த பாரம்பரியத்தை எடுத்துரைத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், உண்மை, மொழிப் பற்று, கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், மலையாள மொழிக்கான அதன் பங்களிப்புகளையும் பாராட்டினார்.
Read More »
Matribhumi Samachar Tamil