Sunday, January 11 2026 | 08:16:23 AM
Breaking News

Tag Archives: Celebration

மகா கும்பமேளா: எல்லைகளைத் தாண்டிய கொண்டாட்டம்

மஹா கும்பமேளாவுக்கான பினாரின் பயணம் ஒரு கனவுடன் தொடங்கியது. துருக்கி நாட்டின் குடிமகளான அவர், இந்தியாவின் வளமான கலாச்சாரம் பற்றி ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். மஹா கும்பமேளா குறித்த நம்பிக்கை, பாரம்பரியம், மனிதநேயம் ஆகியவற்றின் சங்கமம் பற்றிய கதைகளை நீண்டகாலமாக அவர் கேட்டிருந்தார். 2025 ஜனவரியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித இடத்தில் நின்றபோது அவரது கனவு நனவாகியது. பினார், பாரம்பரிய இந்திய உடையை அணிந்து, கங்கையில் புனித நீராடினார். இது சனாதன தர்மத்தில் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்ட …

Read More »

தேசிய நுகர்வோர் தின கொண்டாட்டம் புதுதில்லியில் திரு பிரலாத் ஜோஷி தலைமையில் நாளை நடைபெறுகிறது

ஒவ்வொரு ஆண்டும், தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 அன்று பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இந்த நாள் இந்தியாவில் நுகர்வோர் இயக்கத்தின் மாறிவரும் முக்கியத்துவத்தை குறிக்கிறது. இந்த நாளில்தான் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நுகர்வோரின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், மோசடி,  சுரண்டல் ஆகியவற்றிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதிருந்து, வளர்ந்து வரும் சந்தைச் சூழலில் நுகர்வோர் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சினைகள், போக்குகள் மற்றும் சவால்களை …

Read More »

‘கடற்படை சிவிலியன்ஸ் ஆண்டு – 2024’ கொண்டாட்டம்

இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலையில் கடற்படை சிவிலியன்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை கவுரவிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும், 30 டிசம்பர் 2024 அன்று புதுதில்லியில் உள்ள டிஆர்டிஓ பவன்  டாக்டர். டிஎஸ் கோத்தாரி ஆடிட்டோரியத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர்  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். இந்தியக் கடற்படையானது 2024ஆம் ஆண்டை ‘கடற்படை சிவிலியன்கள் ஆண்டாக’  அறிவித்தது, அதன் நிர்வாகம் மற்றும் அதன் சிவிலியன் பணியாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துகிறது. இந்த அர்ப்பணிப்பு ஆண்டு, சிவிலியன் மனிதவள நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் சிவிலியன் பணியாளர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான கவனம் செலுத்தும் நடவடிக்கைகளைக் கண்டது. ஆண்டு முழுவதும், நிர்வாகத் திறனை அதிகரிக்கவும், டிஜிட்டல் மாற்றத்தை தழுவவும், புதுமையான பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்தவும், நலன்புரி செயல்பாடுகளை மேம்படுத்தவும் பல முயற்சிகள் செயல்படுத்தப்பட்டன. ‘கடற்படை சிவிலியன்ஸ் ஆண்டில்’ எட்டப்பட்ட முக்கிய மைல்கற்கள், சிவில் பணியாளர்கள் இயக்குநரகத்திற்கான குடிமக்கள் சாசனம், சிவிலியன் பணியாளர் மேலாண்மை குறித்த திருத்தப்பட்ட மனிதவள கையேடு மற்றும் கடற்படை சிவில் மனிதவள மேலாண்மைக்கான பார்வை ஆவணம் போன்ற முக்கிய கொள்கைகள் மற்றும் ஆவணங்களை வெளியிடுதல் ஆகியவை அடங்கும். கடலில் கப்பல்களில் பணிபுரியும் சிவிலியன் பணியாளர்களுக்கு காப்பீடு வழங்குதல் மற்றும் மும்பையில் உள்ள 21 தொழிற்துறை பிரிவுகளுக்கு சிஜிஎச்எஸ்  வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்புப் பயிலரங்குகள்  மற்றும் பயிற்சித் திட்டங்களை நடத்துவதன் மூலம் சிவிலியன்  பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாடு வலியுறுத்தப்பட்டது. கடற்படை சிவிலியன்களுக்கான iGOT தளத்தில் பயிற்சி தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிதி நன்மைகளை வலுப்படுத்துவதை நோக்கி; பஜாஜ் லைஃப் இன்சூரன்ஸ் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிவிலியன் பணியாளர்களின் ஆயுள் காப்பீட்டுக்காக கையெழுத்திடப்பட்டுள்ளது.  அனைத்து கடற்படை சிவிலியன்களுக்கும் பாதுகாப்பு சம்பள தொகுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘கடற்படை சிவிலியன்கள் ஆண்டு’, தேசத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு சிறப்பை உறுதி செய்வதில் அதன் சிவிலியன் பணியாளர்களின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதில் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முயற்சியானது அனைத்து பங்குதாரர்களுக்கும் வலுவான மற்றும் உள்ளடக்கிய சூழலை வளர்ப்பதற்கான ஒரு சான்றாக விளங்குகிறது.

Read More »