மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று (22.02.2025) சண்டிகர் சென்று, மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முக்கிய நிறுவனங்களை ஆய்வு செய்தார். தமது பயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் தொழிலாளர் நலத்துறை அலுவலகம், சண்டிகரில் உள்ள இஎஸ்ஐசி (ESIC) மாதிரி மருத்துவமனைக்கு ஆகியவற்றுக்புச் சென்று, அவற்றின் தற்போதைய பணிகளை மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். தொழிலாளர் நல அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சருக்கு …
Read More »சண்டிநகர் விமானப்படை நிலையத்தின் கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் கருஞ்சிவப்பு தொப்பி (மெரூன் பெரெட்) சம்பிரதாய அணிவகுப்பு நடைபெற்றது
விமானப்படையின் சிறப்புப் படையான கருட்’ கமாண்டோக்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கும் வகையில், கருஞ்சிவப்பு தொப்பி (மெரூன் பெரெட்) அணிந்து செல்லும் சம்பிரதாய அணிவகுப்பு இன்று (21 டிசம்பர் 2024) சண்டிநகர் விமானப்படை நிலையத்தின் கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் (GRTC) நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக விமானப் பணியாளர் செயல்பாடுகளின் (போக்குவரத்து – ஹெலிகாப்டர்) துணைத் தலைவர் அணிவகுப்பை பார்வையிட்டார். சிறப்பு விருந்தினர் பேசுகையில் ‘கருட்’ வீரர்களுக்கு அவர்களின் வெற்றிகரமான தேர்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். இளம் கமாண்டோக்களிடையே உரையாற்றிய அவர் , வேகமாக மாறிவரும் பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்புப் படை திறன்களை மேம்படுத்துவது, கடுமையான பயிற்சி அளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வெற்றி பெற்ற ‘கருட்’ பயிற்சியாளர்களுக்கு மெரூன் பெரட், கருட் தேர்ச்சி பேட்ஜ் ஆகியவற்றை வழங்கிய அவர், விருது பெற்றவர்களுக்கு கோப்பைகளையும் வழங்கினார். மெரூன் பெரெட் சடங்கு அணிவகுப்பு என்பது ‘கருட்’ வீரர்களுக்கு பெருமை, சாதனையின் தருணமாகும். உயரடுக்கு ‘கருட்’ படையில் இணைந்துள்ள ‘இளம் சிறப்புப் படையினர், இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் திறனுக்கு மேலும் பலம் சேர்ப்பார்கள்.
Read More »குடியரசுத் துணைத் தலைவர் சண்டிகர் பயணம்
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ஒருநாள் பயணமாக சண்டிகர் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 5-வது சர்வதேச முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், குடியரசுத் துணைத் தலைவருமான திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.
Read More »
Matribhumi Samachar Tamil