சென்னை, எலியட்ஸ் கடற்கரையில் இன்று (2025 பிப்ரவரி 08) பாதுகாப்பான குடியேற்றத்திற்கான விழிப்புணர்வு நடைப் பயணத்தை வெளியுறவு அமைச்சகத்தின் குடியேற்றப் பாதுகாப்பு அலுவலகத்தின் (POE) தமிழ்நாடு பிரிவு ஏற்பாடு செய்தது. இந்த நடைப்பயணம் (வாக்கத்தான்) தமிழ்நாடு முழுவதும் ஒரு மாத கால விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. ‘பாத்து போங்க’, என்ற பெயரிலான இந்த ஒரு மாத கால விழிப்புணர்வு இயக்கத்தில் மக்களுக்கு பாதுகாப்பான, சட்டப்பூர்வ குடியேற்ற நடைமுறைகள் குறித்தும், …
Read More »சென்னையில் 14-வது மாநில அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி
தமிழ்நாடு அஞ்சல் வட்டம், தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்துடன் இணைந்து சென்னையில் 14-வது மாநில அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி “TANAPEX 2025” ஐ ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை, செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தின் சமுதாயக் கூடத்தில் நடத்துகிறது. “அணிவகுக்கும் அஞ்சல் தலைகள், அணைக்கும் நினைவலைகள்” என்பது இந்தக் கண்காட்சியின் கருப்பொருளாகும். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு என்.முருகானந்தம், 29-ம் தேதி, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரி திருமதி மாரியம்மா தாமஸ் முன்னிலையில், “டான்பெக்ஸ் 2025” அஞ்சல் தலை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இக்கண்காட்சியின் …
Read More »ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை சென்னையில் “ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில்துறை பாதுகாப்பு” குறித்த 4-வது பயிற்சி திட்டத்தை நடத்துகிறது
மத்திய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் துறையால் “ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனப் பொருட்கள் சார்ந்த தொழிற்சாலை பாதுகாப்பு” என்ற தலைப்பில் 4-வது பயிற்சி திட்டம் 2025 ஜனவரி 23-24 தேதிகளில் சென்னையில் பெட்ரோ கெமிக்கல்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐபிடி) நடத்தப்பட்டது. இது மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) மையமாகும். இது ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் பெரும் விபத்து ஏற்படக்கூடிய …
Read More »ரசாயனப் பொருட்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழில்துறை பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது
“ரசாயனம், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று (23.01.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கியது. மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சிஷிர் சின்ஹா இதனைத் தொடங்கி வைத்தார். ரசாயனம், பெட்ரோ ரசாயன துறையில் பாதுகாப்பு தரங்களை உறுதிப்படுத்த தேவையான பயிற்சியை வலுப்படுத்துவதற்கு இந்தப் பயிற்சி முகாம் முன்னுரிமை அளிக்கிறது. மத்திய அரசின் ரசாயனம், பெட்ரோலிய ரசாயனத் துறை நாடு முழுவதும் உள்ள 2393 தொழிற்சாலைகளுக்கும் ரசாயனப் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்க …
Read More »இந்திய விளையாட்டு ஆணையம், 2025-26-ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வை சென்னையில் நடத்துகிறது
மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டிற்கு கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் திறமையான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது. 12 முதல் 18 வயது பிரிவில் தடகள வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு 01.02.2025 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. 2010-ம் ஆண்டுக்கும் 2013-ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களுக்கான ஆடவர் கால்பந்து பிரிவு …
Read More »சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள நிப்மெட் நிறுவனத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு
சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD- நிப்மெட்) நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி சி மோகன் தலைமையிலான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, 21.01.2025 அன்று ஆய்வு மேற்கொண்டது. முட்டுக்காடு நிப்மெட் இயக்குநர் டாக்டர் நச்சிகேதா ரவுட், இந்நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் சேவை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பேருந்து சேவை நடைமுறைகள், ஹைட்ரோ தெரபி சிகிச்சை முறைகள் குறித்து …
Read More »சென்னை உள்ளிட்ட ஏழு விமான நிலையங்களில் விரைவு குடியேற்றப் பதிவு சேவைகளுக்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அகமதாபாதில் நாளை தொடங்கி வைக்கிறார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரான திரு அமித் ஷா, 2025 ஜனவரி 16-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் ‘விரைவு குடியேற்றப் பதிவு சேவைத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். உள்துறை அமைச்சர் ஏற்கனவே 2024 ஜூன் 22-ம் தேதி புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்திலிருந்து இந்தத் திட்டத்தை …
Read More »இந்த தசாப்தத்தில் முன் எப்போதும் இல்லாத மாற்றத்தின் தூணாக ஆளுகையின் 10 அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன: சென்னையில், மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில், 10 அடிப்படைக் கோட்பாடுகள் இந்த தசாப்தத்தில் முன் எப்போதும் இல்லாத மாற்றத்தின் தூணாக இருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். தீர்க்கமான தலைமை, மூல காரண பகுப்பாய்வு, விளைவு சார்ந்த நடவடிக்கை, சட்டத்தைப் பின்பற்றுதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, காலக்கெடுவுக்குள் செயல்படுத்துதல், பிரச்சினைகளுக்கு முன்னுரிமை, பொறுப்புக்கூறல் மற்றும் கண்காணிப்பு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, புதுமையான நிதி மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் கூட்டாண்மை ஆகியவை அடிப்படைக் கோட்பாடுகளில் …
Read More »மின்மாற்றிகளின் சோதனை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் இன்று நடத்தியது
மின்மாற்றிகளின் சோதனை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் தேசிய சோதனை அமைப்புடன் இணைந்து சென்னையில் இன்று நடத்தியது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் பிராந்திய ஆய்வகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்தது. நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தேசிய சோதனை அமைப்பின் இயக்குநர் திரு எம் சுரேஷ் பாபு மற்றும் இந்த அமைப்பின் தென் மண்டல குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொழில்நுட்ப அமர்வில் விஞ்ஞானி கே. ஜெயராஜ், டிரான்ஸ்ஃபார்மர்களின் சோதனை பற்றிய சுருக்கமான விளக்கக்காட்சியை வழங்கினார். ஐஎஸ் 1180 (பகுதி 1)-ன் படி டிரான்ஸ்ஃபார்மர்களில் …
Read More »மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனங்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கல்வி நிறுவனத்திற்கு (NIEPMD) வருகை
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனங்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனத்தை இன்று பார்வையிட்டார். அமைச்சரின் இந்தப் பயணத்தின் போது, என்.ஐ.இ.பி.எம்.டி.க்கு வழங்கப்பட்ட தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுமத்தின் (என்ஏஏசி) சான்றிதழை வெளியிட்டார். இது ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் கொண்ட நபர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைக் குறிக்கிறது. ஆட்டிசம் மேலாண்மை குறித்த இ- புத்தகத்தையும் வெளியிட்டார். டாக்டர் வீரேந்திர குமார் என்.ஐ.இ.பி.எம்.டி வளாகத்தில் தேசிய திறந்தநிலை பள்ளியின் (என்.ஐ.ஓ.எஸ்) மையத்தை திறந்து வைத்தார். இந்த மையம் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு கல்வியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப தரமான கல்வி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை பெறுவதை உறுதி செய்கிறது. இந்த ஆண்டு பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி பெற்று பதக்கங்களை வென்ற பல்வேறு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் விடாமுயற்சியைப் பாராட்டிய அவர், திறமையை வளர்த்து கொள்வதிலும், விளையாட்டில் உள்ளடக்கிய தன்மையை ஊக்குவிப்பதிலும் நிறுவனத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது, என்ஏஏசி சான்றிதழ், பயிற்சி, ஆராய்ச்சி, மறுவாழ்வு சேவைகளில் உயர் தரத்தை பராமரிப்பதற்கான என்.ஐ.இ.பி.எம்.டி.-ன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று அமைச்சர் கூறினார். என்.ஐ.ஓ.எஸ் மையத்தை தொடங்குவதன் மூலம், கல்வி கற்பதில் உள்ள இடைவெளியை குறைப்பதிலும், வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிப்பதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார். உள்ளடக்கிய, நெகிழ்வு தன்மையுடன் கூடிய கற்றல் முறைகளை வழங்குவதன் மூலம், ஒரு சமமான, உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் அரசின் பார்வையுடன் ஒத்துப்போகிறது. பல்வேறு குறைபாடுகள் கொண்ட திறமையான நபர்களை ஊக்குவிக்கும் வகையில் என்.ஐ.இ.பி.எம்.டி மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
Read More »
Matribhumi Samachar Tamil