பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில்(UNFCCC) இந்தியா தனது 4வது ஈராண்டு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை 30 டிசம்பர் 2024 அன்று சமர்ப்பித்தது. இந்த 4 ஆவது அறிக்கையில் மூன்றாவது தேசிய தொடர்பியல் புதுப்பிக்கப்பட்டதுடன் 2020 -ம் ஆண்டிற்கான தேசிய பசுமைக்குடில் வாயு இலக்குகளில் அண்மைத் தகவல்கள் சேர்க்கப்பட்டும் உள்ளன. இந்தியாவின் தேசிய சூழ்நிலைகள், தணிவிப்பு நடவடிக்கைகள், தடைகள், இடைவெளிகள், தொடர்புடைய நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் வளர்ப்புக்கான தேவைகள் பற்றிய தகவல்களையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சர் திரு பூபேந்தர் …
Read More »வானிலை முறைகளில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள்
நாடு முழுவதும் பருவநிலை மாற்றத்தை அரசு கவனத்தில் கொண்டு, அதன் தாக்கத்தை மதிப்பிடவும், குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பன்முக அணுகுமுறையானது நாட்டின் வானிலை முறைகளில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் சாத்தியமான தாக்கங்களை தணிவிப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம்: இது 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது பருவநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்யும் அதே நேரத்தில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது. …
Read More »பருவநிலைகளைத் தாங்கி வளரும் திறன் கொண்ட நெல் ரகங்களை உருவாக்குதல்
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னோடித் திட்டமான ‘பருவநிலை மாற்ற தாங்குதிறன் வேளாண்மைக்கான தேசிய கண்டுபிடிப்பு’ மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நெல் பயிரிடப்படும் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய தன்மையை ஒருங்கிணைந்த உருவகப்படுத்துதல் மாதிரியாக்க ஆய்வுகளை மேற்கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வானது பருவகாலங்களில் பயிரிடப்படும் மானாவாரி நெல் பயிர்களின் விளைச்சல் 2050-ம் ஆண்டில் 20% ஆகவும், 2080-ம் ஆண்டில் 47% ஆகவும் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பாசன நெல் சாகுபடி 2050-ம் ஆண்டில் 3.5% ஆகவும், 2080-ம் ஆண்டில் 5% ஆகவும் குறையக்கூடும். கடந்த 10 ஆண்டுகளில், மொத்தம் 668 நெல் வகைகள் (நெல்) உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 199 வகைகள் தீவிர மற்றும் பிற வகை பருவநிலைகளைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்களாகும். 103 நெல் வகைகள் வறட்சி, நீர் அழுத்தங்களை தாங்கி வளரக்கூடியவை, 50 நெல் வகைகள் வெள்ளம், ஆழமான நீர் நிலைகள், நீரில் மூழ்கும் தன்மையுடன் கூடியவை, 34 நெல் வகைகள் உப்புத்தன்மை காரத்தன்மை போன்ற நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டவை. 6 நெல் இரகங்கள் வெப்ப அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. 6 நெல் இரகங்கள் குளிர் அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. இதில் 579 நெல் இரகங்கள் பூச்சி மற்றும் நோய்களைத் தாங்கி வளரக்கூடியவை. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. பகீரத் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Read More »
Matribhumi Samachar Tamil