Saturday, December 06 2025 | 06:12:12 AM
Breaking News

Tag Archives: condoles

புதுதில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

புதுதில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர்  விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: “புதுதில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து  வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். …

Read More »

ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு மஹந்த் சத்யேந்திர தாஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு மஹந்த் சத்யேந்திர தாஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். மதச் சடங்குகள் மற்றும் வேதங்களில் வல்லுநராக மஹந்த் திகழ்ந்தார் என்றும், அவர் தனது முழு வாழ்க்கையையும் பகவான் ஸ்ரீ ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார் என்றும் திரு மோடி பாராட்டியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: “ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை …

Read More »

காமேஷ்வர் சௌபால் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

காமேஷ்வர் சௌபால் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு அளப்பரிய பங்காற்றிய அவர்,  ராமர் மீதான பக்திக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: பிஜேபியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அறங்காவலருமான காமேஷ்வர் சௌபால்-ன் மறைவு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. தீவிர ராம …

Read More »

மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சேவை, ஆன்மீகத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தொலைநோக்குப் பார்வையாளர் அவர் என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் அவரது பங்களிப்புகளைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் …

Read More »

திரு கர்சன்பாய் சோலங்கி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கர்சன்பாய் சோலங்கி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  திரு மோடி பதிவிட்டுள்ளதாவது: “குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கர்சன்பாய் சோலங்கியின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது எளிமையான வாழ்க்கைக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்காகவும் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். மறைந்த சோலங்கியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதேவேளையில், துயரத்தில் இருக்கும் …

Read More »

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சருடன் தாம் பேசியுள்ளதாகவும், இந்தத் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் திரு மோடி கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; “பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் நிகழ்ந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்பத்தினரை …

Read More »

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மறைவு தமக்கு ஆழ்ந்த மனவேதனையை அளிக்கிறது. சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதியான அவர், உலக அமைதி, நல்லிணக்கத்திற்காக அயராது பணியாற்றியவர். இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பு அளப்பரியது.  அவரை …

Read More »

ஒசாமு சுசூகி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

உலக வாகனத் தொழில்துறையில் புகழ்பெற்ற  ஒசாமு சுசுகி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஒசாமு சுசூகியின் தொலைநோக்குப் பார்வை உலகளாவிய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ், சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகளாவிய அதிகார மையமாக உருவெடுத்தது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு புதுமை, தொழில் விரிவாக்கத்தை மேற்கொண்டது. இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் …

Read More »

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட …

Read More »

எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

மலையாள திரைப்படம் மற்றும் இலக்கியத்தில் மிகவும் மதிப்புமிக்க நபர்களில் ஒருவரான திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் அவர்களின் படைப்புகள், மனித உணர்வுகளை ஆழமாக ஆராய்ந்தவை.  அவரது படைப்புகள் பல தலைமுறைகளை வடிவமைத்துள்ளன என்றும், மேலும் பலருக்கு அவை தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் …

Read More »