தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 2025 குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘Republic Day at Home-2025’ எனும் பெருமை மிகு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பட்டுவாடா செய்யும் பணியில், அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஜனவரி 26,2025 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த அழைப்பிதழ்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆயுஷ் மருத்துவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், எரிசக்தி பாதுகாப்பு வாகையர்கள், அரசுத் திட்டத்தின் பயனாளர்கள் மற்றும் தத்தமது களங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பொதுமக்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, துல்லியமாக உரிய நபரிடம் அவற்றை பட்டுவாடா செய்ய தமிழ்நாடு அஞ்சல் வட்டம் உறுதிபூண்டுள்ளது. பெருமைமிகு இப்பணியை செய்ய, அர்ப்பணிப்புமிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஒவ்வொரு அழைப்பிதழும் உரிய நேரத்தில், உரிய நபரிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யும். அர்ப்பணிப்போடு கூடிய சேவை புரிந்த இச்சாதனையாளர்கள் மற்றும் அரசு திட்டங்களின் பயனாளிகளின் செயலை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களுக்கு நாட்டின் நன்றியைக் கோடிட்டுக் காட்டும் விதமாகவும், அவர்கள் இந்த பெருமை மிகு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் ஒவ்வொரு அழைப்பிதழையும் கையாள்வதில் பெருமிதம் கொள்வது மட்டுமின்றி இவ்வழைப்பிதழ்களை வழங்கிய அலுவலகமும், பெறுநர்களும் முழு திருப்தி அடைவதை உறுதி செய்வதும் நோக்கமாகக் …
Read More »திரு அடல் அவர்களின் 100-வது பிறந்தநாளான இன்று, நமது நாட்டிற்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பு குறித்தும், அவரது முயற்சிகள் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்தும் சில எண்ணங்களை பதிவிட்டுள்ளேன்: பிரதமர்
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி தாம் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது: “இன்று, அடல் அவர்களின் 100-வது பிறந்தநாளில், நமது தேசத்திற்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பு குறித்தும், அவரது முயற்சிகள் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்தும் சில எண்ணங்களைப் பதிவிட்டுள்ளேன்.” भारत …
Read More »தேசிய ஆயுஷ் இயக்கத்தில் சித்த மருத்துவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது – ஆயுஷ் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா
பொது சுகாதாரத்திற்கான சித்த மருத்துவம் என்ற கருப்பொருளில் 8 வது சித்த தினம் 19 டிசம்பர் 2024 அன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கில் கொண்டாடப்பட்டது, இவ்விழாவை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழ்நாட்டின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா சிறப்பு …
Read More »உயிரித் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு
ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பு 2024 டிசம்பர் 12-ம் தேதி சர்வதேச அளவிலான ஆராய்ச்சி வலைதள அமைப்பில் புதிய உறுப்பினர்களாக பதினொரு துறை சார்ந்த வல்லுநர்களை தேர்ந்தெடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த 11 பேரில் 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் ஃபரிதாபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப மண்டல மையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரி தொழில்நுட்ப மண்டல மையத்தில் இணை பேராசிரியர்களாக பணி பரிந்து வரும் டாக்டர் பிரேம் கௌஷல், டாக்டர் …
Read More »
Matribhumi Samachar Tamil