Monday, December 08 2025 | 11:11:52 AM
Breaking News

Tag Archives: debate

நமது நாட்டில் தேசிய வாதத்திற்கு எதிராக பிராந்திய வாதம் பற்றி எவ்வாறு விவாதம் நடைபெற முடியும்? – குடியரசு துணைத்தலைவர் கேள்வி

நமது நாட்டில் தேசிய வாதத்திற்கு எதிராகப் பிராந்திய வாதம் பற்றி எவ்வாறு விவாதம் நடைபெற முடியும் என்று குடியரசு துணைத்தலைவர் கேள்வி  எழுப்பியுள்ளார்.  கர்நாடகாவின்  ரானேபென்னூரில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவில் தொடக்கவுரை ஆற்றிய அவர், பிரிவினைவாதத்தின் வேர்களைப் பார்க்கும் போது இதில் தேசவிரோதச்  சக்திகளின் கைகள் இருப்பதை நீங்கள் காணமுடியும் என்றார்.  பருவநிலை மாற்றத்தை விடவும் மோசமான சவால்களை நாம் இதனால் எதிர்கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட எனக்குத் தயக்கமில்லை என்று …

Read More »

நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாவிட்டால், அது பொருத்தமற்றதாக மாறிவிடும்: குடியரசு துணைத்தலைவர்

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இல்லாவிட்டால் அவை நடவடிக்கைகள் அர்த்தமற்றதாக இருக்கும்  என்று  குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். மக்கள் பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும்  ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ஜனநாயக மாண்புகளைக் காக்க உதவிடும் என்றும் கூறினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம்  ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்  என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய வனப்பணி பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு. தன்கர், வளர்ச்சி, சுற்றுச்சூழல் விவகாரங்களை அரசியல் ஆக்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். “தேசிய பாதுகாப்பு மற்றும்  நாட்டின் மேம்பாட்டுத்திட்டங்கள் குறித்த விவாதங்கள் ஜனநாயக மாண்புகளைக் காக்கும் வகையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். …

Read More »

“இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகால மகத்துவமிக்க பயணம்” என்ற விவாதத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஆற்றிய தொடக்க உரை

மாண்புமிகு உறுப்பினர்களே, 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாளன்று நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிறைவையொட்டி, இரண்டு நாள் கொண்டாட்டத்தை நாம் இன்று தொடங்குகிறோம். இது கொண்டாட்டத்திற்கான அழைப்பு மட்டுமல்ல, நமது பயணத்தை ஆழமாக பிரதிபலிப்பதும், நமது முன்னோக்கி செல்லும் பாதையை தீர்மானிக்கக் கூடியதுமாகும். இந்த அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக உள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த அவையில் நடைபெறும் நமது விவாதங்கள், இந்த நிகழ்வின் தீவிரத்தை பிரதிபலிக்கட்டும். 1.4 பில்லியன் மக்களுக்கு சேவை …

Read More »