மத்திய அரசு நிறுவனமான இந்தியா அஞ்சல் வங்கி, பிரயாகராஜில் நடைபெறும் மஹாகும்பமேளா-2025-ல் கோடிக்கணக்கான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு தடையற்ற டிஜிட்டல் வங்கிச் சேவைகளை வழங்குவதில் பெரும் பங்காற்றி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மீக ஒன்று கூடலான, மஹாகும்பமேளாவானது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன், இந்திய அஞ்சல் வங்கி, அனைவருக்கும் விரிவான வங்கிச் சேவைகள் கிடைக்க உதவுகிறது. நிதி பரிவர்த்தனைகளின் வசதி மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மஹாகும்பமேளா முழுவதும் 5 முக்கிய இடங்களில் …
Read More »மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் வழங்க சிறப்புத் திட்டம்
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-ன் போது பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் (ரேஷன் பொருட்கள்) வழங்குவது மத்திய அரசின் சிறப்புத் திட்டமாகும். நேஃபெட் (NAFED) எனப்படும் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் சார்பில் கோதுமை மாவு, பருப்பு வகைகள், அரிசி, பிற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. பக்தர்கள் வாட்ஸ்அப் அல்லது போன் அழைப்பு மூலமாக ரேஷன் பொருட்களை வாங்க ஆர்டர் செய்யலாம். …
Read More »பிஎஸ்என்எல்-லின் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகள், பிரயாக்ராஜில் மஹாகும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் வழங்குகின்றன
தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நம்பகமான இணைப்பை உறுதி செய்வதற்காக, 2025 மகாகும்பமேளாவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஎஸ்என்எல் மேளா பகுதியில் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைத்துள்ளது, அங்கு பக்தர்கள் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகளைப் பெறுகின்றனர். கும்பமேளாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு அந்தந்த வட்டங்களில் இருந்து இலவச சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாத்ரீகர் யாரேனும் தங்கள் சிம் கார்டை தொலைத்துவிட்டால். மேளா பகுதியிலேயே நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களில் இருந்தும் சிம் கார்டுகளை வழங்க பிஎஸ்என்எல் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம், யாத்ரீகர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எளிதாக தொடர்பில் இருக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சிம்கார்டுகள் வழங்கப்படுவதால், பக்தர்கள் மட்டுமின்றி, அங்கு நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரும் பயனடைகின்றனர். மகர சங்கராந்தி மற்றும் மௌனி அமாவாசை அன்று அமிர்த நீராடல்களின் போது, தகவல் தொடர்பு சேவைகளின் தரம் அப்படியே இருந்தது என்றும், அதிக கூட்டம் இருந்தபோதிலும், நெட்வொர்க் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், பிரயாக்ராஜ் வணிகப் பகுதிக்கான பிஎஸ்என்எல்- இன் முதன்மை பொது மேலாளர் திரு பி.கே.சிங் குறிப்பிட்டார்.
Read More »மஹா கும்பமேளா 2025: மவுனி அமாவாசை அன்று பக்தர்களின் பாதுகாப்பு, வசதிக்காக மேளா நிர்வாகம், காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள்
மஹா கும்பமேளா 2025-ல் மவுனி அமாவாசையின் புனித தருணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருவார்கள். அவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் வகையில், மேளா நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அவசர காலங்களில், பக்தர்களுக்கு உதவ மேளா நிர்வாகம், காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது குறித்து மஹாகும்பமேளா நகர் காவல்துறை கண்காணிப்பாளர் திரு ராஜேஷ் …
Read More »மகா கும்பமேளாவில் ஆயுஷ் சேவைகள் பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்தும்: மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்
வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா 2025 ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள நிலையில், ஆயுஷ் இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இந்த நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். முன் முயற்சிகள் குறித்து தமது திருப்தியை வெளிப்படுத்திய அமைச்சர், இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின் அனுபவத்தை வளப்படுத்துவதில் குழுவினரின் உறுதிப்பாட்டை பாராட்டினார். …
Read More »மகா கும்பமேளா 2025: பக்தர்களுக்கு வளமான, சிறந்த ஆன்மீகப் பயணம் காத்திருக்கிறது
“பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 45 நாட்களுக்கு மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இந்திய புலம்பெயர்ந்தோர் இந்தியா வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம், பின்னர் மகா கும்பமேளா, அதன் பிறகு குடியரசு தினம். இது ஒரு வகையான திரிவேணி, இந்தியாவின் வளர்ச்சியுடனும் பாரம்பரியத்துடனும் இணைவதற்கான சிறந்த வாய்ப்பு.” —நரேந்திர மோடி, பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா 2025, ஒரு …
Read More »
Matribhumi Samachar Tamil