சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருது 2025-ஐ குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2025, டிசம்பர் 03) புதுதில்லியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மாற்றுத்திறனாளிகள் சமமான தகுதியுடையவர்கள் என்று கூறினார். சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அவர்களுடைய சமமான பங்களிப்பை உறுதி செய்வதை தொண்டு சார்ந்த அம்சமாக இன்றி, சம்பந்தப்பட்டவர்களின் கடமை என்று குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் சமமான பங்கேற்புடன் மட்டுமே ஒரு சமூகம் உண்மையாக வளர்ச்சியடைந்ததாகக் கருத முடியும் என்று அவர் …
Read More »இந்தியாவின் காலணி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது – குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு
புதுதில்லியில் இன்று (டிசம்பர் 1, 2025) நடைபெற்ற காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியா தற்சார்பில் வளர்ச்சியடைந்து வரும் நாடாகவும், உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்தும் திறன் கொண்ட நாடாகவும் திகழ்கிறது என்று கூறினார். தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், காலணித் துறைக்கு சாம்பியன் துறை என்ற அந்தஸ்து, வர்த்தகம் மற்றும் …
Read More »நாட்டில் 250 மில்லியன் பேர் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டுள்ளனர் – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
புதுதில்லியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்ற அரசியல் சாசன தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 2015-ம் ஆண்டு பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 125-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்ட போது நவம்பர் 26-ம் நாளை அரசியல் சாசன தினமாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். அந்த முடிவு உண்மையில் அர்த்தமுடையது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்நாளில் நமது அரசியல் …
Read More »சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு
சத்தீஷ்கர் மாநில அரசின் சார்பில் அம்பிகாபூரில் இன்று (20.11.2025) நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்களித்துள்ள பழங்குடியினர் சமுதாயம் குறித்த அத்தியாயம் இந்திய வரலாற்றில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். பஸ்தரில் நடத்தப்பட்ட மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் அவர்களது தொன்மையான கலாச்சாரத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந:துள்ளது என்று கூறினார். பழங்குடியினரின் பாரம்பரியம், …
Read More »குடியரசுத் தலைவர் நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 20-ம் தேதி, சத்தீஸ்கர் அரசு அம்பிகாபூரில் ஏற்பாடு செய்துள்ள பழங்குடியினர் கௌரவ தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். நவம்பர் 21 ஆம் தேதி, செக்கந்தராபாத்தின் போலாரம் பகுதியில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் நடைபெறும் பாரதிய …
Read More »குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (19.11.2025) புது தில்லியில் நடைபெற்ற டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் உரையாற்றிய அவர், குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் சிறப்பாகத் திகழும் நிறுவனம் என டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தை பாராட்டினார். நவீன உள்கட்டமைப்பு, கல்வித் திறன் மேம்பாடு, பல்துறைகளில் கல்வி, ஆராய்ச்சி, புதுமைத்திறன் வளர்ப்பு, தொழில் நிறுவனங்களுடன் இணைப்பு போன்ற அம்சங்கள் மூலம் …
Read More »நீரை திறம்பட பயன்படுத்த வேண்டும் – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
6-வது தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பு – மக்கள் பங்களிப்பு விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். அப்போது பேசிய அவர், மனித நாகரிகத்தின் கதை என்பது ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், கடற்கரைகளிலும், பல்வேறு நீர் நிலைகளையொட்டி அமையும் குழுக்களின் கதையாகும் என்று தெரிவித்தார். நமது பாரம்பரியத்தில், ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் போற்றப்படுகின்றன என்று அவர் கூறினார். நமது தேசியப் பாடலில், பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய முதல் வார்த்தை சுஜலாம் என்பதாகும். எண்ணற்ற நீர் …
Read More »ஜார்க்கண்டின் சோஹ்ராய் கலை இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற கலை உத்சவ நிகழ்ச்சியில் ஜார்க்கண்டின் பாரம்பரியமான சோஹ்ராய் கலை முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த பத்து நாள் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்தியாவின் வளமான நாட்டுப்புற, பழங்குடி கலை மரபுகளைக் கொண்டாடுவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான கண்காட்சியைப் பார்வையிட்ட குடியரசுத்தலைவர், கலைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த கலைப்படைப்புகள் இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கின்றன என்றார். இயற்கையுடனான நமது தொடர்பு ஆழமானது என அவர் கூறினார். இந்த விலைமதிப்பற்ற மரபுகளை நிலைநிறுத்தும் கலைஞர்களைப் பாராட்டுவதாக அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (IGNCA-ஐஜிஎன்சிஏ) உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த ஜோஷி, பிராந்திய இயக்குநர் டாக்டர் குமார் சஞ்சய் ஜா, ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர் திருமதி சுமேதா சென்குப்தா உள்ளிட்டோர் நிறுவனத்தின் சார்பாக கலந்து கொண்டனர். ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர்களான திருமதி போலோ குமாரி ஓரான், திரு பிரபாத் லிண்டா, டாக்டர் …
Read More »தூய்மை நமது கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
தூய்மை நமது கலாச்சார, ஆன்மீக உணர்வுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். 2024-ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சர்வேக்ஷன்) விருதுகளை புதுதில்லியில் இன்று (17.07.2025) அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நமது நகரங்களில் தூய்மைக்கான முயற்சிகளை ஊக்குவிப்பதில் இந்த விருதுகள் வெற்றிகரமான நடைமுறையாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். கடந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய தூய்மை ஆய்வை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், …
Read More »தூரந்த் கோப்பைப் போட்டித் தொடருக்கான கோப்பைகளை குடியரசுத்தலைவர் அறிமுகம் செய்தார்
தூரந்த் கோப்பைப் போட்டித் தொடர் 2025-க்கான கோப்பைகளை குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று (04.07.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், விளையாட்டுகள் ஒழுக்கத்தை, மன உறுதியை, அணி உணர்வை மேம்படுத்துகின்றன என்றார். மக்களை, பிராந்தியங்களை, நாடுகளை இணைக்கும் தனித்துவ ஆற்றலை விளையாட்டுகள் கொண்டுள்ளன. இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சக்தி மிக்க கருவியாக அது விளங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் அல்லது இதர சர்வதேச போட்டிகளில் மூவண்ணக் கொடி பறக்கும் போது, இந்திய மக்கள் அனைவரும் உற்சாகம் அடைகின்றனர் என்று அவர் கூறினார். லட்சக்கணக்கானோரின் இதயங்களில் கால்பந்து விளையாட்டுக்கு சிறப்பிடம் இருப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார். இது வெறும் விளையாட்டு அல்ல; ஒரு பேரார்வம். கால்பந்து விளையாட்டு என்பது பொதுவான நோக்கத்தை (கோல்) அடைவதற்கு ஒன்றுபட்ட உத்தி, விடாமுயற்சி, உழைப்பு ஆகியவற்றைக் குறிப்பதாகும். தூரந்த் கோப்பை போன்ற நிகழ்வுகள், விளையாட்டு உணர்வை வளர்ப்பது மட்டுமின்றி, அடுத்த தலைமுறை கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் அவர்கள் வளர்வதற்கான தளத்தை வழங்குவதற்கும் உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார். தூரந்த் கோப்பையின் உணர்வை மேம்படுத்துவதிலும் அதனை உயிரோட்டமாக வைத்திருப்பதிலும் ஆயுதப்படைகளின் பங்களிப்பை குடியரசுத்தலைவர் பாராட்டினார்.
Read More »
Matribhumi Samachar Tamil