இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை பயிற்சி மையம் சார்பில், சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று (22/12/2024) காலை ஃபிட் இந்தியா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. மூத்த தடகள வீரர் சத்யகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். சுமார் 25-க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் ஃபிட் இந்தியா உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர் மாதவரம் ரவுண்டானா முதல் புழல் ஏரி வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Read More »