குஜராத் அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், ஆகஸ்ட் 10, 2025 அன்று குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள பர்தா வனவிலங்கு சரணாலயத்தில் உலக சிங்க தினம் – 2025 ஐ கொண்டாட உள்ளது. குஜராத் முதல்வர் திரு பூபேந்தர் படேல், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், குஜராத் வனத்துறை அமைச்சர் திரு முலுபாய் பெரா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது பிரதிநிதிகள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சிங்க தினம், உலகளவில் சிங்கங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குஜராத்தில், சௌராஷ்டிரா பகுதியில் மட்டுமே காணப்படும் ஆசிய சிங்கம் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார அதிசயமாகும். இந்த இனம் நீடித்திருப்பதையும் அதன் வளர்ச்சியையும் உறுதி செய்வதில் வனத்துறை அமைச்சகமும் குஜராத் மாநிலமும் புராஜெக்ட் லயன் மற்றும் மாநில அரசின் தலைமையின் தொடர்ச்சியான முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன. ‘காட்டின் ராஜா’ என்று அழைக்கப்படும் ஆசிய சிங்கத்தின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ‘உலக சிங்க தினம்’ என்ற பிரமாண்டமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த கம்பீரமான விலங்குகள் சௌராஷ்டிராவின் 11 மாவட்டங்களில் சுமார் 35,000 சதுர கி.மீ பரப்பளவில் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு முதல் 32% அதிகரித்துள்ளது, மே 2025 சிங்கங்களின் எண்ணிக்கை மதிப்பீட்டின்படி 891 ஆக உயர்ந்துள்ளது. போர்பந்தர் மற்றும் தேவபூமி துவாரகா மாவட்டங்களில் 192.31 சதுர கி.மீ பரப்பளவில் பர்தா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. ஆசிய …
Read More »குஜராத்தின் ஆனந்தில் கூட்டுறவு அமைச்சகத்தின் 4 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
குஜராத்தின் ஆனந்தில் இன்று (06.07.2025) நடைபெற்ற கூட்டுறவு அமைச்சகத்தின் 4 ஆண்டு நிறைவு விழா, சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா உரையாற்றினார். புதிதாக உருவாக்கப்பட்ட பல மாநில கூட்டுறவு அமைப்பான சர்தார் படேல் கூட்டுறவு பால் கூட்டமைப்பு லிமிடெட்டை திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். கேடாவில் அமுல் சீஸ் ஆலை …
Read More »குஜராத் மற்றும் ராஜஸ்தானின் மெகா உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஆய்வு
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மெகா உள்கட்டமைப்பு திட்டங்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு அமர்தீப் பாட்டியா தலைமை தாங்கினார். மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் திட்ட ஆதரவாளர்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், திட்டக் கண்காணிப்புக் குழு, மேம்பட்ட அமைச்சகங்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பு மூலம் பிரச்சினை தீர்வை …
Read More »குஜராத் மாநிலம் சூரத்தில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நெஞ்சக நோய் மருத்துவமனையை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்
குஜராத் மாநிலம் சூரத்தில் ஸ்ரீ பாபுலால் ரூப்சந்த் ஷா மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை, ஸ்ரீ பூல்சந்த்பாய் ஜெய்கிஷண்டாஸ் வகாரியா நெஞ்சகநோய் மருத்துவமனை ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, சூரத் ஒரு முக்கியமான நகரம் என்றும், கடந்த சில ஆண்டுகளில் நகரத்தில் பல தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார். குஜராத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மேற்கு இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாகவும் சூரத் …
Read More »குஜராத் மாநிலம் வாத்நகரில் உள்ள தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம், பிரேர்னா வளாகம், விளையாட்டு வளாகம் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாளை திறந்து வைக்கிறார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் வாத்நகரில் உள்ள தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம், பிரேர்னா வளாகம் மற்றும் விளையாட்டு வளாகத்தை நாளை (2025 ஜனவரி 16-ம் தேதி) திறந்து வைக்கிறார். இந்த தருணத்தில், பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்கிறார். வாத்நகரில் அமைக்கப்பட உள்ள பாரம்பரிய வளாக மேம்பாட்டுத் திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாடு, அழகுபடுத்தல் திட்டம் ஆகியவற்றின் துவக்க நிகழ்ச்சிக்கும் அமைச்சர் தலைமை …
Read More »மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் மான்சாவில் சுமார் ரூ. 241 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று குஜராத்தின் மான்சாவில் சுமார் ரூ .241 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திரு அமித் ஷா, குஜராத் முதலமைச்சராக திரு நரேந்திர மோடி இருந்தபோது, மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறை சவால்களை எதிர்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். …
Read More »
Matribhumi Samachar Tamil