Wednesday, December 10 2025 | 07:49:56 PM
Breaking News

Tag Archives: inaugurate

98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டை தில்லியில் பிரதமர் நாளை தொடங்கிவைக்கிறார்

அண்மையில் மராத்திய மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட உள்ள 98-வது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாட்டை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை  (21-ம் தேதி) பிற்பகல் நான்கரை மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இரண்டு நாட்கள் நடைபெறும இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்களும் புத்தகக் கண்காட்சியும், …

Read More »

சோல்(SOUL) தலைமைத்துவப் பண்பு மாநாட்டின் முதல் பதிப்பை தில்லியில் பிப்ரவரி 21-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 21-ம் தேதி காலை 11 மணியளவில் சோல் முதலாவது தலைமைத்துவ மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இம்மாநாட்டில் பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கே சிறப்பு விருந்தினராகச் சிறப்புரையாற்றுகிறார். பிப்ரவரி 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தலைமைத்துவ மாநாட்டில் அரசியல், விளையாட்டு, கலை, ஊடகம், ஆன்மீக உலகம், பொதுக் கொள்கை, …

Read More »

யுனானி தினத்தையொட்டி நாளை தில்லியில் ஒருங்கிணைந்த சுகாதார தீர்வுகள் குறித்த சர்வதேச மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

யுனானி தினத்தையொட்டி தில்லியில் நாளை இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைக்கிறார். மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ஆயுஷ் இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். ஆண்டுதோறும் பிப்ரவரி 11 அன்று, புகழ்பெற்ற யுனானி மருத்துவர், கல்வியாளர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஹக்கீம் அஜ்மல் கானின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில், யுனானி தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு முதன்மை ஆராய்ச்சி குழுமமான மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி குழுமம், …

Read More »

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் புதுதில்லியில் கைத்தறி மாநாட்டை 28.01.2025 அன்று தொடங்கி வைக்கிறார்

“கைத்தறி மாநாடு -மந்தன்” என்பது கைத்தறி துறையின் பல்வேறு பங்குதாரர்களுடன் ஒரு கலந்துரையாடும்  நிகழ்வாகும். கைத்தறி நெசவாளர்கள்/உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், வாங்குபவர்கள், வடிவமைப்பாளர்கள், கல்வியாளர்கள், தொடக்க நிறுவனர்கள், கைத்தறி தொழில்முனைவோர், கைத்தறி கூட்டுறவு நிறுவனங்கள், மின்னணு வர்த்தக  நிறுவனங்கள், பிரதமரின் பண்ணாயிலிருந்து வெளிநாடு வரையிலான தொலைநோக்கை செயல்படுத்துவதற்கான ஒரு தளமாகும்.  மாநாட்டில் 21 குழு உறுப்பினர்கள்,  நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் 120 கைத்தறி பயனாளிகள், நெசவாளர் சேவை மையங்கள், சுமார் 25 மாநில அரசுகள் என கிட்டத்தட்ட 250 பங்குதாரர்கள் கலந்துகொள்வார்கள். ஜவுளி அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் (கைத்தறி, பட்டு & ஜவுளி) மற்றும் அதிகாரிகள். கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கான சிறந்த நடைமுறைகள், புதுமைகள் மற்றும் உத்திகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், பல்வேறு பங்குதாரர்கள் ஒன்றிணைவதற்கும் ஒரு தளமாகச் செயல்படுவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த கைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்கும் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் வளர்ச்சி இயந்திரமாக செயல்படும் அபரிமிதமான ஆற்றலுடன் கைத்தறி துறையை ஒரு முக்கிய துறையாக மேம்படுத்தவும் இது உதவும். தொடக்க விழாவிற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

Read More »

மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2025 ஜனவரி 23 அன்று ஷில்லாங்கில் கால்நடை மாநாட்டை தொடங்கி வைக்கிறார்

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையானது 2025 ஜனவரி 23-24 தேதிகளில் மேகாலயாவின் ஷில்லாங்கில் “வடகிழக்கு இந்தியாவில் கால்நடைத் துறையின் முழுமையான வளர்ச்சிக்கான உரையாடல்” என்ற கருப்பொருளில் ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்  திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், தலைமை விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடைப் …

Read More »

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு – நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, நாளை 2025 ஜனவரி 20 புதுதில்லியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர், ஷோபா கரந்தலஜே  தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா ஆகியோரும் இந்த கருத்தரங்கின் தொடக்க அமர்வில் கலந்து …

Read More »

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் உள்ள தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தில் புதிய கட்டடங்களை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை திறந்து வைக்கிறார்

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் தேசிய மனநல மறுவாழ்வு நிறுவன வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிர்வாகம், கல்வி மற்றும் விடுதிக் கட்டடங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை திறந்து வைக்கிறார். மத்தியப் பிரதேச அமைச்சர்கள் திரு கரண் சிங் வர்மா (வருவாய்), திரு நாராயண் சிங் குஷ்வாஹா (சமூக நீதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்), திரு அலோக் சர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் …

Read More »

உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025-ஐ பிரதமர் நாளை(ஜனவரி 17) தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான கண்காட்சியான உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025-ஐ (பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025) பிரதமர்  திரு நரேந்திர மோடி நாளை (17 ஜனவரி 2025) காலை 10:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார். இந்தக் கண்காட்சி 2025 ஜனவரி 17 முதல் 22 வரை மூன்று தனித்தனி இடங்களில் நடைபெறும்: புது தில்லியில் உள்ள பாரத் மண்டபம், யஷோபூமி, கிரேட்டர் …

Read More »

குஜராத் மாநிலம் வாத்நகரில் உள்ள தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம், பிரேர்னா வளாகம், விளையாட்டு வளாகம் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாளை திறந்து வைக்கிறார்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் வாத்நகரில் உள்ள தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம், பிரேர்னா வளாகம் மற்றும் விளையாட்டு வளாகத்தை நாளை (2025 ஜனவரி 16-ம் தேதி) திறந்து வைக்கிறார். இந்த தருணத்தில், பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்கிறார்.  வாத்நகரில் அமைக்கப்பட உள்ள பாரம்பரிய வளாக மேம்பாட்டுத் திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாடு, அழகுபடுத்தல் திட்டம் ஆகியவற்றின் துவக்க நிகழ்ச்சிக்கும் அமைச்சர் தலைமை …

Read More »

கால்நடைப் பொருளாதாரத்தை மாற்றியமைத்தல்: புனேவில் நாளை மெகா “தொழில்முனைவு மேம்பாட்டு மாநாட்டைத்” தொடங்கி வைக்கிறார், மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மகாராஷ்டிராவின் புனேவில் 2025 ஜனவரி 13 அன்று “தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தல்: கால்நடை பொருளாதாரங்களை மாற்றியமைத்தல்” என்ற கருப்பொருளில் தொழில்முனைவு மேம்பாட்டு மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. இந்த மாநாட்டில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் …

Read More »