பிரதமர் திரு நரேந்திர மோடியும் சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸும் லிமாசோலில் சைப்ரஸ் – இந்தியா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றம் …
Read More »இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 17வது பதிப்பு இன்று மங்கோலியாவின் உலான்பாதரில் நிறைவடைந்தது. பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், செயல்பாட்டு தளவாடங்கள் மற்றும் உத்திசார் செயல்பாடுகளின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங் ஆகியோர் நிறைவு விழாவில் பங்கேற்றனர். அருணாச்சல ஸ்கவுட்ஸ் பட்டாலியனின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுடன் மொத்தம் 45 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு, இரண்டு வார காலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு …
Read More »மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் விரிவான அரசு மற்றும் தொழில்துறையினர் உடனான பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறார்
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் ஸ்வீடன் அரசின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளில் அவர் ஈடுபட்டார். அவரது இந்தப் பயணம் இருதரப்பு பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீட்டு திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டதாகும். அமைச்சர் …
Read More »பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானியுடன் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்மட்ட அளவிலான சந்திப்பை நடத்தினார்
இத்தாலியின் தொழில் உற்பத்தி மையமான பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானியுடன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்நிலை சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார். 2025 ஜூன் 5 அன்று நிறைவடைந்த இத்தாலி பயணத்தின் போது பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா – இத்தாலி கூட்டு ஆணையத்தின் 22-வது அமர்வுக்கு இருதலைவர்களும் கூட்டாகத் தலைமை தாங்கினர். ஆக்கப்பூர்வமான …
Read More »உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு தளம் 2025 இல் உலகளாவிய பேரிடர் மீள்தன்மை மற்றும் பொது சுகாதாரத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது
உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு தளம் (GPDRR) 2025-ஐ முன்னிட்டு ஜெனீவாவில் இன்று நடைபெற்ற ஜி20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழு வட்டமேசை மாநாட்டில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா பங்கேற்றார். கலந்துரையாடல்களின் போது, வளர்ச்சித் தேவைகளுடன் பொருளாதாரத் திறனை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு முயற்சிகளை முன்னேற்றுவதில் ஜி20-இன் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய சவால்களுக்கு எதிராக …
Read More »இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான அரசு முறை இத்தாலி பயணத்தை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கியுள்ளார்
இத்தாலிக்கான அரசுமுறை பயணத்தை மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கினார். 2025 ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் அவர் இத்தாலியில் பயணம் மேற்கொள்வார். இந்தியா-பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிரான்சில் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து அவர் தற்போது இத்தாலி சென்றுள்ளார். இந்தப் பயணம் முக்கியமான ஐரோப்பிய பங்குதாரர்களுடன் உத்திசார் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதிலும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும் இத்தாலியுடன் …
Read More »புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலிய துணைப் பிரதமருடன் இருதரப்பு பேச்சு நடத்தினர்
புதுதில்லியில் 2025 ஜூன் 04 அன்று ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லஸுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சு நடத்தினார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை இரண்டு அமைச்சர்களும் கடுமையாகக் கண்டித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காப்புக்காக தாக்குதல் தொடுக்கும் இந்தியாவின் உரிமையை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் …
Read More »13-வது மலேசியா-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் கோலாலம்பூரில் நடைபெற்றது
மலேசியா-இந்தியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 13-வது கூட்டம் 2025 பிப்ரவரி 19-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் திரு லோக்மான் ஹக்கீம் பின் அலி ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். அண்மையில் இரு நாட்டு ஆயுதப் படைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு குறித்து இருதரப்பும் மகிழ்ச்சி தெரிவித்தன. பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து …
Read More »இந்திய – ஐக்கிய அரபு அமீரிம் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி 3 ஆண்டுகள் நிறைவடைகிறது
இந்திய-ஐக்கிய அரபு அமீரகம் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ) கையொப்பமிடப்பட்டு 2025 பிப்ரவரி 18 ஆம் தேதி மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. சி.இ.பி.ஏ என்பது ஒரு முழுமையான மற்றும் ஆழமான ஒப்பந்தமாகும், இது 18 பிப்ரவரி 2022 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்இடையே ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டில் கையெழுத்தானது. …
Read More »இந்தியா – கத்தார் கூட்டறிக்கை
இந்தியப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, 2025 பிப்ரவரி 17-18 தேதிகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். மேதகு அமீருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் வந்திருந்தது. மேதகு அமீர், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். பிப்ரவரி 18 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையின் முகப்பில் இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் திரு …
Read More »
Matribhumi Samachar Tamil