பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், மத்திய அரசு தொடர்ந்து உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பன வழிமுறைகள நெறிப்படுத்தி, அனைவருக்கும் அவை கிடைக்கும் வகையில் செய்து வருகிறது எனவும் இதனால் மக்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா கூறியுள்ளார். மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) ஏற்பாடு செய்த 15-வது இந்திய உறுப்பு தான தின நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு நட்டா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பொறுப்பு செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா மற்றும் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் சுனிதா சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உறுப்பு மற்றும் திசு தானத்தை ஊக்குவிக்கும் நோக்கில் , ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் ” அங்தானம்- ஜீவன் சஞ்சீவனி இயக்கம் ” என்ற தேசிய இயக்கத்தின் கீழ், 15-வது இந்திய உறுப்பு தான தினம் கொண்டாடப்பட்டது . இந்த இயக்கம், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் அவசியத்தையும், கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களை நீக்குவதையும், மக்கள் உறுப்பு தானத்திற்கு உறுதியளிக்க ஊக்குவிப்பதையும் வலியுறுத்துகிறது. உறுப்பு தானத்தின் …
Read More »
Matribhumi Samachar Tamil