குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரம்ம குமாரிகள் சாந்தி சரோவர் அமைப்பின் 21-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இன்று (டிசம்பர் 20, 2025) ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பாரதத்தின் காலத்தால் அழியாத ஞானம்: அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதைகள்’ என்ற மாநாட்டில் உரையாற்றினார். அதில் பேசிய குடியரசுத் தலைவர், உலக சமூகம் எண்ணற்ற மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது என்றார். இந்த மாற்றங்களுடன், மனநலப் பிரச்சினைகள், சமூக மோதல்கள், சுற்றுச்சூழல் சமநிலையின்மை மற்றும் மனித விழுமியங்களின் சிதைவு போன்ற பல கடுமையான சவால்களையும் நாம் எதிர்கொள்கிறோம். இந்தச் சூழ்நிலையில், மாநாட்டின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானதாக உள்ளது. பொருள்சார் வளர்ச்சி மட்டுமே மகிழ்ச்சியையும் அமைதியையும் தராது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அக நிலைத்தன்மை, உணர்வுகள் மற்றும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவை அவசியமானவை என்றார் அவர். இந்தியாவின் பழங்கால முனிவர் பாரம்பரியம் நமக்கு உண்மை, அகிம்சை மற்றும் அமைதியான சகவாழ்வு என்ற செய்தியை வழங்கியுள்ளது என்று குடியரசுத் தலைவர் …
Read More »
Matribhumi Samachar Tamil