2025-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு பிரதீப் குமார் தாஸ், அனைத்து தொழிலாளர்களிடமும் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். அந்நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் டாக்டர் பிஜய் குமார் மொஹந்தி, தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி திரு அஜய் குமார் சஹானி மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான நிதியுதவி குறித்த நடவடிக்கைகளில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நம்பிக்கை கொண்டுள்ளதாக திரு தாஸ் தெரிவித்துள்ளார். பசுமை அமோனியா, நீர்மின் திட்டங்கள், சூரிய சக்தி உற்பத்திக்கான தகடுகள் பிரதமரின் வேளாண் எரிசக்தி பாதுகாப்பு, மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தி திட்டங்களுக்கு சந்தை ஆதரவை வழங்குவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் செயல்பாட்டை அவர் எடுத்துரைத்தார். இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்க நடவடிக்ககள் குறித்து எடுத்துரைத்த திரு தாஸ், அந்நிய செலாவணி நிதியுதவி மூலம் பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான உபகரணங்கள் தயாரிப்பதை ஊக்குவிக்கிறது என்று கூறினார். வீடுகளின் மேற்கூரைகளில் சூரிசக்தி தகடுகள் அமைக்கும் பிரதமரின் திட்டம், பிரதமரின் வேளாண் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் சில்லறை வர்த்தகத்தை மேம்படுத்துவதிலும் மின்சார வாகனங்கள், எரிசக்தி சேமிப்பு, பசுமை தொழில்நுட்பங்கள், திறன் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வளர்ந்து வரும் பிரிவுகளிலும் கவனம் செலுத்தும்.
Read More »புத்தொழில்களின் தேசம் இந்தியா – உலகளாவிய தொழில்முனைவின் எதிர்கால மையம்
உலகளவில் மிகவும் துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்புகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. 3-வது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா தனது இடத்தைப் பெற்றுள்ளது. 100+ க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன், இந்திய புத்தொழில் சூழல், புதுமை, தொழில்முனைவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. இந்தியாவில் 73,000 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநர் உள்ளார். அவை ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது அரசால் ஆதரிக்கப்படும் 1,57,066 புத்தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதியாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் தொழில்முனைவோர் உணர்வு ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி போன்ற நகரங்கள் …
Read More »அதிநவீன கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உயர்நிலை தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுமாறு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் வலியுறுத்தல்
செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற உயர்நிலை தொழில்நுட்பங்களில், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப ஆழமான திறனைப் பெற வேண்டும். உயர்நிலையிலான அதி நவீன கண்டுபிடிப்புகளில்இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இதனை அவர்கள் மேற்கொள் வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். டிசம்பர் 19 அன்று தில்லி ஐஐடியில் இந்திய தேசிய பொறியியல் அகாடமியின் ஆண்டு மாநாட்டின் தொடக்க …
Read More »
Matribhumi Samachar Tamil