Saturday, December 06 2025 | 04:49:14 PM
Breaking News

Tag Archives: issued

தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ் அனுமதிக்கப்படும் நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த பரிந்துரைகளை ட்ராய் வெளியிட்டுள்ளது

தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ் அனுமதிக்கப்படும் நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. இதன்படி, வணிக அமைப்புடன் நேரடி ஒப்பந்தம் செய்துகொள்வதற்குப் பதிலாக தொலைத்தொடர்பு சட்டம் 2023, பிரிவு -3 (1)(b)-ன் கீழ், நெட்வொர்க் அங்கீகார அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விரிவான விதிமுறைகளை தொலைத்தொடர்பு சட்டம் 2023, பிரிவு -3 (1)(b)-ன் …

Read More »

பிரான்ஸ், அமெரிக்க பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

அதிபர் மேக்ரோனின் அழைப்பையடுத்து, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சில் பயணம் மேற்கொள்கிறேன். பாரிஸில், உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டமான செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டில் இணைத்தலைமை தாங்க நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். அங்கு புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் பரந்த அளவிலான பொது நன்மையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருக்கிறோம். எனது பயணம் …

Read More »

குவைத் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை

“குவைத் அரசின் அமீர் திரு ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பை ஏற்று நான் குவைத்துக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்குகிறேன். பல தலைமுறைகளாக குவைத்துடனான வரலாற்று தொடர்பை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். நாம் வலுவான வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு நாடுகள் மட்டுமல்ல. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்களையும் கொண்டிருக்கிறோம். குவைத் அமீர், பட்டத்து இளவரசர், குவைத் பிரதமர் ஆகியோரை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். நமது மக்கள், பிராந்தியம் ஆகியவற்றின் நலனுக்காக எதிர்கால ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ள இந்திய வம்சாவளியினரை குவைத்தில் சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். வளைகுடா பிராந்தியத்தின் முதன்மையான விளையாட்டு நிகழ்வான அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த குவைத் தலைமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டுச் சிறப்பு, பிராந்திய ஒற்றுமை ஆகியவற்றுக்கான இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்தப் பயணம், இந்தியா – குவைத் மக்களுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.”

Read More »

தவறான விளம்பரம் செய்த 45 பயிற்சி மையங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் பிரிவு-10-ன் கீழ், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. இது நுகர்வோரின் உரிமைகளை மீறுதல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், பொதுமக்கள், நுகர்வோரின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துகிறது. 2024 நவம்பர், 13 அன்று, “பயிற்சித் துறையில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள், 2024”-ஐ வெளியிட்டுள்ளது, இது பயிற்சி மையங்கள் பொருட்கள் அல்லது சேவையின் …

Read More »

இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

மேதகு அதிபர் அனுர குமார திசநாயக அவர்களே, இரு நாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வாழ்த்துகள்! இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த …

Read More »