Sunday, December 07 2025 | 02:51:08 AM
Breaking News

Tag Archives: Jammu and Kashmir

பிரதமரின் வருகைக்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் செனாப் பாலத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

ஜம்மு & காஷ்மீரில் மேம்படுத்தப்பட்ட இணைப்புக்கான ₹46,000 கோடி மதிப்பிலான தொலைநோக்குப் பார்வை கொண்ட முக்கிய திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டியுள்ளார், இவை பிராந்திய இணைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, ஜம்மு & காஷ்மீரின் முதலமைச்சர், உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். செனாப் ரயில் பாலம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் …

Read More »

ஜம்மு-காஷ்மீரின் கத்துவாவில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் திட்டங்கள்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீரில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து குடிநீர் திட்டங்களையும் திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். அங்குள்ள கத்துவாவின் ஜஸ்ரோட்டா கிராமத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஏழு குடிநீர் விநியோகத் திட்டங்களை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். 25.31 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டங்களால், ஜஸ்ரோட்டா, ராக் ஹோஷியாரி, பட்யாரி, சக்தா சக், பதோலி சார்பாட், மங்க்தியான் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள 2584 வீடுகளை உள்ளடக்கிய 15,881  பேர் பயனடைவார்கள் என்று அவர் கூறினார். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கத்துவா மாவட்டத்தில் 1369.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 303 குடிநீர் வழங்கல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து தீர்க்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் முதல் 100 நாட்களில் தமது நாடாளுமன்றத் தொகுதியில் செய்யப்பட்ட பணிகளை அமைச்சர் விவரித்தார். தற்போதைய அரசு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சேவை செய்வதில் ‘முழு அரசு’ அணுகுமுறையுடன் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், வாழ்வாதாரங்களை அதிகரிப்பதற்கும் சுற்றுலாவின் திறனை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், இப்பகுதியில் பசோஹ்லி, மந்தாலியா போன்ற இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். உதம்பூர் மாவட்டத்தின் மன்சர் பகுதி சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார். வரும் காலங்களில், கத்துவா மாவட்டம் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய மையமாக மாறும் என்றும், உள்ளூர் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான வழிகள் அதிகரிக்கும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஜம்மு காஷ்மீர் ஜல்சக்தி அமைச்சர் திரு ஜாவேத் அகமது ராணா, ஜல்சக்தித் துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Read More »

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்த உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து புதுதில்லியில் இன்று நடைபெற்ற உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும், கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து …

Read More »

ஜம்மு-காஷ்மீரில் புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் பிராந்தியத்தில் புத்தொழில்களுக்கான ஒத்துழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஜம்மு காஷ்மீர் கனெக்ட்” என்ற சிறப்பு புத்தொழில் மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சந்தை இணைப்புகள், நிதி நெட்வொர்க்குகள் மற்றும் சர்வதேச விரிவாக்க …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்

ஜம்மு காஷ்மீரில் சோனமார்க் பகுதியில அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  “சவால்கள் இருந்த போதிலும், உறுதியான  அரசின் நடவடிக்கைகள் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தொழிலாளர்களின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, தடைகளை சமாளித்து …

Read More »

சுரங்கப்பாதை திறப்பு விழாவிற்காக ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் வருவதை நான ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்: பிரதமர்

சுரங்கப்பாதை திறப்பு விழாவிற்காக தாம் ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கண்ட சுரங்கப்பாதை திறப்புவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி எழுதியிருப்பதாவது: “ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க்கில் சுரங்கப்பாதை திறப்பு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சுற்றுலா மற்றும் உள்ளூர் …

Read More »

ஜம்மு-காஷ்மீருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் போக்குவரத்து இணைப்பு, ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு

பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தைக் காணொலி  மூலம் தொடங்கி வைத்ததன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் ரெயில்வேயில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்த முக்கிய நிகழ்வில், அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தப் பகுதியில் …

Read More »

ஜம்மு காஷ்மீரின் ராம்பனில் பொது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்- மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ராம்பனில் நடந்த பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். மக்கள் குறைகளை டாக்டர் ஜிதேந்திர சிங் பொறுமையாகக் கேட்டு, ஒவ்வொரு விஷயத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கினார். ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க கடந்த பத்தாண்டுகளில் அரசு பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று டாக்டர் …

Read More »

குடியரசுத் துணைத் தலைவர் ஜம்மு பயணம்

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று ஒரு நாள் பயணமாக ஜம்மு (ஜம்மு & காஷ்மீர்) செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, மாத்ரிகா அரங்கத்தில் எஸ்.எம்.வி.டி.யு வளாகத்தில் நடைபெறும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர்  பங்கேற்கிறார். மாதா வைஷ்ணோ தேவி கோயில் மற்றும் பைரோன் பாபா மந்திர் ஆகியவற்றிற்கும் குடியரசுத் துணைத் தலைவர் …

Read More »