குவைத்தின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா பிரதமருக்கு இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார். குவைத் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையிலான நீண்டகால நட்பு, , குவைத்தில் உள்ள இந்திய சமூகம் மற்றும் 1.4 பில்லியன் இந்திய மக்களுக்கு பிரதமர் இந்த விருதை அர்ப்பணித்தார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத் நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பயணத்தை மேற்கொண்டதன் மூலம் இவ்விருது வழங்கப்படுவது விழாவுக்கு ஒரு சிறப்புப் பெருமையைச் சேர்த்தது. இந்த விருது 1974-ல் நிறுவப்பட்டது. அதிலிருந்து, உலக அளவில் குறிப்பிட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Read More »குவைத் அமீரை பிரதமர் சந்தித்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் அமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவைச் சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். பயான் அரண்மனையை வந்தடைந்த பிரதமருக்கு , குவைத் பிரதமர் அஹ்மத் அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான வரலாற்று மற்றும் நட்புறவுகளை நினைவுகூர்ந்த தலைவர்கள், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் தங்கள் முழு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தச் சூழலில், இருதரப்பு உறவை ‘ உத்திபூர்வ கூட்டாண்மை’யாக உயர்த்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். குவைத்தில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலம் வாய்ந்த இந்திய சமூகத்தின் நல்வாழ்வை உறுதி செய்ததற்காக அமீருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். குவைத்தின் வளர்ச்சியில் பெரிய மற்றும் துடிப்பான இந்திய சமூகத்தின் பங்களிப்பிற்கு அமீர் பாராட்டு தெரிவித்தார். குவைத் தனது தொலைநோக்குப் பார்வை 2035-ஐ நிறைவேற்றும் புதிய முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இந்த மாத தொடக்கத்தில் ஜிசிசி உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அமீருக்கு வாழ்த்து தெரிவித்தார். அரேபிய வளைகுடாக் கோப்பையின் தொடக்க விழாவில் நேற்று ‘கெளரவ விருந்தினராக’தம்மை அழைத்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். குவைத் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் மதிப்புமிக்க பங்குதார நாடாக இந்தியாவின் பங்கிற்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு, பிரதமரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அமீர் கூறினார். குவைத் தொலைநோக்குப் பார்வை 2035-ஐ நனவாக்குவதில் இந்தியாவின் பெரும் பங்கு மற்றும் பங்களிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அமீர் கூறினார். இந்தியாவுக்கு வருமாறு அமீருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்
Read More »குவைத்தின் பட்டத்து இளவரசரை பிரதமர் சந்தித்தார்
குவைத் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 2024 செப்டம்பரில் ஐநா பொதுச்சபை அமர்வின்போது , பட்டத்து இளவரசரை சந்தித்ததை பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார். குவைத் உடனான இருதரப்பு உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். இருதரப்பு உறவுகள் சிறப்பாக முன்னேறி வருவதை ஒப்புக் கொண்ட தலைவர்கள், ஒரு உத்திபூர்வ கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்டதை வரவேற்றனர். ஐ.நா மற்றும் பிற பலதரப்பு மன்றங்களில் இரு தரப்புக்கும் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை அவர்கள் வலியுறுத்தினர். குவைத் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா-ஜிசிசி உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். பரஸ்பரம் வசதியான தேதியில் இந்தியாவிற்கு வருகை தருமாறு குவைத்தின் பட்டத்து இளவரசருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். குவைத்தின் பட்டத்து இளவரசர், பிரதமரைக் கௌரவித்து விருந்து அளித்தார்.
Read More »ஒப்பந்தங்களின் பட்டியல்: பிரதமரின் குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)
வ.எண் புரிந்துணர்வு ஒப்பந்தம்/உடன்படிக்கை குறிக்கோள் 01 பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை நிறுவனப்படுத்தும். பயிற்சி, பணியாளர்கள் மற்றும் நிபுணர்கள் பரிமாற்றம், கூட்டு பயிற்சிகள், பாதுகாப்பு தொழில்துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்களாகும். 02 இந்தியா மற்றும் குவைத் இடையே 2025-2029 ஆண்டுகளில் கலாச்சார பரிமாற்ற திட்டம் . கலை, இசை, நடனம், இலக்கியம், நாடகம் ஆகியவற்றில் கலாச்சார பரிமாற்றங்கள், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு, கலாச்சாரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றிற்கு கலாச்சார பரிமாற்ற திட்டம் வழிவகுக்கும். 03 விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்கான திட்டம் (2025-2028) இந்தியா மற்றும் குவைத் இடையேயான விளையாட்டுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், விளையாட்டுத் தலைவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, விளையாட்டுத் துறையில் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களில் பங்கேற்பது, விளையாட்டு மருத்துவம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு ஊடகம், விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வது ஆகியவை இதில் அடங்கும். 04 சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் குவைத் உறுப்பினர். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, கூட்டாக சூரிய சக்தியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. உறுப்பு நாடுகளுக்கு குறைந்த கார்பன் வளர்ச்சிப் பாதைகளை உருவாக்க உதவும் வகையில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அளவிடுவதற்கான முக்கிய பொதுவான சவால்களை இது நிவர்த்தி செய்கிறது.
Read More »குவைத் பிரதமரை, பிரதமர் சந்தித்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் அரசியல், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் வலியுறுத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள், மருந்து, உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய குவைத் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய குழுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். பாரம்பரிய மருத்துவம் மற்றும் விவசாய ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். கூட்டுறவுக்கான கூட்டு ஆணையத்தில் (ஜேசிசி) சமீபத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர், இதன் கீழ் சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள், தொடர்பான ஏற்கனவே உள்ள கூட்டுப் பணிக்குழுக்களுடன், கூடுதலாக வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் புதிய கூட்டுப் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பிறகு தலைவர்கள் முன்னிலையில், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்டன. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கலாச்சார பரிமாற்ற திட்டம், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான நிர்வாகத் திட்டம் மற்றும் குவைத் சர்வதேச சோலார் கூட்டணியில் இணைவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும். இந்தியா வருமாறு குவைத் பிரதமருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Read More »குவைத் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
“குவைத் அரசின் அமீர் திரு ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பை ஏற்று நான் குவைத்துக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்குகிறேன். பல தலைமுறைகளாக குவைத்துடனான வரலாற்று தொடர்பை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். நாம் வலுவான வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு நாடுகள் மட்டுமல்ல. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்களையும் கொண்டிருக்கிறோம். குவைத் அமீர், பட்டத்து இளவரசர், குவைத் பிரதமர் ஆகியோரை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். நமது மக்கள், பிராந்தியம் ஆகியவற்றின் நலனுக்காக எதிர்கால ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ள இந்திய வம்சாவளியினரை குவைத்தில் சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். வளைகுடா பிராந்தியத்தின் முதன்மையான விளையாட்டு நிகழ்வான அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த குவைத் தலைமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டுச் சிறப்பு, பிராந்திய ஒற்றுமை ஆகியவற்றுக்கான இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்தப் பயணம், இந்தியா – குவைத் மக்களுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.”
Read More »குவைத்தில் 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியைச் சந்திப்பதை பிரதமர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இன்று குவைத்தில் உள்ள 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான திரு மங்கள் சைன் ஹந்தா ஜியை, புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான உரையாடலின் போது சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் பதிலளித்துள்ளார். சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “நிச்சயமாக! நான் இன்று குவைத்தில் திரு மங்கள் சைன் ஹந்தா அவர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
Read More »குவைத்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் இதயபூர்வமான வரவேற்பு குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்
குவைத்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர் மக்கள் அளித்த இதயபூர்வமான வரவேற்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் இந்தியாவுடனான அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். குவைத்தில் இன்று பிற்பகலில் பிரதமர் திரு நரேந்திர மோடிதிரு மங்கள் சைன் ஹந்தா ஜியை சந்தித்ததில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “குவைத்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர் மக்களிடம் இருந்து இதயபூர்வமான வரவேற்பு கிடைத்தது. இந்தியாவுடனான அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. அவர்களின் உற்சாகத்திற்கும், நமது நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் நன்றி . “இன்று மதியம் குவைத்தில் திரு மங்கல் சைன் ஹந்தா ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியாவுக்கான அவரது பங்களிப்பையும், இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது ஆர்வத்தையும் நான் பாராட்டுகிறேன்’’.
Read More »குவைத்தில் தொழிலாளர் முகாமைப் பிரதமர் பார்வையிட்டார்
குவைத் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் திரு நரேந்திர மோடி குவைத்தின் மினா அப்துல்லா பகுதியில் சுமார் 1500 இந்தியர்கள் உள்ள தொழிலாளர் முகாமுக்குச் சென்றார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் நல்வாழ்வு குறித்துக் கேட்டறிந்தார். வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் நலனுக்குப் பிரதமர் அளிக்கும் முக்கியத்துவத்தின் அடையாளமாக இந்த தொழிலாளர் முகாமுக்கு அவரது வருகை அமைந்தது. கடந்த சில ஆண்டுகளில், வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக இ-மைக்ரேட் தளம், மதாத் தளம், மேம்படுத்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதுகாப்புத் திட்டம் (பிரவாசி பாரதிய பீமா யோஜனா) போன்ற பல தொழில்நுட்ப அடிப்படையிலான முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.
Read More »