Wednesday, December 31 2025 | 10:26:59 AM
Breaking News

Tag Archives: Madhya Pradesh

மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சுற்றுலாத் தலத் திட்டத்தை மத்திய இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் ஆய்வு செய்தார்

சுற்றுலாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பொது மக்கள் ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் (என்ஐபிசிசிடி) இந்தூர் வளாகத்தில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி …

Read More »

பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம்

பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார் அசாம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23 அன்று மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பிப்ரவரி 24 அன்று காலை 10 மணியளவில், போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, அவர் பீகாரின் பாகல்பூருக்குச் செல்கிறார். …

Read More »

மத்தியப் பிரதேசத்தில் 3 புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கம் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் ஆய்வு

மத்தியப் பிரதேசத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை ஆய்வு செய்வதற்காக இன்று புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு  மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை தாங்கினார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலை வகித்தார். மத்தியப் பிரதேசத்தில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், வழக்குத் தொடுத்தல் மற்றும் தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் அமலாக்கம் மற்றும் தற்போதைய நிலை குறித்து இந்தக் …

Read More »

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் உள்ள தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தில் புதிய கட்டடங்களை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை திறந்து வைக்கிறார்

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் தேசிய மனநல மறுவாழ்வு நிறுவன வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிர்வாகம், கல்வி மற்றும் விடுதிக் கட்டடங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை திறந்து வைக்கிறார். மத்தியப் பிரதேச அமைச்சர்கள் திரு கரண் சிங் வர்மா (வருவாய்), திரு நாராயண் சிங் குஷ்வாஹா (சமூக நீதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்), திரு அலோக் சர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் …

Read More »

மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, இதற்காக …

Read More »

முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் கென்-பேட்வா நதிகள் இணைப்புக்கான தேசிய திட்டத்திற்கு பிரதமர் டிசம்பர் 25 அன்று அடிக்கல் நாட்டுகிறார்

முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். மதியம் 12:30 மணியளவில், கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கியும் வைக்கிறார். தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிகளை இணைக்கும் தேசியத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் …

Read More »