Tuesday, December 09 2025 | 04:09:44 AM
Breaking News

Tag Archives: Mahakumbh Mela

மஹாகும்பமேளாவில் பக்தர்களுக்கு தடையற்ற வங்கிச் சேவைகளை வழங்கும் இந்திய அஞ்சல் வங்கி

மத்திய அரசு நிறுவனமான இந்தியா அஞ்சல் வங்கி, பிரயாகராஜில் நடைபெறும் மஹாகும்பமேளா-2025-ல் கோடிக்கணக்கான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு தடையற்ற டிஜிட்டல் வங்கிச் சேவைகளை வழங்குவதில்  பெரும் பங்காற்றி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மீக ஒன்று கூடலான, மஹாகும்பமேளாவானது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன், இந்திய அஞ்சல் வங்கி, அனைவருக்கும் விரிவான வங்கிச் சேவைகள் கிடைக்க உதவுகிறது. நிதி பரிவர்த்தனைகளின் வசதி மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மஹாகும்பமேளா முழுவதும் 5 முக்கிய இடங்களில் …

Read More »

மகாகும்பமேளா 2025: 233 குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறது

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்க  பெரும் அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா பகுதியில் மொத்தம் 233 குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை 24 மணி நேரமும் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுகின்றன. இந்தக் குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம், யாத்ரீகர்கள் தினமும் தூய்மையான ஆர்ஓ (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) குடிநீரைப் பெறுகிறார்கள். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 …

Read More »

மகாகும்பமேளாவில் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கண்காட்சியை தலைமை இயக்குநர் ஆய்வு செய்தார்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள்  தொடர்பகத்தின் (சிபிசி) தலைமை இயக்குநர் திரு யோகேஷ் குமார் பவேஜா, பிரயாக்ராஜின் மஹாகும்பில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜன்பகிதாரி சே ஜன்கல்யான்’ எனும் மல்டிமீடியா கண்காட்சியைப் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசின் திட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியைப் பார்வையிட்ட பிறகு, தலைமை இயக்குநர் , இந்தக் கண்காட்சி இந்திய அரசின் திட்டங்கள் மற்றும் …

Read More »

பிஎஸ்என்எல்-லின் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகள், பிரயாக்ராஜில் மஹாகும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் வழங்குகின்றன

தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நம்பகமான இணைப்பை உறுதி செய்வதற்காக, 2025 மகாகும்பமேளாவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஎஸ்என்எல்  மேளா பகுதியில் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைத்துள்ளது, அங்கு பக்தர்கள்  தடையில்லா தகவல் தொடர்பு சேவைகளைப் பெறுகின்றனர். கும்பமேளாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு அந்தந்த வட்டங்களில் இருந்து இலவச சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாத்ரீகர் யாரேனும் தங்கள் சிம் கார்டை தொலைத்துவிட்டால். மேளா பகுதியிலேயே நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களில் இருந்தும் சிம் கார்டுகளை வழங்க பிஎஸ்என்எல் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம், யாத்ரீகர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எளிதாக தொடர்பில் இருக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.  பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சிம்கார்டுகள் வழங்கப்படுவதால், பக்தர்கள் மட்டுமின்றி, அங்கு நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரும் பயனடைகின்றனர். மகர சங்கராந்தி மற்றும் மௌனி அமாவாசை அன்று அமிர்த நீராடல்களின்  போது, தகவல் தொடர்பு சேவைகளின் தரம் அப்படியே இருந்தது என்றும், அதிக கூட்டம் இருந்தபோதிலும், நெட்வொர்க் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், பிரயாக்ராஜ் வணிகப் பகுதிக்கான பிஎஸ்என்எல்- இன் முதன்மை பொது மேலாளர் திரு பி.கே.சிங் குறிப்பிட்டார்.

Read More »