Friday, December 05 2025 | 06:52:41 PM
Breaking News

Tag Archives: Mann ki Baat

மனதின் குரல் நிகழ்ச்சியின் 128-வது அத்தியாயத்தில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.11.2025) மனதின் குரல் நிகழ்ச்சியின் 128-வது அத்தியாயத்தில் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்களைப் படங்களுடன் சமூக வலைதளத்தில் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தனித்தனி பதிவுகளில் கூறியிருப்பதாவது: “நவம்பர் மாதம் பல உத்வேகங்களைக் கொண்டு வந்துள்ளது” “உணவு தானிய உற்பத்தியில் இந்தியா ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.” “புனேவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு, இஸ்ரோ ஏற்பாடு செய்த தனித்துவமான ட்ரோன் போட்டியில் எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை பிரதமர் திரு நரேந்திர எடுத்துரைத்தார்.” “இந்தியா முழுவதும் ஒரு இனிமையான புரட்சி!” “ஐரோப்பாவிலிருந்து சவுதி அரேபியா வரை, உலகம் கீதையை எவ்வாறு கொண்டாடுகிறது என்பதைப் பிரதமர் திரு நரேந்திர பகிர்ந்து கொண்டார்.” ” ஜாம் சாஹேப்பின் உலகம் போற்றும் அரிய பங்களிப்புகள்…” “உயர்ந்த கல்வித் தகுதி பெற்ற இளம் நிபுணர்கள் இப்போது இயற்கை விவசாயத்தை ஏற்று செயல்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” “நான்காவது காசி-தமிழ் சங்கமம் டிசம்பர் 2-ம் தேதி காசியில் உள்ள நமோ படித்துறையில் தொடங்குகிறது. காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” “ஐஎன்எஸ் மஹே இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் உள்நாட்டு வடிவமைப்பு பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது.” “உத்தராகண்டில் குளிர்கால சுற்றுலா பலரை ஈர்க்கிறது.” “பகவான் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் மீது பல நாடுகளில் உற்சாகம் காணப்படுகிறது. உலகம் முழுவதற்கும், புத்தரின் நினைவுச்சின்னங்களை அனுப்பியதற்காக அந்நாடுகளின் மக்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.” “உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்!” “விளையாட்டுகளில் இந்தியா அதிகம் சாதித்த மாதம்!” “நவம்பர் மாத்ததில் 140 கோடி இந்தியர்களும் பெருமிதம் கொள்ளும் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் சில: அயோத்தியில் தர்ம த்வஜாரோஹண விழா. பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழா. வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா. இந்தியா உலகளாவிய கப்பல் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மையமாக மாறும் நிலையை நெருங்கியது. வலிமை மற்றும் தன்னம்பிக்கையின் துடிப்பான அடையாளமான ஐஎன்எஸ் மாஹே செயல்பாட்டுக்கு வந்தது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் இன்ஃபினிட்டி வளாகத்தின் திறப்பு விழா. உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது.” “இந்தியாவின் இளைய தலைமுறையினர் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் அற்புதங்களைச் செய்து வருகின்றனர். ட்ரோன்கள் மீதான நமது இளைஞர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி இது.” “ஜம்மு காஷ்மீர் முதல் கர்நாடகா, நாகாலாந்து வரை, இந்தியாவின் விவசாயிகள் தேன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து வருகின்றனர். இந்தத் துறையில் காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.” …

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-வது அத்தியாயத்தில், 27.07.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம்.  கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன.  தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது.  சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் …

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

நாட்டுமக்களே! வணக்கம். மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன், நல்வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் யோகக்கலையின் ஆற்றல், சர்வதேச யோகக்கலை தினத்தின் நினைவலைகளால் நிரம்பியிருப்பீர்கள்!! இந்த முறையும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாடெங்கிலும், உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் சர்வதேச யோகக்கலை தினத்தின் அங்கமாக ஆனார்கள். பத்தாண்டுகள் முன்பாக இந்த தினம் தொடங்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் முந்தையதை விட மேலும் …

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 118-வது அத்தியாயத்தில், 19.01.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று 2025ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல்.  நீங்கள் அனைவரும் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள்.  ஒருஒரு முறையும் மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெறும், ஆனால் இந்த முறை, நாம் ஒரு வாரம் முன்னதாகவே, நான்காவது ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று சந்திக்கின்றோம்.  ஏனென்றால் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று நமது குடியரசுத் தினமாகும்.  நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் குடியரசுத் திருநாளுக்கான முதன்மையான நல்வாழ்த்துக்களைத் …

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 117-வது அத்தியாயத்தில், 29.12.2024 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.   இன்று மனதின் குரலில், 2025ஆம் ஆண்டு…… இதோ வந்தே விட்டது, வாயிற்கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நமது அரசியலமைப்புச்சட்டத்தின் 75ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கின்றது.  நம்மனைவருக்கும் இது மிகவும் கௌரவம்மிகு தருணமாகும்.  நமது அரசியலமைப்புச்சட்ட பிதாமகர்கள் நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கும் அரசியல்சட்டம், காலத்தின் அனைத்துக் காலகட்டங்களிலும் வெற்றிகரமாக வழிகாட்டியிருக்கிறது.  அரசியல் சட்டமானது நம்மனைவருக்கும் பாதை துலக்கும் ஒளிவிளக்காய், வழிகாட்டியாய் விளங்குகிறது.  …

Read More »