மலேசியா-இந்தியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 13-வது கூட்டம் 2025 பிப்ரவரி 19-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் திரு லோக்மான் ஹக்கீம் பின் அலி ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். அண்மையில் இரு நாட்டு ஆயுதப் படைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு குறித்து இருதரப்பும் மகிழ்ச்சி தெரிவித்தன. பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து …
Read More »தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் எஃப்எஸ்எஸ்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி ஆலோசனை: மாநிலத்தில் உணவு நிறுவனங்களில் ஆய்வுப்பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையர் திரு லால்வேனா மற்றும் அதிகாரிகளுடன் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (எஃப்எஸ்எஸ்ஏஐ) தலைமைச் செயல் அதிகாரி திரு ஜி. கமலா வர்தன ராவ் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உணவு நிறுவனங்களில் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், உணவு பரிசோதனை ஆய்வகங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார். ஆரோக்கியமான, சுகாதாரமான உணவக மையங்களை (ஃபுட் ஸ்ட்ரீட்) …
Read More »ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 111-வது செயற்குழு கூட்டம் – முக்கிய சீர்திருத்தங்கள், உறுப்பினர் சேவைகளில் மேம்பாடு குறித்து ஆலோசனை
இபிஎஃப்ஓ அமைப்பின், மத்திய அறங்காவலர் வாரியத்தின் நிர்வாகக் குழுவின் (EC) 111-வது கூட்டம் நேற்று (2025 ஜனவரி 18) புதுதில்லியில் உள்ள இபிஎஃஓ தலைமை அலுவலகத்தில் தொழிலாளர் நலன் வேலைவாய்ப்பு அமைச்சகச் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நடைபெற்றது. அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், வேலை வழங்கும் நிறுவனங்கள், ஊழியர்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் (i) மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட அமைப்பு (CITES) …
Read More »மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் மின்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது
மின்சார அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டம் 2025 ஜனவரி 16 அன்று புதுதில்லியில் மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெற்றது. இதில் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தை (RDSS) செயல்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய மின்சாரம், புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் எரிசக்தி …
Read More »அனுமதியற்ற வர்த்தகத்தைத் தடுப்பது தொடர்பான வர்த்தகப் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான குழுவின் கூட்டம் காத்மாண்டுவில் நிறைவடைந்தது
அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தைத் தடுப்பதற்கான வர்த்தகம், போக்குவரத்து ஒத்துழைப்புக்கான இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான குழுக் (IGC) கூட்டம், 2025 ஜனவரி 10, 11 தேதிகளில் காத்மாண்டுவில் நடைபெற்றது. மத்திய அரசின் வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் தலைமையில் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் அடங்கிய இந்தியக் குழுவினர் இதில் பங்கேற்றனர். நேபாள தரப்பில் நேபாள அரசின் தொழில், வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் திரு கோபிந்த பகதூர் கார்க்கி தலைமையில் …
Read More »குயெர்ன்சி நகரில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் பேரவைத் தலைவர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டின் நிலைக்குழு கூட்டத்திற்கு மக்களவைத் தலைவர் தலைமை வகிக்கிறார்
மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா 2025 ஜனவரி 07 முதல் 11-ம் தேதி வரை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, குயெர்ன்சி ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபாநாயகர் ரைட் ஹானரபிள் சர் லிண்ட்சே ஹோய்ல் அழைப்பின் பேரில் திரு பிர்லா 2025 ஜனவரி 07 முதல் 09 வரை இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ரைட் ஹானரபிள் சர் …
Read More »டிஎன்டி சமூகங்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த கூட்டம் – மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் தலைமை வகித்தார்
சீர்மரபு பிரிவினர், நாடோடி சமூகங்கள், பகுதி நாடோடி சமூகங்களின் (DNT – டிஎன்டி) நலன், மேம்பாடு குறித்து கவனம் செலுத்தும் முக்கிய கூட்டம் மத்திய சமூக நீதி – அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் புதுதில்லியில் இன்று (02.01.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே, சமூக நீதி – அதிகாரமளித்தல் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். டிஎன்டி …
Read More »பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கான கூட்டம் நிதிச்சேவைகள் துறை செயலாளர் எம்.நாகராஜு தலைமையில் நடைபெற்றது
நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களால் தீர்வு காணப்பட்ட 20 பொதுமக்கள் குறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் தங்களது குறைகள் குறித்து புகார் அளித்தவர்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நடைபெற்ற பிரகதி கூட்டத்தில் பிரதமர் அளித்த உத்தரவுகளை நிதிச்சேவைகள் …
Read More »ஜம்மு காஷ்மீரின் ராம்பனில் பொது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்- மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ராம்பனில் நடந்த பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். மக்கள் குறைகளை டாக்டர் ஜிதேந்திர சிங் பொறுமையாகக் கேட்டு, ஒவ்வொரு விஷயத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கினார். ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க கடந்த பத்தாண்டுகளில் அரசு பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று டாக்டர் …
Read More »ராம்பானில் திஷா கூட்டத்திற்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்
ஜம்மு காஷ்மீரின் ராம்பனில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டத்திற்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், 70 வயது அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் திட்டம், பிரதமரின் சக்தி வீடுகள் திட்டம், பிரதமர் …
Read More »
Matribhumi Samachar Tamil