பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட …
Read More »புதுதில்லியில் நடைபெற்ற வீர பாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற வீர பாலகர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். 3-வது வீர பாலகர் தினத்தையொட்டி கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரம் மற்றும் தியாகத்தின் நினைவாக தங்களது அரசு வீர பாலகர் தினத்தை தொடங்கியதாகக் கூறினார். இந்த நாள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நாட்டிற்கான உத்வேகம் அளிக்கும் திருவிழாவாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நாள் பல குழந்தைகள் மற்றும் இளைஞர்களை …
Read More »பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்
மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறேன். தீவிர சுதந்திரப் போராட்ட வீரராக இருந்ததுடன், அவர் தனது வாழ்நாள் முழுவதும் கல்வியின் முன்னோடியாக இருந்தார். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பு எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக …
Read More »திரு அடல் அவர்களின் 100-வது பிறந்தநாளான இன்று, நமது நாட்டிற்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பு குறித்தும், அவரது முயற்சிகள் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்தும் சில எண்ணங்களை பதிவிட்டுள்ளேன்: பிரதமர்
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி தாம் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது: “இன்று, அடல் அவர்களின் 100-வது பிறந்தநாளில், நமது தேசத்திற்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பு குறித்தும், அவரது முயற்சிகள் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்தும் சில எண்ணங்களைப் பதிவிட்டுள்ளேன்.” भारत …
Read More »புதுதில்லியில் டிசம்பர் 26 அன்று நடைபெறும் வீரபாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
இந்தியாவின் எதிர்காலத்தின் அடித்தளமாக விளங்கும் குழந்தைகளை கௌரவிக்கும் நாடு தழுவிய கொண்டாட்டமான வீரபாலகர் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 26 அன்று நண்பகல் 12 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். ‘சுபோஷித் கிராம பஞ்சாயத்து இயக்கம்” என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். ஊட்டச்சத்து தொடர்பான சேவைகளை வலுப்படுத்துவதன் மூலமும், செயலூக்கம் நிறைந்த சமூகப் பங்களிப்பை உறுதி செய்வதன் …
Read More »மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, இதற்காக …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் ‘நல் ஆளுகை’ நடைப்பயணம்’
முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளைக் குறிக்கும்வ கையில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் குஜராத்தின் வாட்நகரில் 2024 டிசம்பர் 24, அன்று 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ‘நல் ஆளுகை நடைபயணத்திற்கு’ ஏற்பாடு செய்யப்பட்டது. குஜராத் மாநில அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும், மைபாரத் தன்னார்வலர்களும் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். அங்கு நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தன்னார்வ …
Read More »நித்தி ஆயோக்கில் பிரபல பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் சந்திப்பு
2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிப்புக்காக புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நித்தி ஆயோக்கில் கலந்துரையாடினார். “உலகின் நிச்சயமற்ற காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பராமரித்தல்” என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கலந்து கொண்ட நிபுணர்களின் ஆழமான கருத்துக்களுக்கு பிரதமர் தமது உரையில் நன்றி தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் மனப்பாங்கை முற்றாக …
Read More »புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்
புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபி-யின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். முகமது ரஃபி ஒரு இசை மேதை என்றும், அவரது கலாச்சார தாக்கம், தலைமுறைகளைக் கடந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற முகமது ரஃபி சாஹபின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். அவர் ஒரு இசை மேதை. …
Read More »முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பியான முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத் தாழ்மையுடன் மரியாதை செலுத்துகிறேன். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் சேவையும் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”
Read More »
Matribhumi Samachar Tamil