Sunday, January 25 2026 | 08:22:58 AM
Breaking News

Tag Archives: Narendra Modi

ஐதராபாத்தில் அரசு பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களின் தேசிய மாநாட்டை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்

தெலங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசு பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களுக்கான தேசிய மாநாட்டை,  ஐதராபாத்தில் இன்று (டிசம்பர் 19, 2025) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய குடியரசுத்தலைவர், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், அரசியலமைப்பின் ஒரு முழுப் பகுதியையும் பணியாளர் தேர்வு ஆணையங்களுக்காகவே அர்ப்பணித்துள்ளனர் என்று கூறினார். இது மத்திய மற்றும் மாநிலங்களுக்கான பணியாளர் தேர்வாணையங்களின்  பங்கு மற்றும் செயல்பாடுகளுக்கு அவர்கள் அளித்த …

Read More »

பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார்

பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 20 பிற்பகல் 3 மணி அளவில், குவஹாத்தி செல்லும் பிரதமர், லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டடத்தைப் பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார். புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய முனையக் கட்டடம் சுமார் 1.4 லட்சம் சதுரமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இது ஆண்டுக்கு 1.3 கோடி பயணிகளை கையாளும் …

Read More »

பிரதமர் நரேந்திர மோடி – சுல்தான் ஹைதம் பின் தாரிக் சந்திப்பு

அரசுமுறைப் பயணமாக ஓமன் சென்றுள்ள இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று மஸ்கட்டில் உள்ள ராயல் அரண்மனையில் அந்நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். அரண்மனைக்கு வருகை தந்த பிரதமருக்கு ஓமன் சுல்தான் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, சிறப்பான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இந்தச் சந்திப்பு குறித்துத் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 70 ஆண்டு கால நட்புறவு: இரு நாட்டுத் தலைவர்களும் …

Read More »

பிரதமரின் ஓமன் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்

1) விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் – நெருங்கிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல். – வர்த்தகத் தடைகளைக் குறைத்து, ஒரு நிலையான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரித்தல். – பொருளாதாரத்தின் அனைத்து முக்கியத் துறைகளிலும் வாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே முதலீடுகளை அதிகரித்தல். 2) கடல்சார் பாரம்பரியம் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் – லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் …

Read More »

பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது சர்வதேச உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்

புதுதில்லி பாரத மண்டபத்தில் 2025, டிசம்பர் 19 அன்று மாலை 4:30 மணியளவில் நடைபெறும் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது சர்வதேச உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அத்துடன் இந்த நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்ற உள்ளார். ஆராய்ச்சி, நிலைப்படுத்துதல் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பு மூலம் இந்திய அறிவுசார் முறை, முக்கிய பாரம்பரிய மருத்துவ முறையை பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் துறைக்கான …

Read More »

இந்தியா – ஓமன் இடையேயான கடல்சார் வர்த்தக உறவுகள் நூற்றாண்டுகால பழமை வாய்ந்தது: பிரதமர்

இந்தியா – ஓமன் இடையேயான கடல்சார் வர்த்தக உறவுகள் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் மாண்ட்வி – மஸ்கட் இடையே வலுவான வர்த்தக பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மஸ்கட்டில் இன்று நடைபெற்ற இந்தியா – ஓமன் வர்த்தக மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அந்நாட்டுடனான 70 ஆண்டுகால தூதரக உறவுகள் இருநாடுகளுடனான பழமையான நட்புறவையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார். இரு நாடுகளுக்கு இடையேயான விரைவான …

Read More »

ஓமனில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்

ஓமன் நாட்டின் மஸ்கட்டில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பல்வேறு இந்திய பள்ளிகளை சேர்ந்த 700-க்கும் அதிகமான மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஓமன் நாட்டில் இந்திய பள்ளிகள் தொடங்கப்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவது அப்பள்ளிகளுக்கு  சிறப்பு அம்சமாகும். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவில் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களை இந்திய சமூகத்தினருக்கு தெரிவித்துக்கொள்வதாக கூறினார். …

Read More »

இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் உரையாற்றினர்

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் இன்று அம்மான் நகரில் நடைபெற்ற இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினர். இந்த மன்றத்தில் பட்டத்து இளவரசர் ஹுசைன் மற்றும் ஜோர்டான் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை ஜோர்டான் மன்னரும், பிரதமரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், இரு தரப்பிலிருந்தும் வந்திருந்த தொழிலதிபர்களை, சாத்தியக்கூறுகளையும் வாய்ப்புகளையும் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பாதையாக மாற்றிக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஜோர்டானின் தடையற்ற வர்த்தக …

Read More »

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கான பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

நான் ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறேன். இந்த 3 நாடுகளுடனும் இந்தியா பழமையான நாகரீக உறவுகளையும், விரிவான சமகால இருதரப்பு உறவுகளையும் பகிர்ந்து கொள்கிறது. முதலாவதாக ஜோர்டான் மன்னர் அப்துல்லா II ஐபின் அல் ஹூசைன் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு செல்கிறேன்.  இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது. இந்தப் …

Read More »

ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று (14.12.2025) யூத பண்டிகையான ஹனுக்காவின் முதல் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரமான இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையில் இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்துள்ள பிரதமர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் எதிரான உலகளாவிய போராட்டத்தை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “யூத பண்டிகையான ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாடிய மக்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா நிற்கிறது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது.”

Read More »